RSS

பிரபாகரனின் கனவு நிறைவேறுகிறது!

17 ஜூன்

தலைவர் சும்மாவா இருந்தார்? 30 வருடங்கள் அல்லவா போராடினார்? என்னே போராட்டம், இப்போதுதான் ஒரு வழியாக அவரது கனவுகள் நிறைவேறிக்கொண்டு வருகின்றன.

தலைவனின் விசுவாசமிக்க தொண்டன் “கே.பி அண்ணா” முதல் பத்தில் இல்லாவிடினும் பின் வந்த இரண்டு பத்து ஆண்டுகளிலும் தலைவர் முழு மூச்சாகக் கண்ட கனவினை நிறைவேற்ற ஆரம்பித்திருக்கிறார், இதைவிட வேறு என்ன வேண்டும்?

“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்று மக்கள பணத்திலேயெ மக்களை ஊட்டி ஊட்டி வளர்த்தவர்கள் முதலில் காகிதத்தில் வரைபடம் கீறிக் காட்டிய போது அதில் பூரிப்படைந்தார்கள், அதையே இணையத்தில் ஈழம்.கொம் என்று உருவாக்கிய போது முழுத் தமிழினமே அதிர்ந்து ஆகாயத்தில் பறக்கலானார்கள்.

தேசியப் படம், தேசியக் கொடி, தேசிய வானொலி, தேசியத் தொலைக்காட்சி என்று தமிழீழ விஸ்தரிப்பை மேற்கொண்ட போது பூரித்துப்போன தமிழினம், ரணிலின் தயவால் பேச்சு வார்த்தை மேடையில் சம அந்தஸ்து கிடைத்ததும் வானத்தில் மிதக்கும் நிலைக்கே போனார்கள்.

“தமிழீழம் இனி கிடைத்தே ஆகும்” என்ற நம்பிக்கையில், மாற்றுக் கருத்து, புலி தவிர்ந்த வேறு இயக்கங்கள்,அமைப்புகள், பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள், கோயில்கள் என்று அனைத்தையும் தமது பிடிக்குள் சுவீகரம் செய்ய முன்பை விட அதிக கோரத்துடன் செயற்பட்டார்கள், கைப்பற்றினார்கள்.

இந்த நிலையில், புலி தவிர்ந்த அல்லது புலியின் பெயரால் அறியப்பட்ட இணையங்கள், வானொலி தொலைக்காட்சி மற்றும் அமைப்புகள் தவிர்ந்த வேறு எந்த அமைப்போ, தனி மனிதனோ தம் இனத்துக்காகப் பேசும் உரிமையைக் கூட மறுக்கப்பட்டிருந்தான் என்பது காலத்தால் மறுக்கப்படக்கூடாத ஒரு உண்மையாகும்.

மண்ணைப் பார்க்கச் சென்றவர்களின் கைதுகள், ஏ9 வரி வசூலிப்புகள், எப்போவாவது புலிக்கு நிதி தர மறுத்தவர்கள் ஊருக்குப் போன போது அவர்களின் பங்கர் வதைகள், உலக வல்லரசுகளுக்கெல்லாம் சவால்கள், என்று ஒரு பக்கத்தில் புலிகள் பலவீனமடைந்து கொண்டு போனாலும், மறு பக்கத்தில் தமது ஆதரவாளர்கள் ஏறத்தாழ வாய் மூடி, அவர்கள் செய்யும் அத்தனையையும் ஆதரிக்கும், மற்றும் நியாயப்படுத்தும் நிலையில் இருப்பதனால் மிகவும் களிப்படைந்து கொண்டார்கள்.

சர்வதேசம் என்பது வெறும் வெளியுறவு மாத்திரமே, நம் மக்களின் உழைப்பை உறிஞ்சுதல் மாத்திரமே நம்மை நிலைக்கச் செய்யும் எனும்  கொள்கையை அவர்களும் சரிவரக் கையாண்டதால், இந்த ஆதரவாளாகள் என்னதான் செய்தாலும் அதைப் புலியின் பெயரால் மனிதத்துக்கு எதிராகப் பலியும் கொடுத்தார்கள்.

இப்போது இதுவெல்லாம் வரலாறாகிவிட்டது.

ஆயுதப் போராட்டம் எனும் மாயையை நிறுவிக் காப்பாற்றிய பிரபாகரனுக்கு, அதைத் தொடரும் பலமும் அற்றுப்போன மிக முக்கியமான கால கட்டம் இவைகள். வரலாறு என்பது பல காலங்களின் தொகுப்பு எனும் அடிப்படையில் கடந்த கால சம்பவங்களும் தொட்டுப்பார்க்கப்படும் அவசியம் வருகிறது.

எனவே, தமிழீழம் எனும் மாயையை புலி தவிர்ந்த அனைத்து தரப்பும் புலியிலிருந்து ஏறறுக்கொள்ளத் தவறியதனால், அதைப் பெற்றுத்தந்தால் புலி தான் பெற்றுத்தரும் எனும் கருத்து பலம் பெற்றது.

மக்கள் நம்பிக்கை இப்படியாக இருந்தாலும் வேலுப்பிள்ளை மகனின் நினைப்பு அப்படியிருக்கவில்லை, மக்களை ஒரு மாயையில் வைத்து ஒரு Virtual உலகத்தை, அதாவது உண்மையில் இல்லாவிடினும் செயற்பாட்டு ரீதியாக உண்மையாக இருப்பது போன்ற ஒரு பிரம்மையை உருவாக்கிக் காண்பித்தால் போதும் எனும் கொள்கைதான் அவரை,அவரது சித்தார்ந்தத்தை ஆட்டிப்படைத்தது.

இலங்கை எனும் நாட்டிலிருந்து ஒரு பகுதியைப் பிரிக்க முடியுமோ இல்லையோ வரைபடத்தில் உருவாககிய தமிழீழத்தை வைத்து நன்றாக வியாபாரம் செய்து அதன் வருமானத்தில் பெருப்பித்துக்கொண்ட இந்த மாயையை மக்கள் நம்பினால் போதும், அதில் அவர்கள் முதலிட்டால் போதும், நமக்கு நிரந்தரமான வருமானம் வந்தால் போதும் என்று “போராட்டம்” சுருங்கிக் கொண்டது.

ஆதரவாளர்களும் சளைக்காமல் தமிழீழ வைப்பகத்தில் எல்லாம் வைப்புச் செய்தார்கள், சில ஆண்டுகளின் மீளத்தருகிறோம் என்று அவர்கள் கடன் கேட்டபோது, வட்டியுடன் திரும்பக் கிடைப்பதாகவும் கூறி கடனாக முதலிட்டார்கள்.

திருப்பிக்கொடுத்து விட்டோம் என்று ஒரு பட்டியலை அவர்கள் வெளியிட ஆரம்பிக்கும் போது, அட நம் புலிகள் வாங்கிய பணத்தை திருப்பியெல்லாம் கொடுக்கிறார்கள் என்று ஆனந்தப்பட்டார்கள். நம்ப முடியாவிட்டாலும், தம் போர்வையைக் கழற்ற விருப்பமில்லாததால் அதையும் நம்பித்தான் ஆக வேண்டும் எனும் கட்டாயத்தில் நம்பித் தொலைத்தார்கள்.

தமிழீழ அரச கட்டுமானம் எனும் பெயரில் புலி இயக்க கொள்கை வகுப்பாளர்கள் (அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்) மக்கள் மீது சுமத்திய அத்தனை சுமையையும் புலம் பெயர்ந்த தமிழர்கள் சுமந்து கொண்டார்கள்.

அவர்களை சுமக்கச் செய்யும் அளவில் தம் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை நிர்பந்தம் மற்றும் பிரச்சாரம் மூலமும் புலிகள் தம் காரியத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

எனவே கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடுகள் எல்லாம் புலி இயக்கத்தின் இருப்பைக் கொண்டும், அது கூறிக்கொண்ட தமிழீழ மாயையை வைத்து மக்களை மேய்ப்பதுவுமாக இருந்ததனால், தமக்கு எதிரிகள் இருக்க வேண்டும், எதிர்ப்பிரச்சாரம் இருக்க வேண்டும், அவற்றை எதிர்க்கும் திறனுள்ள உணர்வை தம் ஆதரவாளர்களுக்கு வழங்க வேண்டும், அவர்களும் அதை நம்பும் வகையில் உணர்வு மயமாக்கலை தம் கட்டுப்பாட்டுப் பகுதியில் மேற்கொள்ள வேண்டும் எனும் கொள்கைகளேயே தொடர்ந்து வார்த்தெடுத்தார்கள்.

இதன் காரணமாக பாடசாலைகளின் நிம்மதியைக் கெடுத்து குழந்தைகளை கட்டாயப் பயிற்சி பெற வைத்தார்கள், வயதான சீனியர் சிட்டிசன்களையெல்லாம் துப்பாக்கி ஏந்த வைத்தார்கள், இடைக்கிடை இலங்கை இராணுவத்துக்கும் “துப்பு” க்கொடுத்து ஏதாவது ஒரு ஆசிரமம் எனும் விளம்பரப்படுத்தப்பட்ட இடத்தில் கு்ண்டு மழை பொழியவைத்து, சில நூறு துர்ப்பாக்கிய சாலிகளை காவும் கொடுத்தார்கள்.

எனவே புலிகளின் கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரை தாம் வகுக்கும் கொள்கைகளால் யாருக்கு நன்மை என்பது பற்றிய சிந்தனை தேவையற்ற விடயம், அது எப்போதுமே புலி இயக்கத்தின் இருப்பையும், பிரபாகரன் இருக்கும் வரை அவர் தலைமையின் மகத்துவத்தை வைத்துப் பிரச்சாரம் செய்வதிலும் மாத்திரமே இருந்தது.

இக்கொள்கை வகுப்பாளர்கள், தப்பித்தவறியேனும் மக்கள் நலன் பற்றி கவலைப்பட வில்லை, கவலைப்படப்போவதும் இல்லை என்பதைக் கடந்த காலங்களில் மிகத் தெளிவாக நிரூபித்திருக்கிறார்கள்.

இவர்களது இந்த நிலையை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொண்ட பிரபாகரன் ஒன்றில் அவர்களை தட்டிக்கொடுத்து ஆதரித்தார் அல்லது அவர்களால் ஆட்டுவிக்கப்பட்ட ஒரு பொம்மை என்பதால் கார்த்திகை 27 தவிர வேறு எப்போதும் வாய் திறக்க முடியாமல் இருந்தார் என்பதே உண்மையாக இருக்க முடியும்.

இதில் பிரபாகரனின் வீரத்தைப் பற்றிப் பேசுபவர்களால் அவர் ஒரு பொம்மை என்பதை ஏற்றுக்கொள்ளத் திராணியிருக்காது, எனவே அவரே இவர்களைத் தட்டிக்கொடுத்து மக்கள் மீது சுமைகளை சுமத்திவிட்டு சுகம் அனுபவித்த பங்காளி என்று தான் ஏற்றுக்கொள்ளலாம்.

இல்லை அவர் பொம்மைதான் என்று ஏற்றுக்கொண்டால் முழுத் தவறையும் இந்தக் கொள்கை வகுப்பாளர்களின் தலையில் போட்டு விட்டு பிரபாகரனைப் புனிதனாக்கலாம், இதில் எதை அவர்கள் செய்தாலும் இரண்டுமே அப்பாவி மக்களின் உணர்வுகளோடு விளையாடிய அர்த்தமற்ற தமிழீழப் போராட்டமாகவே மாறுவதை மறு பக்கத்தில் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

எனவே, மக்களுக்கான ஒரு மண்ணின் போராட்டம் என்ற நிலையை விட்டு புலிகளின் சித்தார்ந்தம் எப்போதோ விலகிச் சென்று ஒரு Virtual Reality உணர்வை உருவாக்குவதன் மூலம் அனைத்தையும் சாதிக்கலாம் என்ற நிலையை மிகத் தெளிவாக அடைந்தது.

ஆகக்குறைந்தது, பிரபாகரனின் இந்தக் கனவாவது இப்போது நிறைவேறப்போகிறது!

கே.பியை தலைவனாக ஏற்றுக்கொள்வதா இல்லையா எனும் குழப்பம் இன்னும் தீராவிட்டாலும், தற்போது தமிழீழப் புற நிலை அரசு ( an Exile Government ) என்ற கே.பியின் புத்தம் புது அறிக்கை, எஞ்சியிருக்கும் புலி ஆதரவாளர்களுக்கு ஆறுதலைக் கொடுக்கிறது.

ஒரு பேச்சுக்காக, ஒற்றுமை மற்றும் சகல தரப்பும் சார்ந்த ஒரு ஆணைக்குழுவை உருவாக்குவது போன்ற திட்டங்களை முன் மொழிந்தாலும், நடை முறையில் புலி சாராத, புலிக் கொள்கை வகுப்பாளர்களின் நலன் சாராத மக்கள் நலன் பற்றிய அக்கறையுள்ளவர்களின் முகங்களை இப்படியொரு குழு கொண்டிருக்கவில்லை என்றால் இந்தப் புற நிலை அரசு எனும் கே.பியின் திட்டமே புறந்தள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

மக்கள் நலன் சார்ந்த கொள்கையுள்ளவர்கள், புலி இயக்கத்தின் அடி மட்டத்திலோ அல்லது புலியின் பெயரால் நாடாளுமன்றங்களில் இருக்கும் எந்தவொரு கூத்துக்காரருக்கோ அல்லது புலியின் பெயரால் வானொலிகளில், பத்திரிகைகளில் ஆய்வறிக்கைகள் மற்றும் வீரமூட்டிய ஆசிரிய,பேராசிரியர்களுக்கோ, யாருக்குமே கடந்த காலங்களில் இருந்திருக்கவில்லை என்பதால் இதே மனிதர்கள் மீண்டும் நேரடியாகவோ,மறைமுகமாகவோ ஈடுபடும் எந்தவொரு புற நிலைத் திட்டமும் நிராகரிக்கப்படப்போகும் ஒரு திட்டமாகும்.

சர்வதேசத்தின் முன் வேறு ஒரு முகம் காட்ட என்னதான் முயற்சி செய்தாலும், புலி எனும் முத்திரை இருக்கும் வரை இது பணக்கறப்பின் புதிய அத்தியாயம் என்பதை முதலிலேயே உணர்ந்து கொள்ளப் போகும் சர்வதேச சமூகமும் கே.பி அன் கோவின் புத்தம் புதிய நாடகத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

புலியினால் பாதிக்கப்பட்ட, புலியின் சித்தார்ந்தத்தில் வெறுப்படைந்த, புலியின் 30 வருட கால போராட்டத்தில் நம்பிக் கிடந்து ஏமாந்த,தமிழுணர்வின் பெயரால் சாகடிக்கப்பட்ட யாருமே ஏற்றுக்கொள்ளப் போகாத புதியதொரு பம்மாத்தை மீண்டும் புலியின் கொள்கைகளை வகுத்த அதே கொள்கை வகுப்பாளர்கள் மக்கள் முன் கொண்டு வரும் போது, புலி எதையும் செய்யவில்லை என்ற ஏமாற்றத்தில் மற்றவர் முன் போக முடியாமல் தவிக்கும் தீவிர புலி ஆதரவாளர்களைத் தவிர வேறு யாரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அதற்கு ஒரே காரணம், இது மீண்டும் புலியின் செயற்பாடாக அமையப்போவதாகும்.

புலி உயிர்த்தெழுவதும், புலியின் செயற்பாடுகள் மீளக்கட்டியெழுப்பப்படுவதும் இலங்கையில் சாத்தியமில்லாத விடயமாகிப் போன நிலையில், மீண்டும் புலியும் அதன் செயற்பாடும் உயிர்த்தெழுவது என்பது எஞ்சியிருக்கும் தீவிர புலி ஆதரவாளர்கள் மத்தியில் மட்டுமே சாத்தியப்படப்போகிறது.

அவர்களில் இருந்தாவது ஆரம்பிப்பதன் மூலம், மீண்டும் விட்டுப்போன தம் வருமான வழிகளை திறந்து கொள்வதைத் தவிர உண்மையான ஒரு புற நிலைக் காரணியை புலியின் தலையீடு இருக்கும் வரை தமிழ்ச் சமூகம் ஒற்றுமையுடன் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

முழு நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நிலம் கையில் இருக்கும் போதே சாத்தியமற்றுப்போன தமிழீழத்தை புற நிலை அரசொன்றை உருவாக்கி அதன் மூலம் சர்வதேசத்தில் நிலைபெறச்செய்வது என்பது எங்குமே எடு படப்போவதில்லை என்பது புலியின் கொள்கை வகுப்பாளர்களுக்கே நன்றாகத் தெரிந்த விடயம்.

இந்தக் காரணத்தை யோசிக்கும் ஒவ்வொரு முன் நாள் புலி ஆதரவாளரும் இந்த விடயத்தில் இருந்து தன்னை விலக்கி வைத்துக்கொள்ளவே விரும்புவார்.

அப்படியிருக்கும் போது, கே.பியின் கொள்கையில் அவர்கள் அடையும் நன்மைகள் இரண்டு அடிப்படையில் இருக்கும், அவை இரண்டும் கூட அவர்களின் வங்குரோத்து ஊகத்தின் வெளிப்பாடு மாத்திரமே.

1. தம் வருமான வழிகளுக்கான புதிய முன்னரங்குகளை உருவாக்குதல்.

2. தலை கீழாக நின்றாலும் மஹிந்த அரசை தமிழினத்துக்கு விரோதமான அரசாக இனி வரும் வரலாற்றில் நிரூபிக்க முடியாத வங்குரோத்து நிலையாக இருந்தாலும், ஆகக்குறைந்தது அங்கு தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளப் போகும் வாழ்க்கைக்கு தாமும், தம்முடைய இவ்வகையான செயற்பாடுகள் மூலம் கொடுக்கப்பட்ட அழுத்தமுமே என்று மீண்டும் சுய இன்பம் காணச் செய்து, தமது ஆதரவாளர்களை குஷிப்படுத்தி, அதன் மூலம் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளல்.

இவை இரண்டையும் அடிப்படையாகக் கொண்ட வெற்றுத் திட்டமாகவே புலிக் கொள்கை வகுப்பாளர்களின் மக்கள் நலன் எனும் பேச்சு கணிக்கப்படும்.

இனிமேலும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை வகுக்கப்போவதாக அறிக்கை விடும் தகுதி கூட இல்லாத புலிகள் புற நிலை அரசு பற்றி பேசுவதெல்லாம் வெறும் பம்மாத்து என்பதை சிறு குழந்தை கூட அறியும்.

அப்படியிருக்க, மீண்டும் புலிக் கொள்கை வகுப்பாளர்கள் தம்மைப் பெரும் அறிவாளிகளாகக் காட்டிக்கொள்ள முன் வருவது மிகப் பெரும் காமெடியாகும்.

புற நிலை அரசு என்று வரும் போது, அதற்கான தலைமை தாங்குவது யார் என்ற மிக அடிப்படையிலான கேள்வியில் இருந்து ஆரம்பித்து, ஆகக்குறைந்தது அங்கே கருத்து சுதந்திரம் எந்தளவு இருக்கும் எனும் கேள்வியிலிருந்து விரிவடைந்து, இறுதியில் புலி ஆதரவாளர்கள் தவிர்ந்த வேறு யாரெல்லாம் இதில் பங்கெடுப்பார்கள் என்ற சந்தேகத்தில் தொக்கு நின்று, உலகமே பயங்கரவாதிகளாக அறிந்த இவர்களால் எதைச் சாதிக்க முடியும் எனும் சலிப்பு அதிகரித்து, இதன் பேரில் நிதி திரட்டாமல் இவர்கள் விடப்போவதில்லை, அவ்வாறான சந்தர்ப்பத்தில் தற்போது கஷ்டப்படும் மக்களுக்கு உதவுவது சிறந்ததா என்று மக்கள் சிந்திக்க ஆரம்பிக்கும் போது இந்தக் கோமாளித்தனம் முழு அளவில் அம்பலமாகும்.

இந்நிலையைத் தடுத்து,  இவர்களால் செயற்பட முடியுமா என்று பார்த்தால் “புலி” எனும் முத்திரையோடு அது எப்போதும் முடியாத ஒரு காரியம் எனும் மிகத் தெளிவான பதில் உடனடியாகக் கிடைக்கும்.

இவர்கள் கூறிக்கொள்வது போல அப்படியொரு அங்கீகாரம் புலி எனும் அமைப்புக்கு இதுவரை இருந்திருந்தால் அல்லது புலி எனும் அமைப்பு மக்களுக்காகத்தான் போராடுகிறது என்று உலக நாடுகள் இவர்களது போராட்டத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் தலைவர்,தளபதிகள் சகிதம் கூண்டோடு அழிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

எத்தனை நாட்கள் தொடர்ச்சியாக காட்டுக்கத்தல் கத்தியும், உண்ணாவிரதம் இருந்தும், ஊர்வலங்கள் நடத்தியும் யாருக்குமே அது கண்ணில் படவில்லை எனும் போதே இனியும் அது கண்ணில் படப்போவதில்லை எனும் உண்மையும், அதற்கான ஒரே காரணம் “புலி” எனும் போர்வை என்பதும் மிகத் தெளிவாக வெளிப்படும்.

ஆனாலும் “புலி” எனும் போர்வைக் கழற்றி வைத்துக்கொண்டு மக்கள் முன் “தமிழீழம்” பேசுவதற்கு எஞ்சியிருக்கும் புலிப் பினாமிகள் முன் வரப்போவதில்லை, அப்படி அவர்கள் வந்தாலும் ஆதரவாளர்களிடம் அது எடுபடப்போவதில்லை.

எனவே, அவர்கள் போர்வையைக் கழற்றாமல் வைக்கப்போகும் எந்தவொரு கருத்தும் மக்கள் நலன் சார்ந்ததாக வெளியுலகிலும் எடுபடப்போவதில்லை.

இவையனைத்தையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் மீண்டும் தம் மூளைகளைக் குடைந்து, அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுக்ளோடு விளையாடும் ஒரு கிறுக்குத்தனமாகவே கே.பியின் புற நிலை அரசுப் பேச்சு கணிக்கப்பட வேண்டும்.

இவர்களால் அதாவது புலி எனும் போர்வைக்குள் இருந்து கொண்டு, புலித்தலைமை எனும் ஏக பிரதிநிதித்துவத்தில் தமிழ் மக்களை ஒன்று படுத்த முடியாது, அது காலத்தால் எப்போதுமே நடக்காத ஒரு விடயம்.

அதே வேளை புலி எனும் பேச்சு வந்தாலே அங்கே ஒன்றிணைவு பற்றி சிந்திக்கக்கூட புலி எதிர்ப்பாளர்கள் விரும்பப் போவதில்லை.

எனவே, புலி எனும் போர்வைக்குள் இருந்து செயற்பட ஆரம்பிக்க கே.பியும் உருத்திரகுமாரும் என்னதான் கூத்தாடினாலும் அது தமிழ் மக்களின் ஒன்றிணைந்த முடிவாக இருக்கப்போவதும் இல்லை, ஒன்றிணைக்கும் செயற்பாடாக இருக்கப்போவதும் இல்லை.

இப்படி அனைத்துக் காரணிகளின் விளைவுகளிலும் மீண்டும் ஒரு சுய இன்பம் காணும் புலி ஆதரவுச் சமுதாயம் தம் நேரத்தையும், பணத்தையும் வீணாக்கி, இறுதியில் தமது மக்களே தம்மை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை எனும் சலிப்பை,விரக்தியைக் காண முடியுமே தவிர வேறு எதையும் கே.பியின்,புலியின் போர்வையில் உருத்திரகுமாரின் தலைமையில் காண முடியாது.

அப்படித்தான் காண வேண்டும் என்று, உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக இவர்கள் கிளம்புவார்களேயானால், இந்தப் புற நிலை அரசு அக நிலை அரசுக்கெல்லாம் முன்னால் எதார்த்தத்தை இவர்கள் உணர்ந்து கொள்ளத் தலைப்பட வேண்டும்.

அப்படித்தான் ஒரு தமிழீழம் அமைய வேண்டும் என்று விரும்பினால், அது யாருக்காக வேண்டும்? எமது மக்களுக்காகத்தானே? அந்த மக்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எதை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்? எனும் அடிப்படைக் கேள்விகளுக்குத் தம் சுய அறிவைக் கொண்டு தேடிப்பிடித்து விடை காண வேண்டும்.

அதிலிருந்து, மக்கள் அபிலாஷைகளை அறிந்து செயற்பட ஆரம்பித்து, அந்த மக்களுக்கு புற நிலையிலோ அக நிலையிலோ தமிழீழத்தின் தேவை எது வரை இருக்கிறது என்பதைத் திட்டமிட்டு,  அந்தத் திட்டத்தை சமூகத்தில் இருக்கும் புத்தி ஜீவிகள், மக்கள் நலன் கொண்ட சமூக சேவகர்கள், மற்றும் மக்கள் அபிப்பிராயத்தைப் பெற்ற நல்ல மனிதர்கள் கொண்ட ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அவர்களுடன் கலந்தாலோசித்து, மக்கள் வேலைத்திட்டங்களில் இலங்கை அரசை எவ்வாறு வெல்லலாம் எனும் எதார்த்தமான வாதங்களில், எதார்த்தமான உண்மையான கள நிலையின் ஆதாரங்களை, நம்பத் தகுந்த முறையில் சேகரித்து அதை வைத்து இம்மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

அந்த அளவு தூரம் தம் நேரம்,உழைப்பையெல்லாம் செலவழித்து மக்கள் விடிவுக்காக, உண்மையாகப் போரட கே.பியே முன் வந்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், இவர்கள் இப்படி எந்த வித அடிப்படை ஆதாரத்தளங்களையும் உருவாக்கமால், மிகக் கவனமாக ஒரு இளைஞர் சமுதாயத்திடம் மூன்று தசாப்தங்களாக விதைத்து வந்த “சிங்களவன் எதிரி” எனும் ஒரேயொரு சித்தார்ந்தத்தை வைத்துக்கொண்டு நாகரீக உலகில் தனி நாட்டை புற நிலையில் இருந்து இயக்க முனைவது என்பது அடிப்படையிலேயே அவர்களது இருப்பும், வருமானமும் சார்ந்த விடயமாக மாறி விடும்.

எனவே இது மக்கள் நலன் சார்ந்த விடயமாகவோ அல்லது கை கூடக்கூடிய ஒரு தமிழின ஒற்றுமைக்கான ஆரம்பமாகவோ பார்க்கப்பட முடியாத ஒரு விடயமுமாகும்.

அதையும் மீறி, இதன் அடிப்படையில் முன்வைக்கப்படப்போகும் விடயங்கள் உலக அரங்கை அடைய வேண்டுமென்றால் அதில் உண்மை இருக்க வேண்டும், அதற்கான கள நிலை ஆதாரங்கள், போதியளவு சுதந்திரமான சாட்சியங்கள் என்று பல விடயங்கள் ஊகங்களுக்கு அப்பாற்பட்ட உண்மைகளாக இருக்க வேண்டும்.

அவற்றை நெறிப்படுத்திக் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கும் அளவுக்கு மஹிந்த சிந்தனையை இனி வரும் காலங்களில் பின்பற்றப்போகும் இலங்கை அரசுகளும் முட்டாள்களாகவே இருக்க வேண்டும்.

அப்போதுதான் இதுவெல்லாம் காகிதத்திலாவது சாத்தியமாக மாறும்.

இல்லாத போதும் இதைப்பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். ஏனெனில், பிரபாகரனும் கே.பியும் சேர்ந்தே கண்ட கனவுப்படி தொடர்ந்தும் ஒரு சிவப்புத் துணியில் மஞ்சள் புலிச் சின்னத்தையும், இலங்கை வரைபடத்தில் தமிழீழம் என்று நிறந்தீட்டப்பட்ட பகுதிகளையும், புலனாய்வுத்துறை, வெளியுறவுப் புலனாய்வுத்துறை, புணர்வாழ்வுக் கழகம், அபிவிருத்திக் கழகம், அரசியற் துறை, வெளியுறவுத் துறை, கொள்கைப் பரப்புச் செயலகம் அது இது என்று ஆயிரத்தெட்டு திணைக்களங்களை உருவாக்கி,  மக்களுக்க மாயை வித்தை காட்டிக்கொண்டிருக்க முடியும்.

மறு பக்கத்தில் பிரபாகரனுக்ககே ஆப்படி பட்டதன் பின்னாலும் புலியின் பெயரால் தமிழ் மக்கள் பிரதிநிதியாக கே.பி தன்னைத் தானே வெளிக்காட்டிக்கொள்ள எடுக்கும் இந்தப் பகீரதப் பிரயத்தனங்களிற்கான அடிப்படை, சர்வதேசப் போலீசும் தேடும் தான் ஒரு மக்கள் போராளி என்று தன் அந் நாள் கறைகளைப் போக்கி பிரபாகரனை மி்ஞ்சிய ஒரு நவீன போராளியாக, தமிழ் மக்களின் வீரத் தலைவனாகத் தானும் சாக வேண்டும் எனும் ஒரு நப்பாசையாகவும் இருக்கலாம்.

தமிழீழம் எனும் பெயரில் வசூலித்த பணத்தில் பல்வேறு நாடுகளில், எத்தனை வியாபரங்கள்,எத்தனை கட்டிடங்கள், எத்தனை வீடுகள்,எத்தனை கப்பல்கள்,எத்தனை நிறுவனங்கள்,எத்தனை ஆயுதக்கொள்வனவு பேரங்கள், போதை மருந்துக் கடத்தல்கள், ஆட் கடத்தல்கள்?

இத்தனை வருடங்களாகக் கட்டிக் காத்து, வளர்த்து வந்த அத்தனையையும் பிரபாகரன் இறந்த ஒரே காரணத்துக்காக அவ்வளவு சீக்கிரமாக விட்டு விடலாமா?

பெரும்பாலானவை பினாமிகளின் பெயரில் இருக்கி்ன்றன, அவர்களை இழுத்து வைத்து மீண்டும் சொத்துக்களைக் கைப்பற்றிக் கொள்வது என்றால் ஆகக்குறைந்தது ஒரு புற நிலைத் தமிழீழமாவது வேண்டாமா?

ஆக மொத்தத்தில் ஏற்கனவே முதலிட்ட எல்லாவற்றையும் மீண்டும் ஒருங்கிணைக்கும் வரையில், முரண்டு பிடித்தால் ஒரு பங்கீட்டு அடிப்படையிலாவது உடன்பாடு காணும் வரை மக்களை மாயைக்குள் வைத்திருக்க வேண்டும், அதிலிருந்தும் வரும் வருமானத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

எனவே இதன் அடிப்படையில் உண்மையான ஈழத்தில் வாழும் மக்களுக்குத் தேவையோ இல்லையோ பணங்கறக்கக் கூடிய புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு தமிழீழம் காட்டியே தீர வேண்டும்.

இதைத்தான் முன்னர் தலைவரும் செய்தார், இப்போது அவரையே வழி நடத்திய “தலையும்” செய்யப் போகிறது.

எது எப்படியோ பிரபாகரனின் கனவு நிறைவேறுகிறது ! புலி ஆதரவாளர்கள் அடுத்த கட்ட ஈழப் போருக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.

 

குறிச்சொற்கள்: , , , , , , ,

9 responses to “பிரபாகரனின் கனவு நிறைவேறுகிறது!

 1. tamilvanan

  ஜூன்17, 2009 at 3:10 பிப

  i hate this person who is writing like this what a nonsense assessment r u real tamilian if yes think once before writing and analyze i belive ur also human u also done so many mistakes all they way in your life ok so dont think ur to intiligent

   
 2. Ajmal

  ஜூன்17, 2009 at 7:34 பிப

  Excellent Article.

   
 3. SEAKUVERA

  ஜூன்18, 2009 at 12:55 முப

  Unmai Onrai Thelivaka Sonnathatku Muthalil Unkalukku Nanri!Kavanam Unkaliium THESA THOROKI aakki vida poakirarkal….Veeddukku Oru Pillaiyai Valukkaddayamaka Pidiththarkal Kodoththom,Veedu Vaasal eallam ilanthu agathiyaiim alainthom,KUNDU Paddu Koththu Koththaka Seththom.Thappi Varupavarkalium Pinnal Niru Sudderkal..?inru Naathi yattu Antha Vanni Makkal?eanna seitheerkal?30 varudamaka? NALLA ALAMAANA ULAGA SINTHANIYODU ELUTHIYERUKKIREERKAL,PAARAADDUKIREN. Tholan SEKUVERA

   
 4. Kiruba

  ஜூன்18, 2009 at 1:49 முப

  100% true. But it is difficult to accept by the foolish people who live in outside SL. They will never realize the reality in SL and Tamil people. May be they don’t have anyone in the IDP and not heard about what they think about the Ealam. If they are bold enough to go and speak with the people who lived in Vanni for the last 2 years they will give the good answer to these nonsense freedom fighters from out side Ealam. The real stupidity is now we see compare to Pirabakaran’s policy this is the most foolish cheating business in western world. The future generation will also going to suffer though they are in good countries and have good opotunities to study well and do good to the nation. Poison has already given to the youth. Please leave us to live a good life because we have only one life and not ready to loose it anymore. Enough for 25 years of bitter feeling that we had already.

   
 5. yoga

  ஜூன்18, 2009 at 9:48 முப

  The writer is a Karuna group person, he is getting money from Rajapakshe. He is not tamilian, if he is a tamilian then he will understand IDP sufferings and Singalise goverment killings.

   
 6. uma

  ஜூன்18, 2009 at 10:27 முப

  Shame on you. Do u think u are very intellengent?U are not real tamilan shoud be sinha—.How much money have you got from Sl govt.You always blaming LTTE.They are the freedom fighters.sacrefice their lifes.What did you do the tamil people. Did you mention any word about the people are suffering in the concentrations camps.Even the young generation is fighting for those people’s freedom.But you guys are betrayers,cheaters. Stop blaming LTTE.Take some action immediately.Why don’t you ask your coolipadai leaders like Karunai or Douglas to help those innocent people.Without LTTE Or Prabaharan you can’t run your business.More than 80,0000 tamil people still following our Leader’s steps.

   
 7. உமா

  ஜூன்18, 2009 at 1:47 பிப

  THIS ARTICLE IS 100% TRUE. I HAVE A QUESTION TO WHO ASKS THAT THE ANTI LTTE WRITERS ARE GET PAID BY GOVT OR WHO ASKS ARE YOU A REAL TAMIL, YOU ALL ARE NOT IN REAL WORLD. YOU PEOPLE ARE MAD. YOU NEED THERAPIES. STOP DREAMING AND TRY TO COME TO THE REAL WORLD OR LET THE OTHERS TO LIVE PEASEFULLY WHAT WE MISSED FOR 30 YEARS.

  REALLY SHAME ON YOU UMA.

  THANKS

  UMA

   
 8. sekaran

  ஜூன்20, 2009 at 6:45 பிப

  கேபி நம்பர் வன் கில்லாடி. அவர் தான் ‘தலைவரையும்’ நம்பவைத்து விஷயத்தை கச்சிதமாய் முடித்துவிட்டார் என்று பரவலான ஒரு கதை வெளிநாட்டு புலிகளிடம் உலவுகிறது. யார் கண்டார்? அது சரி. கேபியை எப்படி ‘அப்பப் போகிறார்கள்’? ரஜினி கூடப் போடாத மேக் அப் போட்டுக்கொண்டு திரிகிற ஆளாச்சே. காஸ்ட்ரோவை கைக்குள் போட்டுக்கொண்டால் ஒருவேளை கண்டு பிடிக்கலாமோ? கோத்தபாயவுக்கு யாராவது இந்த ஐடியா கொடுக்கலாமே.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: