இலங்கையில் அவ்வப்போது இடம்பெறும் சம்பவங்கள் தற்செயல்கள் அல்ல, திட்டமிடப்பட்ட செயற்தொடர் என்பதை ஏறத்தாழ ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். Read the rest of this entry »
Category Archives: சமூகம்
யாழ் மண்ணில் தமிழ் – முஸ்லிம் உறவு
மீளக்கட்டியெழுப்பப்படும் யாழ் மண்ணில் தமிழ் – முஸ்லிம் உறவுகள் பற்றி சூத்திரம் இணையத்தில் வெளியான நேர்காணலின் மீள் பதிவு.
Read the rest of this entry »
இணையங்களும் இன முரண்பாடுகளும்
சமூக முன்னேற்றம் மற்றும் இன ஐக்கியம் பிளவு பட்டிருப்பதிலும் இணைந்திருப்பதிலும் இலாபமடைவோர், நாட்டமற்றோர் எனும் இரு வேறு பிரிவுகள் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அத்தனை பிரிவினரிடமும் இருக்கிறார்கள். இதில் யார்? எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதன் அடையாளம் அவரவர்களின் செயற்பாடுகளை அறிவதன் மூலம் அவரவர் அறிந்து கொள்ள வேண்டிய விடயம்.
சமீப கால ஒரு சில தமிழ் இணையங்களின் போக்குகள் குழுப்பிரிவினைகள், கொள்கைப்பிரிவினைகளைத் தாண்டி இன முரண்பாடுகளுக்கு வித்திட்டு வருவது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். Read the rest of this entry »
ஒன்றுபட்ட இலங்கை சாத்தியமாகுமா?
வெள்ளையர்கள் இருக்கும் போதே விதைக்கப்பட்ட இன வேற்றுமை , சமூக ஏற்றத்தாழ்வுகளின் விதைகள் அவர்கள் வெளியேறியதன் பின்னர் அவர்களே எதிர்பார்க்காத அறுவடையைத் தந்தது இலங்கையின் கடந்த கால வரலாறு.
இந்த வரலாற்றின் ஏக போக விளைச்சலை இனப் பிரச்சினை எனும் பூதம் ஆட்கொண்டதால் எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியாமல் நாட்டை விட்டு தூர ஓடியர்வர்கள் பல லட்சக் கணக்கில் இருக்கிறார்கள்.
இப்போது இனப் பிரச்சினை எனும் பெயரால் இடம்பெற்ற போர் ஓய்ந்துவிட்டது, இனியாவது ஒன்றுபட்ட இலங்கை சாத்தியமாகுமா? Read the rest of this entry »
கழற்றி வீச அவை செருப்பல்லவே? வடுக்கள் !
சராசரியாக ஒவ்வொரு இலங்கையரது எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிய போர் முடிந்து விட்டது, ஆனால் அதிலிருந்து சுமக்கும் வடுக்கள் எப்போது மறக்கப்படும்? – இந்தக் கேள்வி அனைத்து சமூகத்திற்கும் பொருந்தும்.
விடுதலைப் போர் என்று ஆரம்பித்தாலும் பின்நாளில் கயவர்களின் இருப்புக்கான பலி கொடுக்கும் போராக மாறிய யுத்தத்தின் வெளி முகத்துக்கு சர்வதேச அரங்கில் புதிய முகவரி கொடுத்த வரலாற்றுப் பதிவுகளில் ஒன்றுதான் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை இரவோடு இரவாக பல வந்தமாக வெளியேற்றிய முட்டாள் புலிகளின் புத்தி சாதுர்யம்.
அது இடம்பெற்று 20 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் புலி ஆதரவாளர்களின் மன நிலையும், தமிழின ஆர்வலர்களின் மன நிலையும் எவ்வாறு இருக்கின்றது என்று தேடிப் பார்த்த போது மீண்டும் காதுகளில் ஒலித்த நியாயமான கேள்விதான் இன்றைய தலைப்பாகிறது. Read the rest of this entry »
அரசியல் குத்தாட்டம்
அரசியல் குத்தாட்டங்களை காலத்திற்குக் காலம் அரங்கேற்றி, யார் கெட்டாலும் தமது இருப்பைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயற்படும் ஒரு சமுதாயம் இருக்கும் வரை, அந்த சமூகத்திற்கான விடிவைப் பற்றி சிந்திக்கும் அக்கறை எந்த ஒரு அரசியல் தலைமைக்கும் இருக்கப் போவதில்லை. Read the rest of this entry »
மாயமான் வேட்டை !
என்று வரும் அந்நாள் என்பது தான் அடுத்த கட்ட சுவாரஸ்யம்?
விடுதலைப்போர் எனும் பேரில் வயிறு வளர்த்த காட்டேறிகளின் மூன்று தசாப்த இருப்பில் பெரும் பங்கை வகித்த கே.பி அங்கிளுக்கு அது இன்று வந்து விட்டது.
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு, பூச்சுற்றி வேடிக்கை பார்க்க நினைக்கும் உருத்திரகுமாருக்கும் அவர் சகாக்களுக்கும் என்று வரும் என்பது தான் இனி வரும் வரலாற்று மாற்றம். Read the rest of this entry »
நன்றி மீண்டும் வருக !
ஏறத்தாழ ஒரு வடம் கழிந்தோடிவிட்டது, இன்றளவும் இங்கு வருகை தரும் வாசகர்களில் நம் கருத்துக்களை ஆழக் கவனித்தோர் நன்குணர்ந்திருக்கக்கூடிய ஒன்று தான், இங்கு நாம் வலியுறுத்தியிருந்த கருத்துக்கள் மற்றும் “காற்றுப் போன” இயந்திரத்தின் பெயரில் வயிறு வளர்க்கப்போகும் எதிர்காலத்தின் எதிர்வு கூறல்கள்.
ஒரு சிறு அமைதியின் பின்னர் சிந்திக்கும் போது, அன்று விட்ட அளவில் இருந்து எடுத்துச் செல்வதற்கு இருப்பதென்னவோ சிறு அளவு தான்.
புலிப் பூச்சாண்டி
நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும் என்றார்கள் எந்த நாளை என்று இறுதி வரை அவர்களும் சொல்லவில்லை, அதை நம்பப் பண்ணியே அப்பாவி மக்களிடம் கிட்டத்தட்ட 11000 நாட்கள் சோறும், நீரும், இரத்தமும், சதையும், கள்ளும்,புல்லும் அவர் வீட்டுக் கதவு,ஜன்னல்,கூரைகளையும் பிடுங்கித் தின்று ஏப்பம் விட்டு இப்போது நீட்டப்பட்டிருக்கும் இராணுவத் துப்பாக்கிகள் முன், மூடப்பட்டிருக்கும் வேலி முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.
சமத்துவமா? அடிமைத்தனமா?
சமத்துவமா? அடிமைத்தனமா? இந்த இரண்டில் ஒன்றைத் தெரிவு செய் என்று இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நிர்பந்திக்கப்படுகிறார்களா? எனும் சந்தேகம் பெரும்பாலானோர் மனதில் ஏதாவது ஒரு மூலையில் தேங்கிக் கிடக்கிறது.
இந்த சந்தேகம் வெளிநாட்டில் இருப்போரின் வெளிமனதிலும், உள் நாட்டில் இடைத்தங்கல் முகாம்களில் இன்று தவிக்கும் மக்களின் ஆழ் மனதிலும் நி்ச்சயம் இருக்கக்கூடும்.