RSS

பிரபாகரனே அத்தனைக்கும் காரணம்!

29 ஜூன்

சொல்வது நாமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ தமிழ் இணையம் ( புதினம் ).

எழுதியதும் நாமல்ல, நடேசன்,பாலசிங்கம்,தமிழ்ச் செல்வன் மற்றும் இன்ன பிற புலி முக்கியஸ்தர்களின் நெருங்கிய சகா “வழுதி”.

வழுதி இப்போது கிளப்பும் இந்தப் புழுதியை தமிழினத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் எப்போதே கிளப்பியிருந்தார்கள், என்ன செய்ய? ஏற்றுக்கொள்ளத்தான் அவர்களுக்கு மனம் இருக்கவில்லை.

இப்போது காலங் கடந்து விட்டது, இதைத் தான் கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்றும் சொல்வது.

“புலித் தலைவர் சாகடிக்கப்பட்டார்” என்று மே 18 அன்றே முழு உலகமும் ஏற்றுக்கொண்டாலும், எஞ்சியிருந்த புலி முக்கியஸ்தர்களுக்கு அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்வதற்கு ஏறத்தாழ ஒரு மாதம் தேவைப்பட்டது.

இருக்கிறார், இல்லை எனும் சந்தேகத்தை வைத்து நெடுமாறன்,சீமான் வகையறாக்கள் காசு பார்த்துக்கொண்டிருக்க, யார் வீட்டுத் தோட்டத்தில் யார் பழந் திண்பது என்று சுதாரித்துக்கொண்ட புலிப்படை இனியும் இதை வைத்து வியாபாரம் செய்ய முடியாது என்பதை உணர்ந்து தம் தலைவர் மண்டை உடைத்து கொல்லப்பட்ட உலகறிந்த “பரகசியத்தை” உத்தியோகபூர்வமாக வழுதி வழியாக வெளியிட்டு புழுதியைக் கிளப்பியிருந்தது.

கிளப்பிய புழுதியில் சாட்டோடு சாட்டாக தமிழ்ச்செல்வனை சாடி அவரையும் ஏறக்குறைய “துரோகி” நிலையில் வைத்து புதினம் அழகு பார்த்த போது, இவர்களின் காட்டு மிராண்டித்தனத்தை “தமிழ்ச்செல்வனுமா துரோகி?” என்று தலைப்பிட்டு நாமும் ஒரு பதிவை மேற்கொண்டிருந்தோம்.

வழுதி கிளப்பிய புழுதியில் முத்துக்குளிக்கப் புறப்பட்ட சில தீவிர புலி ஆதரவாளர்கள், தம் தலைவன் இறந்த கதையை மறைப்பதோடு மட்டும் நின்று விடாமல், மறக்காமல் வழுதியின் பின்புலம், முன் புலம் அவரது கடந்த காலம், நிகழ் காலத்தையெல்லாம் ஆராய்ந்து அவருக்கும் “துரோகி” விலை போனவன், ஏமாற்றுக்காரன், புலித் தலைமையினால் தண்டிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட கோபத்திற்காக பழி வாங்குகிறான் என்றெல்லாம் வீர காவியங்களை பதிவிலிட்டார்கள்.

தன் வினை தன்னைச் சுடும்

தாம் வளர்த்தெடுத்த பட்டம் சூட்டும் கலாச்சாரம் தம்மையே சுடுவதை முதன் முறையாக உணர்ந்துகொண்டிருக்கும் புலியின் உயர் மட்டத் தலைவர்கள் கடந்த காலங்களில் தாம் விட்ட தவறுகளை அலச முன் வந்திருப்பது பாராட்டத்தக்க விடயமாக இருப்பினும், அலசலின் போது தாம் தப்பினாலும் வேறு யாரையாவது சாடியே ஆக வேண்டும் எனும் நிலையில் இந்தத் தடவை தேர்ந்தெடுத்திருப்பது அவர்களின் அதி மேதகு தேசியத் தலைவர் பிரபாகரனையாகும்.

பிரபாகரன் தான் தடை

அவர் மட்டும் அசைந்து கொடுத்திருந்தால் அத்தனையும் நடந்திருக்கும் எனும் தொனியில் வழுதியின் பிரச்சார விளக்கம் அமைந்திருப்பதானது பல உண்மைச் செய்திகளையும் சந்தர்ப்பவாதப் புலிகளின் முகங்களையும் தோலுரித்துக் காட்டுகிறது.

தமது மக்களுக்குத் தேவை விடுதலை என்பதை நன்குணர்ந்த தலைவராக பாலசிங்கம் இருந்திருந்ததையும் அவரை விரும்பாத பலர் அங்கிருந்தார்கள் என்பதையும் அதுவும் தமிழ்ச் செல்வனே இருந்தார் என்பதையும் வழுதி வலிந்துரைத்தாலும், தமிழ்ச் செல்வனைப் பேச வைப்பதெல்லாம் தலைவர் என்னும் அவர்களின் முன்னாள் விளக்கங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது பிரபாகரனுக்கும் பாலசிங்கத்திற்கும் இடையில் பாரிய சிந்தனை இடைவெளி இருந்திருப்பது புலப்படுகிறது.

எரிக் சொல்ஹைமிடம் தன் இறுதி நேரத்தில் பாலசிங்கம் : “பல்லாயிரக்கணக்கில சனங்கள் சாகப் போகுது, எரிக்; எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அப்பால் அந்தப் போராளிகள் ஒவ்வொருத்தரும் தமது மக்களின் விடுதலைக்காகப் போராட வந்த தூய உள்ளங்கள். அவங்களைக் காப்பற்ற நான் உயிரோட இருக்கமாட்டன்; என்ன செய்தாவது அந்த உயிர்களைக் காப்பற்றுங்கோ”  என்று கேட்டுக் கொண்டாராம்.

இங்கே எடுக்கப்பட்ட முடிவுகள் என்று அவர் விளித்திருப்பது தன்னையும் தன் பேச்சையும் நம்பாமல் வன்னிக் காட்டிற்குள்ளிருந்து உலகத்தை ஆள நினைக்கும் பிரபாகரனின் முட்டாள்த் தனத்தைத்தான் என்பது தெளிவாகிறது.

தானும் சேர்ந்து ஊட்டி, குடித்து வளர்த்த புலிச் சித்தார்ந்தத்தினை நம்பி ஏமாந்து பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அநியாயமாகப் பலியாகியதே எனும் ஏக்கமும் அவரிடம் காணப்பட்டிருக்கிறது எனும் வழுதியின் கூற்று உண்மையாக இருந்தால் பாலசிங்கத்துக்கு கடைசி நேரத்திலாவது மேல் மாடியில் சரக்கு முளைத்திருக்கும் என்று ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனாலும், இந்த மேல்மாடியை காலியாக்கி வைத்துக் கொண்டு தானே ஈழ உணர்வு எனும் விளையாட்டிற்கு இவர் விளக்கமளிப்பதும், அதற்குத் தொண்டர்கள் கூடி விசிலடிப்பதுமாக மாவீரர் களியாட்டத்தை அதுவும் இவரே பிரதம பேச்சாளராக, விருந்தாளியாக இருந்து காலா காலம் அரங்கேற்றினார்? அது எதற்காக? மேல் மாடி காலியான தன் தம்பியை எதிர்த்து விட்டு தான் உயிரோடு இருக்க முடியுமா எனும் பயத்தாலா? இல்லை பிரபாகரனை எதிர்த்தால் தானும் துரோகியாக்கப்பட்டு விடுவேனே எனும் சுயநலத்தாலா?

இவையிரண்டுமே இல்லாவிடின் பிரபாகரனை வெளிநாட்டுக்காரர்களிடம் விமர்சித்து, அதற்கு தமிழ்ச்செல்வன் வாயிலாக “துரோகிப் பட்டம் பெற்று” பின்னர் வழுதியின் கூற்றுப்படியே நொந்து நொந்தே மாண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லையே?

அப்படி அவர் இறுதி நாட்களில் வருந்தியது தான் உண்மையென்றால் கருணா போன்றவர்கள் துரோகியாக்கப்பட்ட போது பாலசிங்கம் அதை விரும்பியிருக்க மாட்டார், விரும்பியும் விரும்பாமலும் அவரும் கருணாவிற்கு எதிராகக் கருத்தக் கூறினார் என்பதையும் வைத்துப் பார்க்கும் போது, இவரும் ஏதோ ஒரு நிர்ப்பந்ததத்தில் தமிழ் மக்களை தவறாக வழி நடத்தினார், தவறான தலைமைக்குப் பயந்து சுயநலத்தோடு தம்மைப் பின்பற்றுவோர்களுக்கு “தூஷனப்” பேச்சுக்களால் தமிழீழம் காட்டி ஒட்டு மொத்த இனத்தின் உழைப்பையும் சுரண்டிய பாவிகள் பட்டியலில் அவரும் தானே தானாகச் சேர்ந்துகொள்கிறார்? இல்லை வழுதி தான் சேர்த்து விடுகிறாரா?

பாலசிங்கத்தையும்,பிரபாகரனையும் நேசிக்கும் ஒரு பக்கத்தில் இருந்து வழுதியைத் துரோகியாக்குவதா இல்லை வழுதியின் நியாயங்களில் இருந்து உண்மையில் பாலசிங்கத்தின் மேல் மாடி பிரபாகரனின் காலடியில் அடகு வைக்கப்பட்ட உண்மையை ஏற்றுக்கொள்வதா என்பதை புலி விசுவாசிகள் தான் தீர்மானிக்க வேண்டும்.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

நடு நிலையில் இருந்து அல்லது புலி சார்புக்கு வெளியிலிருந்து இவற்றை நோக்கினால் இவர்கள் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்கிற முடிவு மிக விரைவாக மேற்கொள்ளப்படக்கூடியது.

இத்தனை சித்தார்ந்தத் தெளிவிருந்த வழுதி, அதுவும் புலியின் குரலான புதினத்தில் இத்தனை ஆளுமை நிறைந்திருந்த வழுதி இவ்வளவு காலம் எங்கே போனார்? தன் அறிவுக் கண்ணை எந்த அடுப்படியில் குளிர் காய வைத்திருந்தார் என்றும் மனித நேய விரும்பிகள் கேள்வி கேட்கலாம், அதற்கு அவரின் பதில் தலைவனை எதிர்த்து எதையும் பேச முடியாத கட்டுப்பாடான நிலை இருந்ததாக வரப்போகிறது.

அப்படியானால், உம் சொந்த மூளையையும் மனச்சாட்சியையும் தட்டிப்பறித்து உம்மை அடக்கி ஆண்ட சித்தார்ந்தம் தவறென்பதை நீர் இதுவரை சுட்டிக்காட்டாதது பாலசிங்கத்தையும் மிஞ்சிய சுய நலம் தானே?

இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகும் போது, புலி எனும் போர்வையில் மக்களைப் பற்றி கொஞ்சம் கூடச் சிந்திக்காமல் வழுதியால் குற்றஞ்சாட்டப்படும் அனைத்து தலைவர்களும், புலிச் சித்தார்ந்தத்தின் தலை பிரபாகரனும் சேர்ந்து மக்களை ஏமாற்றி வந்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என்பது நன்கு புலப்படும்.

பாலசிங்கம், நடேசன்,வழுதி போன்றோர் நாட்டுப் பற்றுடன் மக்கள் நலன் கலந்தும் யோசித்தது உண்மையென்றால், பிரபாகரனும் அவரைச் சுற்றி அமர்ந்து கொண்ட தமிழ்ச்செல்வன் அன் கோவும் மக்கள் நலனைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்க மறுத்த மேல் மாடியில் எப்போதுமே தம் நலத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்த சுயநலவாதிகள் ஆவார்கள்.

அதிலும், பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என்றால் பிரபாகரனைச் சுற்றியிருந்தவர்கள் அவரை சிந்திக்க விடவில்லை எனும் பழியைத் தூக்கிப்போட்டு அவர்களைத் துரோகியாக்கினால் மாத்திரமே இது சாத்தியமாகும்.

வெளிநாட்டுச் செய்திகள், தமிழீழத் தனி நாட்டுக் கோரிக்கை கை விடல் முதல் அனைத்தையும் பிரபாகரன் தவிர்ந்த ஏனைய சக்திகள் தான் கிழித்தெறிந்தன, தடையாக இருந்தன என்று பிரபாகரனைக் காப்பாற்றும் நோக்கில் புலி விசுவாசிகள் பேச முன் வருவார்களேயானால் நாம் ஏலவே பல இடங்களில் குறிப்பிட்டுக் காட்டியபடி பிரபாகரன் என்பது “தமிழீழ” வியாபாரிகளுக்கு இலாபமீட்டுக் கொடுத்த ஒரு சந்தைப்பொருள், மதிப்பிருந்த விளைபொருள் மாத்திரமே.

மற்றவர்களால் ஆட்டுவிக்கப்பட்டு, இனித் தேவையில்லை என்று வரும் போது தூக்கி வீசப்பட்ட அல்லது காட்டிக்கொடுத்துக் கொல்லப்பட்ட தலையாட்டி பொம்மைதான் அது.

இதைச் செய்தவர்கள்,செய்து கொண்டிருப்பவர்கள் தான் அன்று தமிழ்ச்செல்வனையும் காவு கொடுத்தார்கள், அது தலைவரின் ஆசியுடன் நடைபெற்றிருந்தால் தலைவர் தன்னை மிஞ்சிய சிஷ்யன் ஒருவன் வெளி நாட்டில் இருப்பதை மறந்திருக்க வேண்டும், அது தலைவருக்கும் தெரியாமல் நடந்திருந்தால் தலைவர் வெரும் தலையாட்டி பொம்மையாகவே இருந்திருக்க வேண்டும்.

எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் தம் சொந்த நிலங்களை விட்டுச் சிதறுண்டு உலகமெல்லாம் பரந்து வாழும் ஈழத் தமிழர்களும் சரி, சொந்த நாட்டிலேயே அகதிகளாகத் தவிக்கும் ஈழத் தமிழர்களும் சரி, இவர்கள் இரு சாராரும் “தமிழீழம்” எனும் மாய மான் கொண்டு ஏமாற்றப்பட்டார்கள் என்பதே இறுதியில் நிலைக்கும் உண்மையாகும்.

அதைச் செய்வதற்கு ஒரு அமைப்பு, அதன் இருப்பில் ஒரு அரச கட்டமைப்பு, பல வெளிநாட்டு செயற்படு பொறிமுறைகள் என்று அனைத்து வகையிலும் அனைத்து மக்களும் புலியால் ஏமாற்றப் பட்டுக் கொண்டே வந்தார்கள்.

யார் தியாகி? யார் துரோகி?

நிலைமை கட்டுப்பாட்டை மீறி் தலைவர் செத்துப் போனார் என்பதை நக்குணர்ந்து கொண்டு விரக்தியடைந்திருக்கும் எஞ்சியிருக்கும் திவிர புலி ஆதரவாளர்களுக்கு இரண்டு குழப்பங்கள் இருக்கின்றன.

1. தலைவர் நமக்குக் காட்டிக்கொண்டிருந்த தமிழீழ இராணுவ பிலிம் என்ன ஆனது?

2. தலைவர் இறந்தது உண்மையென்றால் அவரைக் காப்பாற்ற முடியாது போனது எதனால்? என்று இரு பெரும் குழப்பங்களாகும்.

வெறும் இரும்புத் துண்டங்களை வாங்கிக் குவித்த தமிழீழத் தேசியத் தலைவருக்கு மனோ தைரியம் உள்ள விடுதலைப் போராளிகளை உருவாக்கவோ, அல்லது இருந்தவர்களைத் தக்க வைக்கவோ முடியாமல் போனதுதான் முதலாவது குழப்பத்திற்கான தெளிவான விடை.

அதன் உப காரணம் என்னவென்று பார்த்தால் அங்கே தலைவரின் சுயநலமும்,வங்குரோத்து புத்திசாலித்தனமும் தெளிவாக வரும். எனவே அதை தீவிர புலி ஆதரவாளர்கள் இப்போதைக்கு செய்ய மாட்டார்கள்.

இரண்டாவது காரணத்தில் தீவிர புலி ஆதரவாளர்களுக்கு நாட்டம் அதிகம் இருக்கிறது, காரணம் சூப்பர் மேன் பிரபாகரனை யாராவது காட்டிக்கொடுத்து, அருகில் இருந்து முட்டாளாக்காமல் அவர் செத்திருக்க மாட்டார் என்பது அவர்கள் அடிப்படை நம்பிக்கை.

அந்த நம்பிக்கைக்கு வலுச் சேர்க்கும் விதமாக தலைவரின் மண்டையில் பெரிய வெட்டுக் கொத்து வேறு காணப்படுகிறது, எனவே தலைவரை “இருங்கோ நாங்க காப்பாற்றுவோம் என்று சொல்லி யாரோ மாட்ட வைத்து விட்டான்” என்று முட்டிக்கொள்ளலாம்.

அதற்குக் கிடைக்கும் ஒரே இலக்கு பத்மநாதன், எனவே நம்ப வைத்துக் கழுத்தறுத்த பதமநாதன் துரோகி தான் என்று தம் நிலையைப் பலப்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால் பத்மநாதனை ஆதரிக்கும் வழுதி சார்ந்த புதினங்களோ யார் என்னதான் சொன்னாலும் தலைவன் தான் அடம் பிடித்தான் அவன் மேல் மாடிதான் காலியாக இருந்தது, மாறி வரும் உலகை அவதானிக்கத் தவறியது, தன் சொகுசு வாழ்க்கையை விட்டுக்கொடுக்க மறுத்தது என்று அடித்துக் கூறுகிறது.

இந்தக் கோணத்தில் பார்த்தால் பிரபாகரன் தான் அத்தனைக்கும் காரணம்.

புலியின் ஆக்கத்திற்கும் பிரபாகரன் தான் காரணம் இன்று அவர் சார்ந்த அழிவிற்கும் அவரே தான் காரணம் என்று கதையை முடித்து விட்டால் எஞ்சியிருக்கும் பத்மநாதன்கள், ருத்திர குமரர்கள் புனிதர்களாக மாறிவிடலாம்.

அப்படிப் பார்த்தால் கருணாவும் இதைத்தானே கொஞ்ச நாட்களுக்கு முன்னதாகச் சொன்னார்? பிரபாகரன் யார் பேச்சையும் கேட்பதில்லை, தேவையில்லாமல் முரண்டு பிடிப்பார் என்று அவரும் தானே சொன்னார்? அப்போ அவர் துரோகியென்றால் வழுதி,பம்நாதன்களும் துரோகிகள் தானே?

சரி, அந்த வாதத்தை எஞ்சியிருக்கும் தீவிர புலி ஆதரவாளர்களிடம் விட்டு விடலாம், இனி அடுத்து என்ன? என்று கேள்வி கேட்டால் இப்போது எஞ்சியிருக்கும் வெளிநாடு வாழ் புலிகளின் முக்கிய போராட்டம் புலியின் பெயரில் இருக்கும் சொத்துக்களுக்கான போராட்டமாகும்.

அதை நார் நாராகப் பிரித்துப் பங்கிட்டுக் கொள்ளும் வரை நாடு கடந்து தமிழீழத்தை வாழ வைப்பார்கள், அதற்காக பல தலைவர்கள், புத்திஜீவிகள் என்ற பெயரில் மீண்டும் மீண்டும் பாலசிங்கத்தின் பாசையில் மேல்மாடி காலியானவர்கள் வந்துகொண்டிருப்பார்கள்.

மக்களின் மேல்மாடியில் தமிழீழப் பனி மேகத்தை இறக்கி வைத்து விட்டு இவர்கள் 200 கி.மீ வேகத்தில் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொள்வார்கள்.

இது என்ன கூத்து என்று யாரும் கேள்வி கேட்க முன்னராகவே தலைவர் எல்லாவற்றையும் ஈசனோடு வானலோகத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார், தமிழீழம் கிடைத்ததுமே உடனடியாக விசா எடுத்து நெடுமாறனிடம் சொல்லி ஒரு தனி விமானத்தில் ஏறி வை.கோ வின் ஆதரவோடு பயணித்து சீமான் விட்டு முற்றத்தில் தரையிறங்குவார், அதைப் பாரதிராசா மறக்காமல் படம் எடுப்பார் என்று மெகா சீரியலை அவிழ்த்து விட்டுவிடுவார்கள்.

இன்டர்நெட் புலிகளும் தேனிசைச் செல்லப்பாவை வைத்து புலி வரும் புலி வரும் என்றொரு வீரப் பாடலையும் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்று ரீமிக்ஸ் பாடலொன்றையும் வெளியிடுவார்கள்.

ஒரு மறு மலர்ச்சிக்காக வேண்டுமானால் புலிக்கொடியை 3டியில் வடிவமைத்து தம் இணையங்களுக்கு புதிய நிறமும் தீட்டி புதுப் படம் ஓட்டலாம், ஆனால் சரக்கென்னவோ பழைய சரக்காகவே இருக்கும்.

கருமம் இந்த நேரத்தில் ஒரு புரட்சிக் கவிதை எழுத ரத்தினதுரையும் இல்லை அவர் இப்போது சிங்களக் கவிதை எழுதப் பழகிக்கொண்டிருப்பார், ஏனெனில் தான் சார்ந்த சித்தார்ந்தம் மக்களுக்கு எதைக் கொடுக்க முடியும் என்று தெரிந்தும் தன் சுய இருப்பை தமிழீழத்தின் தேசிய கவிஞராக இருப்பதற்குத் தானே அவரும் எழுதினார், இப்போது தமிழீழமும் இல்லை அதற்காகக் போராடப் போய் அநியாயமாக உயிரிழந்த ஆயிரக்கணக்கான உயிர்கள் தவிர இருப்பர்வகள் எல்லோரும் ஒரே மட்டையில் ஊறிய குட்டைகளாக இப்போது யாரை யார் முந்திக்கொண்டு துரோகியாக்குவது என்று அலைகிறார்கள், இதில் இனி அவருக்கு என்ன வேலையிருக்கிறது? நிம்மதியாக மஹிந்தவை கவர்ந்துகொள்ள சிங்களக் கவிதைகள் எழுதிப் பழகட்டும்.

கறை படியாத கைகள் எனும் நினைப்பில் காவு கொடுக்கப்பட்ட உயிர்கள் தான் தம் தலைவனை தவறாக வழி நடத்தியது என்று மட்டுந்தான் சொல்வார்கள் என்று பார்த்தால் அந்த மூளை கெட்ட பிரபாகரன் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் புலியின் போக்கு எங்கேயே இருந்திருக்கும் எனும் தொனியில் புலியின் இக்கால முக்கியஸ்தர்கள் புளுடா விடுகிறார்கள்.

பிரபாகரன் இல்லாமலிருந்திருந்தால் புலி எனும் அமைப்பும் தான் இருந்திருக்காது, நீங்களும் தான் இருந்திருக்க மாட்டீர்கள். எனவே பிரபாகரன் அழிந்த உண்மையை ஏற்றுக்கொண்டதன் பின்னும் உங்களுக்கு மக்கள் முன் வந்து நியாயங் கற்பிக்கவும், அவர்களை ஒன்று திரட்டவும் என்ன தேவை இருக்கிறது?

பிரபாகரன் பெயரால் சுருட்டி வைத்திருக்கும் சொத்துக்களை அபகரித்துக்கொள்ளும் வரை நாடு கடந்த தமிழீழம் நடத்துவது தானே உங்கள் தேவை? அதிலும் ஓரளவு வெற்றிகள் உங்களுக்குக் கிடைக்கும், ஏனெனில் காலியான மேல் மாடியை புலி ஆதரவாளர்கள் நிரப்புவதற்கு இன்னும் சில காலம் எடுக்கும்.

நீங்கள் நியாயவாதிகள் அதுவும் மக்கள் நலன் சார்ந்த நியாயவாதிகள் என்றால் பிரபாகரன் உயிரோடு இருக்கும் போதே அல்லவா அவரைத் திருத்தியிருக்க வேண்டும்? அவரைக் கொன்று விட்டு இனறு அவரையும் துரோகியாக்கி விட்டு அவரால் வளர்க்கப்பட்ட தமிழீழக் கனவில் எஞ்சியிருக்கப் போவது என்ன என்று பார்த்தால் அது என்னவாக இருக்கும்? என்பது சிறு பிள்ளைக்கும் இனித் தெளிவாகப் புரியும்.

புழுதி கிளப்பிய பின் தன்னைத் துரோகியென்று சொல்லும் மக்களுக்கு முன் மகாத்மா வழுதி அனைத்தையும் தாங்கி வந்து முன் நின்று விளக்கம் கொடுக்கிறார் என்றால் அவருக்கு தமிழ் மக்கள் மீது எவ்வளவு பாசமும் நேசமும் இருக்க வேண்டும்? கருமம் இது அப்போது இருந்திருந்தால் தலைவரின் தலையாவது தப்பியிருக்குமே?

அப்போது வாய் திறந்திருந்தால் துரோகியிருப்போம் என்னும் பய உணர்வால் இப்போது வாய் திறக்கிறீர்களா? இப்போதும் நீங்கள் எல்லாம் துரோகிகள் என்று புலிப் பாணியில் தீர்ப்பு சொல்வதற்கில்லை, ஆனால் அப்போதும்,இப்போதும்,எப்போதும் நீங்கள் அனைவருமே மக்கள் விரோதிகள் என்பதை மக்கள் இனிப் படிப்படியாக உணர்ந்து கொள்வார்கள்.

அரசியல் பிரிவு,வெளிநாட்டுப் பிரிவு,புலனாய்வுப் பிரிவு அந்தப் பிரிவு இந்தப் பிரிவு என்று திரை மறைவில் இருந்து கொண்டு இன்டர்நெட் புலிகள் நடத்தித் தொலைத்த விபச்சாரம் நீங்கள் கொண்டு வந்த அதே அறிவழகனை முதலில் நம்பி, பின் அவரும் விலை போன துரோகியானார் என்று வீர முழக்கமிடும் வரை ஓயவில்லை.

அதையும் நீங்களே எடுத்துக் கூறுகிறீர்கள், இது தான் கிடைக்கும் என்று தெரிந்த பின்னும், அதுவும் உங்கள் பழைய விளக்கவுரையின் படி தலைவனை அம்போ என்று விட்டு விட்டு ஓடி வந்து உங்களிடமும் தகவல் சொன்ன சில புலனாய்வுப் பிரிவுப் புலிக் கதையையும் சேர்த்துப் பார்க்கும் போது எதைச் செய்தால் என்ன பரிசு கிடைக்கும் என்று நடேசனை விட நன்குணர்ந்தவர்கள் வெளிநாட்டில் புலிப் பணத்தில் குளிர்காய்ந்த உங்கள் போன்றவர்கள் தான்.

அதையும் மீறி, நீங்கள் இன்னும் இன்னும் புனிதர்களாக மாறி மக்கள் முன் வர முயற்சிப்பது என்ன காரணத்தினால்? அதற்கு கே.பியைத் தலையாக்கி அணி திரள முனைவது எதனால் என்பதெல்லாம் இனி வரும் காலத்தில் அம்பலமாகப் போகும் உண்மைகள்.

மக்கள் விரோதிகளான இவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக சமுதாயத்திலிருந்து ஓரங்கட்டப் பட வேண்டியவர்கள்.

இவர்களின் தலையீடு இல்லாத ஒரு ஈழச்சமூகம் கடந்த காலத்தில் மீட்சி பெற்றிருக்கும், அதுதான் முடியாமல் போய்விட்டது.  இந்தக் குள்ள நரிகள் அறிந்து அகற்றப்பட்டால் இனியாவது மீட்சி பெறலாம்.

இவர்களது குடுமிச் சண்டையில் அங்கே இன்றளவும் அல்லல் படும் மக்களை யாரும் மறந்து விட வேண்டாம்.

உயிர் வாழும் உரிமை ஒவ்வொரு மனிதருக்கும் இருக்க வேண்டும், நம்மால் முடிந்த வகையில் அவர்களுக்கு உதவி செய்யும் மனமும் ஒவ்வொருவருக்கும் தானாக வர வேண்டும்.

யாரையும் நம்பி யாருக்குப் பின்னாலும் திரிந்து யாருக்கு ஊடாகவும் உங்கள் உழைப்பை வீணாக்குவதை விட உங்கள் சொந்தக் கண்களால் பார்த்து உங்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய வழிகளில் அந்த மக்களைச் சென்றடையக் கூடிய உதவிகளை, ஆறுதலை வழங்குங்கள்.

அவர்கள் விழிப்புணர்வு பெற்ற, நல் வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் நீங்களும் சேர்ந்தே அதற்காக உழையுங்கள், நம்புவோம் இந்தப் புலிக் கொடுமை இல்லாத நல்லதொரு சமூகம் நாளை ஈழத்தில் தலை நிமிர்ந்து நிற்கும் என !

Puthinam News சொடுக்கு

 

குறிச்சொற்கள்: , , , , ,

15 responses to “பிரபாகரனே அத்தனைக்கும் காரணம்!

 1. porampokku

  ஜூன்29, 2009 at 4:03 பிப

  irunthathile nalla kolli eduththu thalai sorinjom.athaam thalai paththinathu ulagathukke therinjuthu.unkalai nambi iruntha oorukkulleye mudivu kaddi iruppeengal.

   
 2. Thanga. mukunthan

  ஜூன்29, 2009 at 4:17 பிப

  நீங்கள் சொல்வது உண்மைதான்!
  ஆனால் யாரும் அறிவுபூர்வமாக சிந்திப்பதில்லையே! எல்லோருமே மந்தைக்கூட்டமாயல்லவா இருக்கிறோம்! ஒன்றைச் சொன்னால் அல்லது செய்தால் ஏன் என்று கேட்கும் திராணியற்ற ஜடங்கள் அல்லவா நாங்கள்!
  ஒரு புறத்தில் அப்படிக் கேட்டாலும் உயிருக்கு உத்தரவாதமில்லை!
  ஆனாலும் எத்தனை நாள்தான் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும்?
  இப்போதும் மற்ற ஆயுதக் குழுக்களாலும் அல்லவா ஆபத்து!உயிரைக் கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை! இதை நானும் பல தடவை சொல்லி ஓலமிட்டபடி இருக்கிறேன்.
  நாங்களோ கொல்லுபவர்கள்தான் எங்களுடைய ஏகப் பிரதிநிதிகள் என்று சொல்லி இன்று ஒட்டாண்டிகளாகி பரிதவிக்கிறோம்! இதைப்பற்றிக் கதைத்தால் துரோகி!
  தினை விதைத்தவன் தினை அறுப்பான்!
  வினை விதைத்தவன் வினைஅறுப்பான்!
  நாங்கள் வீடுவாசல் இழந்து – தோட்டம் காணிபூமி இழந்து முள்ளுக்கம்பி வேலிக்குப்பின்னால் ….. சொல்ல முடியவில்லை! விபரிக்கவும் வார்த்தைகள் வராதாம்!

   
 3. tamil

  ஜூன்29, 2009 at 4:49 பிப

  tamilanukkul pirivu irukkum varai tamileelam enpathai kaanpathu kastam athu yar vali nadathinal enna. ‘united’ the word tamils need to know

   
 4. பூனை

  ஜூன்29, 2009 at 10:09 பிப

  நீங்கள் கூறியது உண்மை. இவர்கள் எல்லாம் ஓரே குட்டையில் ஊறிய மட்டைகளே. இலங்கை தமிழர்களை தமிழீழம் எனும் மாய மானை காட்டி ஏமாற்றி அவர்களின் உழைப்பையும் சுரண்டிய கொடுமைகாரர்கள். நல்ல காலமாக இந்த பாவிகளுக்கு முடிவு வந்தது.

   
 5. Yogan

  நவம்பர்19, 2009 at 9:44 பிப

  Inthiyavil oru karuna…..nithy. ilankkaiyil oru karuna…parathesi ivarkalthan thamil inaththin tholvikku karanam. Thamil Inaththin Eruthi Maaveeran Pirapakaran Enpathuthan Sariththiram¨!!!. enchi irupporellaam Thariththiram. Pirapakaran peyaral pathavi pettavarkal intrulla Thamil MP kall !!! appady poodu poodu… poodu …

   
 6. thamilan

  திசெம்பர்12, 2009 at 11:40 முப

  வழுதி என்ற புளுதிக்கு கே பி பணம் கொடுக்கவில்லை போலும் …………..வெளிநாட்டில் இருந்து சொகுசா வளர்ந்துவிட்டு நேரத்துக்கு நேரம் சாப்பிட்டு விட்டு கதை அளக்கிறான் புழுதி……….இப்படி எழுதினால் தானே பணம் பண்ணலாம் …………புதினம் தடையு ன் இப்படி ஒரு அலவ “தமிழனுக்கு ஒற்றுமை என்றால் என்ன என்று தெரியாது ” அதுதான் எல்லாத்துக்கும் காரணம்…………….. இனியாவது திருந்துவார்களா?இதிலும்பார்க்க புழுதி மகிந்தவின் செருப்பை நக்கலாம் ……………………..

   
 7. kumar

  திசெம்பர்12, 2009 at 11:44 முப

  தமிழன் இல்ல நாடில்லை ஆனால் தமிழனுக்கு ஒரு நாடு வேண்டாமா ?தமிழன் பிச்சை எடுப்பதா?வழுதிக்கு இதெல்லாம் விளங்குமா?

   
 8. priya

  ஜனவரி10, 2010 at 1:40 பிப

  உயர்பாதுகாப்பு வலயம் “இருக்காது ஆனா இருக்கும்” :மகிந்த காமடி

   
 9. sami

  மார்ச்3, 2010 at 9:25 முப

  WHO MADE PRABA.YOU AND I SO SO SO CONTN… DONT WORY MAKE IS SWEET MY FRIENDS

   
 10. kumar

  மார்ச்3, 2010 at 10:55 முப

  neengal solvathu sari tamilan pavam

   
 11. saakkadai

  மார்ச்29, 2010 at 8:37 பிப

  its not longethen liying storry

   
 12. sakadevan

  ஜூன்20, 2010 at 10:36 பிப

  PIRBAHARAN- is only hero our living time who cant do any thing that
  persons are talking negative about HIM,when the movement are failed after the war some tamils are turned like fifth column.
  it is normal in human life -confused noise.

   
 13. sathya

  ஓகஸ்ட்3, 2010 at 9:45 முப

  Prabakar only is not the reason. You shold go back read Srilank full Histroy. Lot of evidence are there. It not just started like political wing.

  யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது

  1996 ஐநா அறிக்கை ஒன்றின் படி 1980-96 காலப்பகுதியில் இலங்கையில் 11,513 பேர் காணமல் போய் உள்ளனர். இது உலகில் ஈராக்குக்கு அடுத்தபடியான இரண்டாம் நிலை ஆகும்[1]. 1999 ஆசிய மனிதவுரிமை ஆணையத்தின் அறிக்கை ஒன்றின் படி, அப்போது 16,742 எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத வழக்குகள் இருந்தன[2]. அதன் பிறகு நடத்தப்பட்ட ஆள்கடத்தல்களும் காணாமல் போதல்களும் இந்த எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் அதிகரித்திருக்கும் இவ்வாறு கடத்தப்படுவர்களின் பெரும்பான்மையானோர் இலங்கைத் தமிழர்கள் ஆவர்.

   
 14. sathya

  ஓகஸ்ட்3, 2010 at 9:49 முப

  If u want photo of Black July you can go there and see.

  http://kanapraba.blogspot.com/2008/07/25.html

  இலங்கை வடக்கு கிழக்கு தமிழர் வாழ் பகுதிகளில் யுத்த அனர்த்தங்களால் பொது மக்களிற்கான மனிதாபிமானப் பணிகளில் ஈடுப்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களும் அடிக்கடி கடத்தப்பட்டு காணாமல் போவதும் கொலைச்செய்யப்படுவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. தமிழர் புணர்வாழ்வுக் கழக பணியாளர்கள் மற்றும் மனிதவுரிமை பணியாளர்கள் 57 பேர் கடத்தப் பட்டு கொலைச்செய்யப்பட்டுள்ளோர் விபரத்தையும் ஆசிய மனிதவுரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது. [11] இவர்கள் அணைவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  மேற்கோள்களும் ஆதாரங்களும்

  1. ↑ Report of the UN Working Group on Enforced or Involuntary Disappearances [1]
  2. ↑ Disappearances in Sri Lanka: 16,742 Cases Established, No Action Yet [2]
  3. ↑ கடத்தல், காணாமல் போதல் சம்பவங்களுக்கு அரசே பொறுப்பு-ஹியுமன் ரைட்ஸ்
  4. ↑ இராணுவ பிரிவினராலேயே குறிப்பிட்ட நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக
  5. ↑ கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்யும் குழுவின் கூட்டம்
  6. ↑ Two persons disappear in separate incidents – ASIAN HUMAN RIGHTS COMMISSION
  7. ↑ Whereabouts of a man is unknown after arbitrary arrest – ASIAN HUMAN RIGHTS COMMISSION
  8. ↑ citizens who have been affected and who live in fear of threats either by the Sri Lankan Army or by paramilitary groups
  9. ↑ Police allegedly attempt to abduct a journalist
  10. ↑ Two “white van” abductions within a few hours in Colombo
  11. ↑ Killing and disappearance of 57 humanitarian workers reported

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: