RSS

இதுதான்டா அரசியல் !

28 மே

தலைப்பு ஏதோ டாக்டர் ராஜசேகரின் டப்பிங் படத்தின் தலைப்பு என்று நினைத்துவிடாதீர்கள், இது நிஜத்தில் நடந்தேறியிருக்கும் ஒரு “வரலாறு”.

ஒரு பலவீனமான அரசின் நிழலில் குளிர் காய்ந்து தம் “இருப்பைப்” பாதுகாத்துக்கொண்ட இயக்கம் தான் விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதை நாம் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறோம்.

தென் பகுதியின் பலவீனத்தைப் பாவித்து, வடபகுதிக் காட்டுக்குள் இருந்து ஒரு கனவு ஈழத்தை மக்கள் மீது திணித்த கொள்ளையர் கூட்டமாகவே பிரபாகரன் அன் கோ கணிக்கப்பட வேண்டும் எனும் அளவுக்கு இன்றைய அரசியல் சூழ்நிலைகள் மாறிக்கொண்டு வருகின்றன.

இதில் உடன்பாடு இருந்தாலும், இல்லாவிட்டாலும், நடந்தேறும் பிரபாகரனுக்கு பின்னான அரசியல் மாற்றங்கள் இப்படியொரு வலுவான கருத்தை சொல்ல ஆரம்பித்துள்ளன.

எல்லாவற்றிற்கும் பிரதானமாக பிரபாகரன், போராடி மடியவில்லை என்கின்ற உண்மை தற்போது விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது.

முதல் நாள் பிரபாகரனின் மரணச் செய்தியும், படங்களும் வெளிவந்த போதே அவர் துப்பாக்கிச்சூட்டுக்குள்ளாக்கப்படவில்லை மிகவும் அருகில் வைத்து வேறு வகையில் தாக்கப்பட்டுள்ளார் எனும் எமது கருத்தை முன் வைத்தோம், நாளடைவில் தொடர்ந்த அனைத்து இடங்களிலும் இதே கருத்தையே வலியுறுத்தியும் வந்தோம்.

இதற்கான மிகப்பிரதான காரணம், பிரபாகரன் இறுதி நேரத்தில் நிச்சயமாக பேராட மாட்டார், ஆனால் சரணடைவார் எனும் எமது நம்பிக்கையாகும்.

அதற்கான காரணம், பிரபாகரன் ஒரு இராணுவ வீரனாக இருந்த காலங்கள் மறைந்து ஒரு சந்தர்ப்பவாத அரசியல் வாதியாக உருவெடுத்ததாகும், இது தொடர்பிலும் பல்வேறு இடங்களில் வலியுறுத்தியிருந்தோம்.

தமிழகத்தின் வை.கோ, திருமாவளவன், ராமதாசுக்கு சற்றும் குறையாத ஒரு சந்தர்ப்பவாத அரசியலையே பிரபாகரனை தென் பகுதி அரசின் பலவீனத்தைப் பாவித்து செய்து வந்தார்.

அதன் பின்னான ஒரு பலமான அரசு அமைந்ததும், உலகிலேயே எந்த ஒரு ஆயுதக் குழுவும், கிளர்ச்சியாளர்களும் கண்டிராத அளவு ஆயுதங்களை வைத்திருந்தும், இராணுவத்தின் கால்களில் சிக்கி “அம்மணமாக்கப்பட்டார்”.

லட்சோப லட்ச மக்களின் பணத்தில் குளிர்காய்ந்த அவரது அரசியலுக்கு, மிக மிக உயர் தரத்திலான ஒரு “அரசியல்” மூலம் சூடான பாடத்தை வழங்கிய மஹிந்த அரசை குறை கூறுபவர்கள், அதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்த பிரபாகரனது அரசியலையும் அறிந்து கொண்ட பின் தான் குறை கூற வேண்டும்.

இராணுவ சீருடையில் இருந்தாலும், முழுக்க முழுக்க “தந்திர” அரசியலை மையப்படுத்தி, தமது ஆதரவாளர்களை “மந்தைகளாக்கி” அவர்களது விழிப்புணர்வை சிதைத்து, சிந்தனைகளை இராணுவ மாயைக்குள் வைத்திருந்து, புலிகள் செய்த அரசியல் போற்றப்பட வேண்டும் என்றால், மஹிந்த அரசாங்கம் இன்று சர்வதேசத்தில் அரங்கேற்றியிருக்கும் அரசியலின் தரம் அரியாசனத்தில் வைத்து அழகு பார்க்கப்பட வேண்டும்.

இது இரண்டிற்கும் வெளியால், மக்கள் நலன் சார்ந்து இந்த இரு அரசியல் வியூகங்களையும் ஆராய்ந்தால், இரண்டு உண்மைகள் வெளிவரும்.

 1. புலிகளின் வங்குரோத்து அரசியல்
 2. இலங்கை அரசின் நவீனமயப்படுத்தப்பட்ட அரசியல்

இதில் எதன் மூலம் மக்கள் தம் நன்மைகளை அடையலாம் என்று சிந்தித்தால், அது இலங்கை அரசின் நவீனமயமாக்கப்பட்ட அரசியலில் தமது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க இப்பொழுதிருந்தே திட்டமிடல் மூலம் மாத்திரமே இது சாத்தியமாகும் என்பது புலப்படும்.

புலிகளின் வங்குரோத்து அரசியல் எந்தக் காலத்திலும் மக்கள் சார்ந்ததாக இருந்ததில்லை, மாறாக மக்களை பலவந்தமாக அணிவகுத்து அவர்கள் கைகளில் துப்பாக்கிகளையும், தலைவா போரிட ஆணையிடு எனும் பதாதைகளையும் மாத்திரமே வழங்கியது.

நவீன அரசியல் நீரோட்டத்தை எதிர்கொள்ளத் தவறினால் நாளை மீண்டும் நாம் உரிமையிழந்தோம், உடைமையிழந்தோம் என்ற காட்டுக்கத்தல் மட்டுமே கத்த முடியும்.

எனவே, ஒன்று பட்ட இலங்கைக்குள் நம் உரிமைகளைக் காப்பாற்றி, சுய மரியாதையுடன் வாழ்வதே இன்றைய காலத்தின் எதிர்காலத் திட்டமாக இருக்க வேண்டும்.

பிரிவினைவாதம் எனும் அரசியல் அத்தியாயத்தின் பின்னால் நிராகரிக்கப்பட்ட ஒரு சமூகமாகக் கடந்த முப்பது வருடங்களை நாம் கழித்திருக்கிறோம், அதன் மூலம் நாம் இதுவரை தனிப்பட்ட ரீதியில் அடைந்த ஒரே இலாபம், மேலை நாடுகளில் அகதித் தஞ்சம் கோருவதற்கு சொல்லக்கிடைத்த காரணங்கள் மாத்திரமே.

அதன் மூலம், சமூகத்தின் ஒரு சாரார் தம் வாழ்க்கையை மேம்படுத்திக்கொண்டார்கள், எனினும் அவர்களின் வர்த்தகமயப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் வாழப்பழகியதன் மூலம் இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, ஏறத்தாழ அவர்களும் ஈழத்தீவில் வாழும் மக்கள் நிலையிலேயே ஆனால் வேறு ஒரு தரத்தில் வாழ்கிறார்கள்.

கிரடிட் கார்டுகளும், வங்கிக் கடன்களும் இல்லாமல் அவர்கள் வாழ்க்கை எந்த அளவு தூரம் நகர்ந்து செல்லும் அல்லது நகர முடியும் என்று ஒரு தனி அலசலை மேற்கொண்டால் இந்த வாழ்க்கை மீது மோகங் கொண்டோருக்குப் பல விடயங்கள் தெரியவரும்.

எனவே இதைப் புறந்தள்ளிவிட்டு, நவீனமயப்படுத்தப்பட்டிருக்கும் அரசியல் நிலைப்பாடுகளை எதிர்கொள்ளத்தயாரவதே தமிழர்களை வழிநடத்துவோருக்கும், மக்களுக்கும் இன்றைய தேவைகளாகும்.

இன்றைய சர்வதேசசூழல் கடந்த காலங்களை விட வித்தியாசமான ஒரு கோணத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது.

நாளடைவில் அண்மைய உலகப் பொருளாதார நெருக்கடிக்கு முன், அதன் பின் என்று இரண்டு வகையில் இந்நிலை பிரிக்கப்படும்.

அதன் அடிப்படையில் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னான தற்போதைய காலத்தில் சர்வதேச அரங்கில் “பலம் படைத்த” சக்திகள் மாற்றம் பெற்றுக்கொண்டு வருவதை மிக உன்னிப்பாக அவதானித்தால் நீங்களும் அறிந்துகொள்ளலாம்.

அபிவிருத்தியடைந்த நாடுகளை எப்போதுமே சுரண்டி வாழ்ந்த முதலாளித்துவம் இன்று தம் நிலைகளை மாற்றி தம்மை நிலைப்படுத்திக்கொள்வதற்காக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் காலடியில் விழவும் தயாராக இருக்கின்றன.

தம் வளங்களோடு சந்தர்ப்பம் பார்த்து அமைதியாக இருந்து வந்த சக்திகளும் அவ்வப்போது உலக அரங்கில் இந்தப் பலப் பரீட்சையில் பங்கெடுத்து, தமது பலத்தையும் நிரூபித்து வருகின்றன.

சர்வதேச அமைதியில் மிகப் பெரும் குழப்பத்தை உருவாக்கி அதைத் தொடர்ந்தும் பேணி வரும் இஸ்ரேல் போன்ற நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையிடும் போதே அதன் பின்ணனி பற்றி ஆராயப்படவேண்டும்.

அமெரிக்காவின் செல்லப்பிள்ளை நோர்வே தூக்கியெறியப்பட்டதும், வேறு ஏதாவது ஒரு வகையில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டை இலங்கையில் அதிகரிக்கச் செய்ய முனையும் வல்லாதிக்க அரசுகள் வேறு வழியே இல்லாமல் இஸ்ரேலை இங்கே நுழைத்துவிட முடிந்தது இறுதியில் கோமாளித்தனமான ஒரு முடிவாக மாறிவிட்டது.

ஐ.நா மனித உரிமை அமைப்பு என்பது ஒரு சுதந்திரமான அமைப்பாக இயங்க வேண்டும், அதே போன்று சர்வதேச நலனில் அனைத்து நாடுகளின்,அனைத்து சமூகங்களினதும் நலன்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் பக்க சார்பற்ற ஒரு “அமைப்பு” அமைந்தே ஆகவேண்டும்.

உலக நாடுகளை ஒன்றிணைக்கும் ஐ.நா சபையில் பலம், அதீத பலம், பலவீனம் என்று பல பிரிவுகள் உருவாக்கப்பட்டது மேலைத்தேய ஆதிக்கக் கொள்கைகளின் விளைவிலாகும்.

அந்த ஆதிக்க நிலையை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு சென்று தாம் ஆதிக்கத்தைச் செலுத்தி, தாம் விரும்பும் திசையில் பொருளாதாரக் கொள்ளைகளை மேற்கொள்வதுதான் இவர்களது திட்டங்களாக இருந்தது.

எனினும், தற்கால சூழல் மாற்றம் இவர்களுக்குப் பதிலாக வேறு சக்திகளை உலகில் மறைமுக ஆதிக்க சக்திகளாக உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

நேற்றைய ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வு நவீனமயப்படுத்தப்பட்ட இலங்கை அரசியல் வியூகத்திற்கு மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது.

அதன் வெற்றிக்குப் பின்னால், உண்மை பொய்களைத் தவிர்த்த சர்வதேச அரசியல் நிலைப்பாடும் சேர்ந்தே அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது.

தற்கால அரசியல் சூழ்நிலையைச் சரிவரப்பயன்படுத்தி ஒரு முதிர்ச்சியடைந்த போராட்டத்தை மிகக்குறைந்த காலகட்டத்திற்குள் துடைத்தெறிந்ததானது இலங்கையின் நவீன மயப்படுத்தப்பட்ட அரசியலுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

இப்போது நம் தேவை அதைப் புகழ்ந்து கொண்டிருப்பதல்ல, இந்த எதிர்கால அரசியற் சூழ்நிலைகளுக்கு நம் மக்கள் எவ்வாறு முகங்கொடுப்பது என்பதாகும்.

அரசியல் “ஞானம்” என்றால் சூனியமாகவே இருக்கும், அறிக்கை வீரர்களைக் கொண்ட வெற்று அரசியல் சூழலை வைத்துக்கொண்டு இனி வரும் காலத்தை எவ்வாறு எதிர்கொள்வது, மக்கள் உரிமைகளை எவ்வாறு வென்றெடுப்பது என்பதாகும்.

வாழ்வுரிமையைப் பற்றிப் பேசிப் பேசி அரசியல் நடத்தும் தேவையை இனி வரும் இலங்கையின் எதிர்காலம் தமிழ் அரசியல் வாதிகளுக்கு வைக்கப்போவதில்லை.

சர்வதேசத்தில் மேலோங்கியிருக்கும் தமது நிலைப்பாட்டிற்குச் சாதகமாக அந்தப் பக்கத்தை மிக உறுதியாகச் செயற்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கவனமாக இருக்கும்.

சம உரிமை எனும் பக்கத்தில் நடந்ததை விட நடப்பது மேல் என்று தம்மைத்தாமே தேற்றிக்கொள்ளும் முதற்கட்டத்தையும், இருந்ததை விட கிடைப்பது மேல் என்று இரண்டாம் கட்டத்தையும், அதுவும் வேண்டாம் இதுவும் வேண்டாம் என்று பெற்றுக்கொள்ளும் வசதியுடன் தமது சொந்தப் பலாபலன்களால் மேலோங்கும் வாழ்க்கைத் தரத்தை மட்டும் நம்பி வாழ்ந்துவிட்டுப்போகும் ஒரு கட்டத்தையும் அடைந்து, அதன் பின்னர் “தமிழ்” மக்களுக்கு என்று தனியாக நீங்கள் வைக்கும் கூட்டணிகளைத் தூக்கியெறிந்து விட்டு நாட்டின் பிரதான அரசியல் நீரோட்டத்தில் வெறும் அபிப்பிராயங்களை வெளியிடும் ஒரு அமைதியான சமூகமாக மாறும் அதற்கடுத்த நிலையையும் நோக்கியே இன்றைய அல்லலுற்று அனாதைகளாகி வந்த மக்களின் நிலை மாறிச்செல்லும்.

அவர்கள் இந்த நிலையை அடைந்ததும்,அதில் தம் குறுகிய அரசியல் தந்திரங்களால் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க நகரசபை, மாநகர சகை, மாகாண சபை, உள்ளூராட்சி சபை மற்றும் நாடாளு மன்றம் என்று அவர்களது வாக்குத் தெரிவால் தம் வாழ்க்கையை அனுபவித்துக்கொள்ள ஒரு சாரார் கிளம்புவர்.

வாழ்வதே போதும் என்ற வடு சுமந்த வாழ்க்கையின் பலனாக யாருக்காவது, எதற்காகவாவது வாக்களித்து விட்டுத் தம் வேலையைப் பார்க்கச் செல்லப்போகும் அந்த சமுதாயம் விரும்பியோ விரும்பாமலோ தம் உரிமைகளையும் பறிகொடுத்துக் கொண்டே செல்லும்.

இந்த கால கட்டத்தில் மிகக் கவனமாக பொருளாதாரக் கொள்ளையர்களின் பலம் பிரதேச வாரியாக மேலோங்கும்.

அதன் விளைவாக இவர்களது உழைப்புகள் சுரண்டப்படும் அபாயம் கூட இந்த அரசியலின் கண்களுக்கு சில காலங்களுக்குத் தெரியாமல் போகும், அதற்கான காரணம் இந்த உழைப்புக்குப் பயனாக அவர்களுக்குக் கிடைக்கப்போகும் வாழ்க்கை மாற்றமாகும்.

கடந்த காலங்களோடு எப்போதும் ஒப்பிட்டுப் பார்க்கும் அந்தத் தலைமுறை , இப்போது கிடைக்கும் அந்த வாழ்க்கையை தமக்கான ஒரு விடுதலையாகவே நினைக்கும்.

எனவே, அவர்களது சிந்தனைகள் அன்றாட வாழ்க்கையின் போராட்டங்களோடு ஒடுங்கிக்கொள்ளும்.

இன்றைய நிலையில் ஒப்பிடும் போது, அந்த நிலை அவர்களுக்கு நல்லதாகப் படலாம், ஆனால் அவர்களது சமூக மேம்பாடு அங்கே மிகப்பெரிய ஒரு கலாச்சாரக் கலப்புடன், இலங்கையின் கலாச்சாரமும் இல்லாமல், இந்தியாவின் கலாச்சாரமும் இல்லாமல், பன்நாட்டுக் கலவையாக அமைய ஆரம்பிக்கும்.

இந்த நவீன வடிவம் மறுக்க முடியாத ஒரு மாற்றமாக எதிர்காலத்தில் நிகழப்போகிறது.

இம்மாற்றத்தின் போது, நடு நிலைப்படுத்தப்பட்ட மத்திய அரசாங்கம் ஒன்றின் தேவையைத் தவிர வேறு தேவைகள் மக்களுக்கு இருக்கப்போவதில்லை.

மத்தியில் இவர்களது பிரதிநிதித்துவம் விகிதாசார ரீதியில் எந்தவித பயனையும் தரப்போவதில்லை, மாறாக பிரதேசப் பிரதிநிதித்துவம் வலுவானதாகவும், முறையானதாகவும், கொள்கைகள் நிலைப்படுத்தப்பட்டதாகவும் அமைதலின் தேவை வரும்.

“இலங்கையைப் போல் ஒரு சிங்கப்பூரை உருவாக்குவேன்” என்ற லீ யின் கருத்துக்கள் மாற்றமடைந்து , சிங்கப்பூர் போல் இலங்கை உருவாகி விட்டது என்கிற ஒரு கருத்து மஹிந்தவின் சிந்தனையில் பதிந்தாலும் பதியப்படலாம்.

இந்த அரசியலைப் புரிந்து கொண்டதும், அதன் காழ்ப்புணர்ச்சியில், தொடர்ந்தும் தம் கீழ்த்தரமான வங்குரோத்து அரசியல் மூலம் மக்களை மந்தைகளாக்குவதை விட்டு விட்டு, நேரடியான சமுதாய மேம்பாடு சார்ந்த அரசியல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டிய கட்டாயம் இன்று உருவாகியிருக்கிறது.

அப்படியான எதிர்காலத் திட்டங்களையும், தேவைகளையும் புரிந்து கொள்ளும் மன நிலையில் அங்கிருக்கும் மக்கள் தற்போது இல்லையாகினும், அவர்களின் அடுத்த கட்ட நிலையில் அந்த வழிகாட்டலை அவர்களுக்க வழங்குவது உங்கள் ஒவ்வொருவரின் கட்டாயக் கடமைகளாகும்.

காகிதத் தலைகளில் அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் “தமிழர்” அரசியல் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

வங்குரோத்துப் புலிகள் மக்களுக்குக் கொண்டு வந்து சேர்த்த கொடுமையான அனுபவங்களும் மறக்கப்பட வேண்டும்.

போராடுவோம், போராடுவோம் என்று அடுத்தவன் வீட்டுப் பிள்ளைகளை எல்லாம் தற்கொலையாளிகளாக மாற்றிய பிரபாகரன் கூட மிக இறுதியாக தம் எதிரியின் காலடியில் “உயிர்ப்பிச்சை” கேட்டு விழுந்து தன் தலை உடைக்கப்பட்ட நிலையில் தான் இறந்து போனார்.

எனவே, மக்கள் யாரை நம்பினாலும் அந்த நம்பிக்கைக்கு முன் அது அலசி ஆராயப்பட வேண்டும்.

சீரான கால இடைவெளியில் அந்த நம்பிக்கை மீள ஆராயப்பட வேண்டும்.

தாம் சார்ந்த சமூகத்தின் நேரடி முன்னேற்றத்திற்குத் தங்கு தடையாக இருக்கும் எதுவுமே உடனடியாகத் தூக்கியெறியப்பட வேண்டும்.

பிரபாகரனது போன்ற இன்னொரு சித்தார்ந்தத்தை ஆயுதரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ வளர விடுவதால் மீண்டும் பல தசாப்தங்கள் அவர்களே பின் நிற்க வேண்டி வரும்.

எனவே, மக்கள் தம் “அறிவு”க் கண்களைத் திறந்து சுயமாக முடிவுகளை எடுத்து, தமக்கு முன்னால் இருக்கும் எதிர்கால அரசியலை,சூழலை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்.

நொந்து போயிருக்கும் அவர்களை இப்போது இன்னும் சாகடிக்க முடியாது, எனவே அவர் சார்ந்த வெளிநாடு வாழ் தமிழர்கள் சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும்.

ஆகக்குறைந்தது மனித உரிமை ஆணைக்குழுவில் கூட இந்த நவீன அரசியலை எதிர்கொள்ள முடியாது போய்விட்டது, இன்னும் பலவீனமான கருத்துக்கள் மூலம் மக்களை பலவீனப்படுத்திக்கொண்டிருப்பதை விடுத்து, எதிர்காலத்தை எதிர்நோக்கும் திராணியுடன் முன்னேறி, ஒவ்வொருவரும் உங்கள் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் சிந்திக்க வேண்டும்.

பிளவு பட்டிருக்கும் “தமிழினம்” ஒன்று பட வேண்டும் என்று நீங்கள் சிந்திக்க ஆரம்பித்திருப்பதே ஒரு மாற்றம் தான், ஆனால் உங்கள் “மீளிணைவு” எதிர்காலம் சார்ந்ததாக இல்லாவிடின், இதுவும் 2013ல் ஒரு நகைச்சுவை நாடகமாக முடிவு பெற்றுவிடும்.

இதற்கு ஒரே வழி, தம்மால் இந்த எதிர்கால சவால்களை எதிர்கொள்ள முடியும் என்ற திராணியுள்ளவர்களை மட்டுமே இலங்கைய அரசியலில் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையை மக்கள் வழங்க வேண்டும்.

இவை அத்தனையையும் சாதிக்க அந்த மக்களுக்கு “விழிப்புணர்வு” அவசியம், அதன் பொறுப்பு உங்கள் ஒவ்வொருவரிடமுமே விடப்படுகிறது.

இதை தெருக்களில் ஊர்வலம் போய்,நாடாளுமன்றங்களின் முன்னால் உண்ணாவிரம் இருந்தெல்லாம் சாதிக்க முடியாது.

உங்கள் “அறிவைக்” கொண்டுதான் சாதிக்கலாம்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

5 responses to “இதுதான்டா அரசியல் !

 1. indu

  மே28, 2009 at 2:47 பிப

  “உங்கள் “அறிவைக்” கொண்டுதான் சாதிக்கலாம்”

  – உங்களுக்கிற மகா அறிவைக் கொண்டு நீங்கள்தான் ஒரு யோசனையைச் சொல்லுங்க..

  நல்ல வடிவா யோசித்து யோசித்து குறைகளைக் கண்டுபிடிச்சி எழுதத்தான் ரயாகரன், வயாகரன் எல்லாம் இருக்காங்களே…

  நீங்க அறிவோட யோசிச்சி ஒரு திட்டத்தை முன் வைய்யுங்க… பாவம் எல்லாரும் அறிவை யூஸ் பண்ண ஆரம்பிச்சா, இந்த மாதிரி அரைவேக்காட்டை எவனும் படிக்காம போற ஆபத்து்ம் இருக்கு…

   
  • arivudan

   மே28, 2009 at 3:12 பிப

   indu,மற்றவர்களை சாடுவதற்கு அவரவர் இணையங்கள் வைத்திருக்கிறார்கள்,அங்கேயே சென்று உங்கள் பதில்களை வழங்கி அவற்றிலிருந்து விடைகளைத் தேடிக்கொள்ளுங்கள்.

   இங்கிருக்கும் விடயங்களை முழுமையாக திறந்த மனதுடன் படித்துப் பாருங்கள். அது உங்கள் பதில்களுக்கு,அது எம்மைச் சாடுவதாக இருந்தாலும் உதவும்.

    
 2. brown flore

  மே28, 2009 at 2:57 பிப

  velinattil valum perumpanmaiana makkalukku neengal sollum arivu unda enbathu doubt cinma enral pothum kadan pattavathu pottiha party vaikka vendum car peria t. v vaangavenum,ivargal eeelam kidathalum pohamattarkal pirapaharan padathukku malai potu kadavullaha kumpuduvathu karanam kettal avar kundu pottu sandai seivathanalthan naam velinadu varamudinthathu illavittal naangal enga t. fridge endru kandiruppom endra pathil varum

   
 3. vijaygopalswami

  மே28, 2009 at 8:17 பிப

  ஐயா,

  தங்களது வலைப்பதிவைச் சமீபகாலமாகத் தொடர்ந்து வாசித்து வந்தாலும் மறுமொழிய வேண்டும் என்ற எண்ணம் இது வரை தோன்றியதில்லை. இருந்தாலும் ஒரு முயற்சி செய்து பார்ப்போமே என்று தான் என்னுடைய கருத்தை எழுதுகிறேன். தங்களால் இத்தனை விபரங்களைத் தொகுத்தளிக்க ஏலுமென்றால் தாங்கள் நிச்சயம் இலங்கைத் தமிழராகவே இருக்க வேண்டும். என்னுடைய கேள்விகள் தங்களைப் புண்படுத்துவதாகக் கருதினால் இந்த மறுமொழியைப் பதிப்பிக்க வேண்டாம்.

  தங்களுடைய சுய விபரங்கள் எதுவும் இந்த வலைப்பூவில் இடம்பெறவில்லை. மாறாக இவ்வலைப்பூவின் நோக்கம் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு சூழலில் தங்கள் மீதான எதிர் விமர்சனங்கள் தவிர்க்க முடியாதது.

  ///மற்றவர்களை சாடுவதற்கு அவரவர் இணையங்கள் வைத்திருக்கிறார்கள்,அங்கேயே சென்று உங்கள் பதில்களை வழங்கி அவற்றிலிருந்து விடைகளைத் தேடிக்கொள்ளுங்கள்.///

  இது போன்ற எதிர்ச்சாடல்கள் எவ்வகையிலும் உங்கள் நோக்கத்தைக் வாசகருக்குக் கொண்டு செல்லப் பயன்படாது.

  இவ்வலைப்பூ தொடங்கிய நாள் தொட்டு பிரபாகரன் மீதான எதிர்விமர்சனங்கள் மட்டுமே எழுதப்பட்டு வருகிறது. இருக்கிறாரா இல்லையா என்றே தெரியாத ஒரு மனிதரின் குணாம்சங்களைச் சிதைப்பதில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நன்மை இருக்கப் போகிறது.

  என்னுடைய வேண்டுகோளெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ”மறுநாள் உயிரோடிருந்து கண்விழிப்போம்” என்ற உத்திரவாதமான வாழ்க்கை கிட்டிய பிறகு இது போன்ற விவாதங்களை வைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான். ஏனெனில் அந்த உத்திரவாதமான வாழ்க்கை என்னால்தான் கிடைத்தது என்று அப்போது பிரபாகரன் வந்து உரிமை கொண்டாடப் போவதில்லை (உங்கள் கருத்துப் படிதான் பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லையே).

  ஆனால் உங்கள் பதிவுகளின் உள்ளடக்கங்களைப் பார்க்கும் போது ஒருவேளை பிரபாகரன் உயிரோடிருந்து மக்கள் முன்பு தோன்றினால் அவருக்குத் தற்போதிருக்கும் நன்மதிப்பு மக்களிடம் கிஞ்சிற்றும் மிஞ்சியிருக்கக் கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டு எழுதப்படுகிறதோ என்று எண்ணச் செய்கிறது.

  இக்கருத்துக்களைத் தங்கள் மீதான சாடல்கள் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் உணர்ச்சிவயப்படுதல் என்கிற சிறுபிள்ளைத்தனத்தை வெகு காலம் முன்பாகவே கடந்து வந்துவிட்டேன் என்றே நம்புகிறேன். தாங்கள் கேட்டிருந்தபடியே திறந்த மனதுடன் விடை கருத்துப் பரிமாற்றம் தேடி வந்திருக்கிறேன்.

  மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன், என் கருத்துக்கள் தங்களுக்கு உவப்பானதாக இல்லையென்றால் தயவுசெய்து எனது மறுமொழியைப் பதிப்பிக்க வேண்டாம்.

  நன்றி
  விஜய்கோபால்சாமி

   
  • arivudan

   மே28, 2009 at 8:56 பிப

   //indu,மற்றவர்களை சாடுவதற்கு அவரவர் இணையங்கள் வைத்திருக்கிறார்கள்,அங்கேயே சென்று உங்கள் பதில்களை வழங்கி அவற்றிலிருந்து விடைகளைத் தேடிக்கொள்ளுங்கள்.//

   விஜய்கோபால்சாமி,திறந்த மனதுடன் கருத்துக்கூற முன் வந்த உங்களுக்கு நன்றி.

   மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் மேற்கூறிய விடயங்கள் வேறு இணையத்தளங்களை நடத்திக்கொண்டு இருப்பவர்களை இங்கே வந்து பெயர் கூறி சாடியதற்காகவாகும். இங்கே வந்து அவர்கள் பெயர்களைக் கூறி சாடுவதை விட இப்போது நீங்கள் கேள்வி கேட்டது போன்று அங்கேயே அவர்களிடம்,அவர்களின் இணையத்திலேயே சென்று கேள்வி கேட்டால் அவர்கள் சரியான விளக்கத்தை அளிக்கலாம் அதன்மூலம் ஒருவேளை இவர் தெளிவு பெறலாம் அல்லது முரண்பட்டுக்கொள்ளலாம். அதற்காகத்தான் அவரிடம் அவ்வாறான ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

   அதை இன்னொரு நபருக்கோ அல்லது இணையத்துக்கோவான எதிர்ச்சாடல் என்று நீங்கள் கருதினால் அங்குள்ள கருத்துகளை மீள வாசித்து இந்த விளக்கத்தையும் அறிந்துகொண்டதன் மூலம் உணர்வீர்கள் என்று நம்பிக்கொள்கிறோம்.

   இந்த வலைப்பூவின் நோக்கம் என்னவென்பதை நேரடியாகவே வெளியிட்டிருக்கிறோம்,அத்துடன் நீங்களே கூறியது போன்று எமது கருத்துக்கள் அனைத்தும் நேரடியாகவே முன்வைக்கப்படுகின்றன.

   இதில் பிரபாகரன் என்ற நபர் உயிர்த்தெழுந்து வந்த பின்னர் அவருக்கிருக்கும் மதிப்பு குறைய வேண்டும் என்ற கவலை என்பது எள்ளளவும் இல்லாதது,அப்படியொரு அதிசயம் நாளடைவில் நடந்து,மீண்டும் அந்த மக்கள் அவர் பின்னால் அணிவகுக்கத் தயாராக இருந்தால்,அது அவர்களின் தனிப்பட்ட உரிமை.அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.

   இங்கே பதியப்படும் பதிவுகளில் ஒரு வகையில் அவர் சார்ந்த விடயங்களே அதிகம் பேசப்படுகிறது, அதன் அடிப்படை மக்கள் விழிப்புணர்வு சார்ந்தது.

   அதாவது பிரபாகரன் போன்ற இன்னொரு மனிதரும் அவர் கட்டி வளர்த்த சித்தர்ந்தமும், அதன் மூலம் ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரு உணர்ச்சியூட்டல் கலாச்சாரமும்,மக்களுக்கு எதைக் கொடுக்க முடியும்? எதைக்கொடுக்க முடியாது என்பதைப்பற்றிய வெளிப்படையான கருத்தாடலாகும்.

   இதன்போது பிரபாகரனும் அவரது சித்தார்ந்தமும் பகிரங்கமாகக் கேள்விக் குறியாக்கப்படுவதை வெவ்வேறு காரணங்களுக்காக ஒரு சிலர் விரும்பாமல் விடலாம்,அது குறித்து கூட சில பதிவுகளில் எழுதப்பட்டுள்ளது.

   உங்கள் பின்னூட்டத்தில் குறைந்தது இரு தடவைகள் மறுமொழி எங்களுக்கு உவப்பானதாக இல்லையென்றால் பதிய வேண்டாம் என்றும் கூறியிருக்கிறீர்கள்,எமது கொள்கைக்கு முரணாக நாம் நடந்து கொள்ள மாட்டோம், நீங்கள் மட்டும் இல்லை யாராக இருந்தால் தகாத வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்து நாகரீகமான முறையில் உரையாட விரும்பினால் யாருடைய பின்னூட்டத்தையும் இங்கே இணைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

   ஏலவே சில அவ்வாறான பின்னூட்டங்கள் பதியப்பட்டிருக்கின்றன.அதுவும் அவை எம்மைச் சாடிய போதும் கூட.

   எனவே,திறந்த மனதுடன் நாகரீகமாக யார் முன்வந்தாலும் அவர்களுடன் கருத்துப் பகிர தயாராகவே இருக்கிறோம்.

   எமது நோக்கம் மறுநாள் உயிரோடு இருந்து கண்விழிப்போமா என்று உலகின் விடயங்களுக்காக பயந்து ஏங்கும் ஒரு சமுதாயம் மாறி,இயற்கையின் இடையூறு இன்றி மறுநாள் உயிரோடு இருந்து,கண்விழிக்கும் போது தம் உரிமைகளை அவர் தம் சுய அறிவால் வெற்றி கொள்ள வேண்டும் என்பதாகும்.

   அதை நோக்கிய பதிவுகள் தான் தொடர்ந்து வருகிறது,இவற்றில் உங்கள் முரண்பாடுகளை அந்தந்த இடங்களில் முன்வைத்தால் அதற்கு எங்கள் விளக்கங்களை முன்வைக்கவும் அல்லது “அறிவைப் பெறவும் கூட” தயங்க மாட்டோம் என்பதையும் வெளிப்படையாகவே தெரிவித்துக்கொள்கிறோம்.

    

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: