RSS

அப்பனே சரணம் !

23 மே

பாரதியாக இருக்க வேண்டுமென்றால் ஆகக்குறைந்த தகைமையாக நிலையான கொள்கையாவது இருக்க வேண்டும், ராசாவாக இருப்பதற்கு ஆகக்குறைந்தது அரசியலாவது தெரிந்திருக்க வேண்டும், இது இரண்டும் இல்லாத நிலையில், காலத்தின் தேவை கருதி பாரதிராசா போட்ட “அப்பனே சரணம்” எனும் நாடகம் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

பழந்தின்று கொட்டை போட்ட கலைஞரின் அரசியல் சூற்சுமங்களுக்கு முன்னால், புதிதாகப் புரட்சி செய்ய வந்த பாரதி என்று தன்னை நினைத்து, முழுக்க முழுக்க சுயநலத்திற்காக மக்களை மடையர்களாக்கும் சினிமாக் கூத்தாடிகளைச் சேர்த்துக்கொண்டு பாரதி ராசா சமீபத்தில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருந்தார்.

திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்று ஒரு பம்மாத்து இயக்கத்தை ஆரம்பித்து, கலைஞரை நேரடியாக எதிர்க்கத் திராணியில்லாமல் காங்கிரஸ் மீது பாய்ந்து பார்த்தார்கள்.

நேரடியாக காங்கிரஸ் தலைமையோடு மோதித் தம் “இருப்பை” வீர மறவர்களாக ஆரம்பிக்க அவர்கள் போட்ட கணக்கு கலைஞரின் அரசியல் நுணுக்கத்தில் சுக்கு நூறாகிப்போனது.

தேய்ந்து போயிருக்கும் புலி ஆதரவை புதுப்புது சக்திகள் கொண்டு, ஆனால் விலை அதிகம் இல்லாத சக்திகளைக் கொண்டு புதுப்பிக்க நினைத்த புலியின் வலைப்பின்னல் எப்போதுமே தவறான திட்டமிடல் மூலம் இரண்டாம் நிலை அரசியல் சந்தையிலேயே பொருட்களை விற்க முடிந்தது.

ஆளாளுக்கு பெரிய பெரிய கனவுகளோடு திரையுலகம் நடத்தி முடித்த உண்ணாவிரதத்தில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கனவோடு வந்திருந்தாலும், நன்கொடை வழங்கும் நேரத்தில் கிள்ளித்தான் கொடுத்தார்கள்.

அரசியல் ரீதியாக சில இடர்பாட்டுக்குள் தான் விழுந்திருந்த அந்த நேரத்தில், அத்தனை போரையும் ஓவர் டேக் பண்ணி தன் இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள இந்த உண்ணாவிரதத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ஒரே பேர்வழி ரஜனிகாந்த் தான்.

“30 வருஷமா போராடி அவங்கள வெல்ல முடியல இன்னும் யுத்தம் என்று சொல்லுறீங்களே நீங்கள் எல்லாம் ஆம்பளையா? ” என்று கேட்டாரே ஒரு கேள்வி.

“உணர்ச்சியூட்டினால் எப்போதும் விசிலடித்துக் கைதட்டி மகிழும்” தமிழர்கள் ஒரே செக்கனில் பழைய கணக்குகளை மறந்து போனார்கள், அப்படி திகைப்பில் அவர்கள் இருந்த நேரம், அந்த அரங்கும் அதன் பின் இருந்த அத்தனை தலைகளும் அதிரும் வண்ணம் 10 லட்சத்தை அள்ளி வீசி விழுந்த தலைகளில் தர்ம அடியும் கொடுத்து, யாரும் எதிர்பார்க்காத விதத்தில் தன் சரிநதிருந்த செல்வாக்கை தூக்கி நிறுத்தினார் அவர்.

ஆனாலும் ” 3 வருஷத்துக்குள்ள முழுசா முடிச்சிட்டாங்களே, இறுதிக்கட்டத்தில் உயிருக்கே உலை என்று தெரிந்ததும், எதிரியின் காலில் விழுந்தார்களே அவங்கள் எல்லாம் ஆம்பளையா?” என்ற இவரும் கேள்வி கேட்க மாட்டார், ஏனெனில் எல்லோரும் கையில் எடுப்பது உங்களை “உணர்ச்சியூட்டும்” ஆயுதத்தைத்தான்.

அதற்கு என்ன விலை கொடுத்தாவது தக்க வைத்துக்கொள்வார்கள், ஆனால் அழித்துக்கொள்ள மாட்டார்கள்.

இப்படி தனக்குப் பின் வந்தவர்கள், தன்னால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் எல்லாம் அரசியல் புத்திசாலிகளாய் இருக்கும் போது, தான் மட்டும் ஏன் சும்மாயிருப்பது என்று நினைத்து, தேர்தல் களத்தில் “தமிழீழ” மாயையை எடுத்துக்கொண்டு களமிறங்கிய பாரதி ராசா, அந்தத் தேர்தலின் பின்னால் “அப்பனே சரணம்” என்று கலைஞரின் கால்களில் விழுந்த கதையை எல்லோரும் மறந்தே போனார்கள்.

தமிழீழ ஆதரவுக்கு இப்படியொரு தர்ம அடி கிடைக்கும் என்று கனவிலும் எதிர்பார்க்காத பாரதிராசா, பதவிக்கு வந்ததும் கலைஞரின் அடுத்த காய் நகர்த்தலில் பயந்து,அடங்கி,நாணிக்குறுகி ஓடிச்சென்று காலில் விழுந்து விட்டார்.

ஊடகங்களின் மாயை, மக்களின் நிலையைப் பிரதிபலிக்கும் என்று தப்புக்கணக்குப்போட்ட இந்த இயக்கம் இன்று கலைஞரின் காலடிக்குச் சென்று, தவறிழைத்து விட்டோம், தவறாகப் பேசி விட்டோம், மன்னித்தருள்க என்ற மன்னிப்புக் கேட்டு, அரசியல் நதியில் நிர்வாணமாகியிருக்கிறார்கள்.

சரியான ஒரு அரசியல் தீர்வு இருந்திருந்தால் இளைஞர்கள் ஆயுதங்களைத்தூக்கியிருக்கும் தேவை இருந்திருக்காது என்று கூறிய கமல்ஹாசன் போன்றோரையோ, இல்லை நெத்தியடி கொடுத்த ரஜனியையோ, அமைதியாக இருக்கும் சில அடுத்த தலைமுறை நடிகர்களையோ கூட தமது அரசியல் மாயைக்குள் இழுக்க முடியாமல் தோற்றுப்போன இப்படியான திடீர்த் தலைவர்கள் தமிழீழ மாயையை வைத்து அரசியல் வியாபாரம் செய்ய அனுமதிப்பதானது ஈழத் தமிழர்களின் உண்மையான உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதற்கு சமமாகும்.

ஒரு காலத்தில் பாரதி ராசா நல்ல இயக்குனர் தான், கிராமக் கதைகளை, காதல்களை மண் வாசனையோடு பிழிந்தெடுத்தார். அவர் பிழிந்த அந்த சுற்றச்சூழல்கள் இலங்கையில் இல்லவே இல்லையென்றாலும் கூட இவர்களும் கலாச்சார உணர்வுகளால் அவற்றை ஏற்றுக்கொண்டார்கள்.

அத்தோடு மாத்திரம் அவர்கள் நிற்கவில்லை, தமிழகத்தில் மக்கள் ரசனையில் வர்த்தகரீதியான வெற்றி பெறவில்லையாகினும், கமல்ஹாசனின் குணா போன்ற திரைப்படங்களை இலங்கை ரசிகர்கள் இலங்கையிலே வெற்றிப்படமாக்கினார்கள், ரஜனியின் பாபா கூட இலங்கையில் வெற்றிப்படம் தான்.

செந்தூரைதேவி என்று விவேக்,கனகா நடித்த ஒரு படத்தை இலங்கையின் தமிழ்,சிங்கள மக்கள் இணைந்து கிட்டத்தட்ட 400 – 450 நாட்கள் ஓடச்செய்தார்கள்.

இலங்கைத் “தமிழ்” மக்கள் அவ்வளவு இலகுவாக உங்கள் வர்ணனைக்குள் மாட்டிக்கொள்ள மாட்டார்கள்.

“உணர்ச்சியூட்டப்பட்ட” நிலையில் தம் தலைமையின் சித்தார்ந்தத்தைக் காப்பாற்றத் துடியாகத் துடித்த புலிப் பரப்புரை மருத்துவர்கள் தான் அவற்றைப் பெரிதாக்கினார்கள், நீங்களும் உங்கள் இயக்கமும் அதை நம்பித் தமிழக மக்களையும் ஏமாற்றப்பார்த்தீர்கள்.

நல்ல வேளையாக விழித்துக்கொண்ட தமிழக மக்கள் உங்கள் “சந்தர்ப்பவாதக்” கொள்கைகளுக்கு சரியான பாடத்தைக் கற்பித்தார்கள்.

இனிமேலும், மக்களின் உணர்வுகளோடு விளையாட எழும் இப்படியான கூத்தாடிகளை மக்கள் இனங்கண்டு கொள்வார்கள், தமிழகத்தில் தண்டித்தே ஆவார்கள்.

ஆளாளப்பட்ட எம்.ஜி.ஆரையும் எதிர்க்கட்சியில் உட்கார வைத்தார்கள், கலைஞரையும் தண்டித்தார்கள், செல்வி ஜெயலலிதாவையும் தண்டித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் பாதியை பணம் செய்ததென்று நீங்கள் வாதாடினாலும், மீதியை மக்களின் “அறிவு” தான் செய்தது.

விஜயகாந்த் சொல்வது போல், “அவர்கள் தருவதைப் பெற்றுக்கொண்டு” வாக்குகளை மாற்றிப்போட்டு விட்டால்..?

எனவே, மக்களின் “சுய அறிவே” எப்போதும் அவர்களுக்கான விடிவையும், விளைவையும் பெற்றுத் தரும்.

இந்த உதாரணங்கள் ஈழ மக்களுக்கும் பொருந்தும்.

நீங்களும், இனிமேலும் “உணர்ச்சியூட்டலில்”, “பொய் வாக்குறுதிகளில்”, “ஆசை காட்டல்களில்” உங்களை, உங்கள் உரிமைகளை அடகு வைக்கக் கூடாது.

உங்கள் உரிமைகளைக் கனவுலகத்தில் வைத்து எடை போடவோ அல்லது அவற்றை உங்கள் மீது திணிக்கவோ இடம் கொடுப்பதில் எந்தப் பயனும் இல்லை.

உங்கள் மத்தியிலும் இப்படியான பாரதி ராசாக்கள் இனிவரும் காலங்களில் உருவாவார்கள், அவர்களை இனங்கண்டு கொள்ளும் பொறுப்பு உங்களுடையதே.

தமிழக பாரதி ராசாக்கள் அழிந்துகொண்டிருந்த புலிகளுக்காக என்னவெல்லாமோ செய்யத் துணிந்தார்கள்.

ஆனால், இன்று வவுனியாவில் 25, யாழ்ப்பாணத்தில் 12, திருகோணமலையில் 2, மன்னாரில் 3 இடங்களில் என்று உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த உங்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள்? 

உங்களோடு கலந்திருக்கும் முன்னாள் எலிகளைக் காப்பாற்றி மீண்டும் ஒன்று சேர்ப்பதற்காக சில கோஷங்களை அவ்வப்போது முன் வைப்பார்கள், ஆனால் உங்கள் ஒரு வேளை கஞ்சிக்குக்கூட இவர்களின் பேச்சுக்கள் எடுபடாது.

இதே போன்றே உங்களை நாடி வந்து “சேவை” செய்யப் போகும் பாரதி ராசாக்களையும் நீங்கள் வயிறு வளர்க்க விடக்கூடாது.

அவர்களையும் சரியான வழியில் அடையாளம் கண்டு, தேர்தல் காலம் வரை பொறுத்திருக்கத் தேவையில்லை, தேவைப்படும் அதே காலத்தில் அவர்களை தூக்கி வீசிவிடுங்கள், உங்களிடமிருந்து அன்னியப்படுத்தி விடுங்கள்.

இல்லையென்றால், யாராவது ஒருவன் காலில் எப்போதுமே அப்பனே சரணம்! என்று விழுந்தெழும்பும் மக்களாகவே உங்கள் அடுத்ததலைமுறையும் மாறும்.

வழி காட்ட வருவோர், அறிவுரை சொல்வோர், என எல்லோர் தகவல்களையும் சேர்த்திணைத்து, இறுதி முடிவை, சுய சிந்தனையில், உங்கள் சுய முடிவாக நீங்களே எடுங்கள்.

நாளைய சமுதாயத்தின் புதிய அத்தியாயம் உங்களிடமிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

கொசுறு: பாரதி ராசா பிரபாகரனை சந்தித்த அதிசயம் தளபதிகள் சகிதம் “தலைவரும்” நலம்! பதிவில் உள்ளது.
 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

4 responses to “அப்பனே சரணம் !

 1. rajan

  மே24, 2009 at 2:25 முப

  The best fact reading article I ever come across.

   
 2. Saran

  மே24, 2009 at 4:12 முப

  You Are Posting Really Great Articles… Keep It Up…
  We recently have launched a website called “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…
  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
  http://www.namkural.com.

  நன்றிகள் பல…
  – நம் குரல்

   
 3. tamilan

  மே24, 2009 at 5:35 முப

  miga arumaiyana pathivu. Vazhthukkal

   
 4. Faaique

  மே24, 2009 at 7:39 முப

  great article

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: