விடுதலைப் போர் என்றால் சும்மாவா? எத்தனை உயிர்களைப் பலி கொடுக்க வேண்டியுள்ளது.
அப்படி உயிர்களைப் பலிகொடுக்கும் வித்தை தெரிந்த எம் தலைவர் தன் உயிரை எந்த நேரத்தில் காப்பாற்றியிருக்க வேண்டும் என்கிற அறிவு நிறைந்த “கடவுளின் குழந்தை”, இதுதானே உங்கள் நம்பிக்கை.
உங்கள் நம்பிக்கையும் வீண் போகவில்லை, தளபதிகள் சகிதம் “தலைவரும்” நலமாக உள்ளார்.
நக்கீரன் முந்திக்கொண்டது, அவர்கள் திடீரென ஆரம்பித்து வைத்ததும் நம்பிக்கையிழந்திருந்த புலி ஆதரவாளர்கள் வீறு கொண்டு எழுந்தார்கள், ஒரு கணம் அவர்கள் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்ட தமிழ் வின்னர் ஒரு திரைக்கதை வெகு நேர்த்தியாக வெளியிட்டிருந்தது.
படங்களை வரைந்த பின்னர் கையொப்பமிடும் அந்த பழக்கதோசத்தை மறைக்க மறந்து போன “கோபால்” எனும் ஓவியர் வரைந்த அந்தப் படத்தை வைத்து நம் நேரத்தை ஏன் வீணாக்குவான் என்று நாம் அதை விட்டெறிந்து விட்டு போனாலும், வின்னர்கள் விடவில்லை.
எனவே, சில தமிழ் மக்கள் “அறிவு” மேல் அக்கறை கொண்ட இணையங்கள் நக்கீரன் கோபாலின் கோமாளித்தனத்தை அம்பலமாக்கின.
http://theneeweb.de/html/220509-2.html
http://live.athirady.org/?p=40936
அப்படியும் அடங்குவார்கள் என்று பார்த்தால் விடவில்லை, சரி இப்படியாவது அடங்கட்டும் என்று இன்னும் ஒரு மக்கள் அக்கறை கொண்ட இணையம், அவர்கள் பாணியிலேயே ஒரு திரைக்கதையை அவர்களுக்காக ஓட விட்டது.
http://www.ilakkiyainfo.com/index.php?id=356
இதற்கும் அடங்காத ஆதரவாளர்களைத் திருப்திப் படுத்த, இதோ தமிழ்நெட் களமிறங்கி விட்டது, புதினம் அதை மொழிபெயர்க்கிறது.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29430
http://www.puthinam.com/full.php?2b1VoUe0dKcYo0ecKA4A3b4g6D74d3f1e3cc2AmS2d424OO3a030Mt3e
ஒரு அறிவழகன் கிளம்பிவிட்டார், அதுவும் விடுதலைப் புலிகளின் வெளிவிவகாரப் புலனாய்வுப் பிரிவில் இருந்து கிளம்பியிருக்கிறார்.
நக்கீரன் கோபால் செய்தது மட்டும் தான் கோமாளித்தனம், ஏனெனில் அவர் தமிழ் நெட்டிலிருந்தே படத்தைச் சுட்டு, தமிழ் மக்களுக்கே பிலிம் காட்டியிருந்தார்.
இப்போது தமிழ் நெட் காட்டும் படம் புதிய தொழிநுட்பத்தில் வெளி வருகிறது.
இதற்காகவே விடுதலைப் புலிகளின் வெளிவிவகாரப் புலனாய்வுத் துறை அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.
அந்த வெளிவிகாரப் புலனாய்வுத் துறை அறிக்கைகள் ஆகக்குறைந்தது எதிர்வரும் கார்த்திகை மாதம் காலாவதியாக வேண்டும்.
ஆனாலும், அதற்கு முன்னதாக எமது தலைப்பை நியாயப்படுத்தும் சில கருத்துக்களை முன்வைப்பதும் இங்கே அவசியமெனப் படுகிறது.
பிரபாகரனை விரட்டிச்சென்று கொண்டிருந்த இராணுவம் ஒரு கட்டத்தில் பிரபாகரன் வாழ்ந்த வீடு என்று ஒன்றைக் கண்டுபிடித்தது.
அந்த வீட்டில் இருக்கும் சில பொருட்கள் முன்னிலையில் பிரபாகரன் எடுத்திருந்த புகைப்படமும் அதே வீட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற தொகுப்பிலிருந்து தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டது.
அப்போது பார்த்தாலும், அதை மறந்தவர்கள் மீண்டும் ஒரு தடவை நினைவூட்டிப்பார்த்தால், அங்கே ஒரு படத்தில் இரண்டு “பிரபாகரன்கள்” நிறுத்தப்பட்டிருந்தார்கள்.
அதில் ஒரு பிரபாகரன் ஒன்று அல்லது இரண்டு அங்குலம் மற்றவரை விட உயரமாகக் காணப்பட்டிருந்தார்.
எனினும், அதுவும் படையினரை திசைதிருப்ப நக்கீரன் கோபால்கள் செய்த வித்தையாகவே கணிக்கப்பட்டிருந்தது.
இப்போது தேவை வந்திருப்பதனால், எதற்கும் நக்கீரன் கோபாலின் வித்தையையும் இங்கே இணைக்கிறோம்.
பிரபாகரனை நேரடியாகப் பார்த்த பாரதி ராசாவும் இங்கே இணைந்துகொள்ளலாம்.
எப்படியாவது தமிழ் மக்களைப் பந்தாடியே தீர்வது என்று கங்கணம் கட்டியிருக்கும் அனைத்துத் தரப்பும் ஒன்றையொன்று விஞ்சியதாகவும், போட்டி போட்டுக்கொண்டும் செயற்படுகின்றன.
இப்போது புலிகளின் பிரதிநிதிகளாக, உத்தியோகபூர்வ ஊடகங்களாக இயங்கும் தமிழ்நெட்டும், புதினமும் களத்தில் குதித்திருக்கின்றன.
புலிகளுக்கே உரிய மிகக்கவனமாக அறிமுகப்படுத்தப்படும் சொற்பதங்களுடன் தமது புதிய டிபார்ட்மென்டை அங்குரார்ப்பனம் செய்து வைத்திருக்கும் இன்டர்நெட் புலிகள், தமது “அந்தத்” தலைவரை ஆகக்கூடிய கார்த்திகை மாதம் வரை மட்டுமே ஒளித்து வைக்க முடியும்.
அதற்கும் பின்னால் அதை நீடிக்க வேண்டுமானால், கே.பியிடம் ஏற்கனவே பிரபாகரனால் பதிவு செய்யப்பட்ட ஒரு மாவீரர் தினம் அதுவும் ” உயிர் தப்பினால் ” என்ன சொல்வது, “தோற்றுப்போனால்” என்ன சொல்வது என்ற திட்டமிடலில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
அது ஒரு வேளை ஒளிப்பதிவாக இருந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
அப்படித்தான் இந்தத் தலைவர் உயிரோடு இருந்தாலும், இனி ஒரு காலத்தில் மீண்டும் இலங்கைத் தீவில் ஒரு “தமிழீழ” போராட்டத்தை கனவில் மாத்திரம் தான் நிகழ்த்தக்கூடும் என்கிற எதார்த்தம் ஒரு புறம் இருக்க, அவர் கடந்த 30 வருடங்களில் கூட ஒரு சில தடவைகள் தானே வெளியே வந்திருக்கிறார்!?
அந்த அடிப்படையில் அவர் வெளியே வராமலே விடுதலைப் போராட்டத்தை முன் நின்று நடத்துவார், வேலைவெட்டியில்லாமல் “உணர்ச்சியூட்டப்பட்ட” ஆதரவாளர்களும் தமது உணர்வுகளை கேட்டும் கேட்காமல் போகும் காதுகளிடம் கொட்டித் தீர்த்துக்கொண்டே இருப்பார்கள்.
எனினும், அவர்கள் கூடும் இடங்களில் எல்லாம் “நிதி” திரட்டல் சுமுகமாக நடைபெறும்.
ஆகக்குறைந்தது, தலைவரை சக்கரை வியாதியில் இருந்து குணப்படுத்த வேண்டும் என்று கூறியாவது “நிதி” திரட்டப்படும்.
முன்னரெல்லாம் தலைவர் என்ன செய்தாலும், தம் தளபதிகளோடுதான் அனைத்துக்கும் ஒன்று கூடுவார், அந்த அடிப்படையில் இந்தத் தடவையும் “தலைவர்” தம் பொறுப்பை விட்டு அகலவில்லை.
தான் உயிரோடு இருப்பதை முதலில் தம் தளபதிகளிடமே அறிவித்திருந்தார்.
முன்னாள் தலைவர்களில் பொட்டம்மானைத் தவிர அத்தனை பேரும் தம் தலைவருக்காக அவரோடு சேர்ந்து “அந்த” உலகத்துக்குப் போய் விட்டார்கள்.
எனவே, இப்போது புதிய தளபதிகள் களமிறங்கி விட்டனர்.
அந்தத் தளபதிகள் தான் ” யாரும் பயப்பட வேண்டாம் , தலைவர் உயிரோடு தான் இருக்கிறார், வரவேண்டிய நேரத்தில் வருவார் என்று சொல்கிறார்கள் ” அதில் எமக்கும் உடன்பாடு உண்டு.
விடுதலைப்புலிகளின் உண்மையான “தலை” இப்போது தன் இடத்தை நிரப்பிக்கொண்டது.
தளபதிகள் சீமான், பாரதிராசா, நெடுமாறன், வை.கோ மூலமாக தான் நலமாக இருக்கிறேன் என்று அறிக்கையும் விட்டுவிட்டது.
பிரபாகரன் காட்டிற்குள் இருந்திருந்தாலும், அவருக்கும் அங்கே வைத்து சாப்பாடு போட்டது முதல் அவரது இரத்த வெறிக்கு மனிதப் பலி கொள்ள ஆயுதம் கொடுத்தது வரை அத்தனையையும் இந்தத் தலைவர் தானே செய்தார், எனவே பிரபாகரன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்தத் தலையின் “புலிகள்” இருப்பார்கள்.
ஆகவே இந்தத் தலைவரும், தளபதிகளும் ஒருவொருக்கொருவர் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டு தமது ஆபத்திலிருந்து தப்பி வந்துவிட்டார்கள்.
30 வருட காலம் “அந்த”த் தலைவருக்குப் பின் சென்ற மக்கள் இனியும் கவலைப் பட வேண்டாம், உங்கள் தளபதிகள் நலமாக இருக்கிறார்கள், தலைவரும் நலமாக இருக்கிறார்.
என்ன.. பழைய தலைவர் போல இவர் விதம் விதமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க மாட்டார்.
இலங்கையில் ஆள் அடையாள அட்டைக்குப் படம் எடுத்தது போல ஒரு பக்கக் கன்னத்தை மாத்திரம் பல காலத்துக்கு காட்டிக்கொண்டு திரிவார்.
அதுவரை அவரது பிரச்சார வேலைகளை சீமான் என்ற புதிய பிரிகேடியரும், பாரதிராசா என்ற புதிய மாஸ்டரும், வை.கோ என்ற பழைய புலனாய்வுத் தலைவரும், நெடுமாறன் என்ற பழகிப்போன பாலசிங்கமும் செய்வார்கள்.
தலைவர் வெளியில் வரவேண்டிய அவசியமே இல்லை, அவ்வப்போது பழைய பிரபாகரனின் ஒலிப்பதிவுகளை இன்டர்நெட்டில் விட்டாலே போதும், தொண்டர்கள் தயாராக இருப்பார்கள்.
நக்கீரன் கோபாலிடம் இருக்கும் இந்த ஆர்டிஸ்டு கோபாலை வாடகைக்கு அமர்த்திக்கொண்டால், அவர் கன கச்சிதமாக 3D தொலைக்காட்சிகளை அதுவும் மரத்தால் ஆன கால்களுடன் வரைந்து தருவார்.
பிரபாகரனின் கன்னத்துக்கு எங்கிருந்து ஒளி பட்டாலும், அவர் வரைந்த தொலைக்காட்சிக்கு மாத்திரம் ஒரு விதமான நிழல் படும் வகையில் நிச்சயமாகப் பார்த்துக்கொள்வார், பின்னர் இப்படி அப்பட்டமாக அகப்பட்டுக்கொண்டாலும், புதிய டிபார்ட்மென்டுகளை ஆரம்பித்து சோர்ந்து போயிருக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்திக் கொள்ளலாம்.
இத்தனையையும் செய்யும் அதே பழைய ஆனால் புதிய புலித் “தலை” ஒருக்காலமும் இந்த மக்களிடம் உண்மையைச் சொல்லி, அவர்களோடு இணைந்து ஒரு உணர்வும்,உண்மையுமுள்ள போராட்டத்தை வழி நடத்த மாட்டார்.
ஏனெனில், அவரது அகராதியில் “தமிழர்கள்” என்போர் அவர்களை ஆதரிப்போர் மாத்திரமே.
அதே போல தம் உணர்வுகளை மேலோங்கச் செய்ய முன்னர், “அறிவை” மோத வைத்து இவர்களும் கேள்வி கேட்கமாட்டார்கள், ஏனெனில் இவர்கள் அவ்வாறு வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
அவசர அவசரமாக சாப்பாடெல்லாம் முடித்துவிட்டு ரெடியாகி, கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள், எங்கே? போகிறீர்கள் என்று கேட்டால் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போகிறோம் என்கிறார்கள்.
தற்போது வன்னி முகாம்களில் தவிப்போரில் கூட தமது பழைய உறுப்பினர்களுக்காகத்தான் அவர்கள் குரல் கொடுப்பார்களே தவிர, அப்பாவி மக்களுக்காகக் குரல் கொடுக்க மாட்டார்கள்.
எனவே, முகாம்களில் இருக்கும் “தமிழர்கள்” தொடர்பில் இந்தப் புலிகள் அக்கறைப்படும் ஒவ்வொரு தடவையும் இலங்கை அரசும் தன்னைச் சுதாரித்துக்கொண்டு மக்களுக்கு இவர்கள் விரும்பும் “இன்பத்தைக்” கொடுக்கும்.
மீண்டும் அதைப்பிடித்து இவர்கள் பிரச்சாரம் செய்யலாம், இப்படியே ஒரு சங்கிலித்தொடராக தாம் வாழும் காலம் வரைக்கும், “தமிழ்” மக்களை சிந்திக்கத் தெரியாத மக்களாக வைத்து, தம் வங்கிக்கணக்குகளை நிரப்பிக்கொள்ளலாம்.
எப்படித்தான் இந்தப் பிரச்சாரத்தை எடுத்துச்சென்றாலும், நீரிழிவு நோயினால் அவதியுற்ற அந்த பழைய “முகம் காட்டும்” தலைவரை நெடு நாட்களுக்கு உயிரோடு வைத்திருக்க முடியாது.
இன்று துயர நாட்கள், துக்க நாட்கள் , ஐரோப்பிய நகரங்களில் தோல்வியடைந்து போனதால் இந்தத் “தலைவர்களும்” தளபதிகளும் சுதாரித்துக்கொண்டனர்.
ஆனாலும், உண்மையை நெடுங்காலம் மறைக்க முடியாமல் ஆகும் போது..
“போங்கடா நீங்களும் உங்கட……………….. ” என்று அப்பாவிக்குடிமகன் போய் விடுவான்.
துரதிஷ்டம் அதுவரைக்கும் நெடுநாள் காத்திருக்கும் தலைவிதி “அவர்களுக்கு” எழுதப்பட்டிருக்கிறது.
எது எப்படியோ, தலைவரும் தளபதிகளும் தற்போதைக்கு நலம் ! அனைவரும் இந்த “சந்” தோசத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே அவர்கள் அவாவும்.
சரி, எப்போதும் உங்களை சிந்திக்க வைத்துக்கொண்டேயிருக்கிறோம், இப்போது கொஞ்சம் விளையாடியும் பாருங்கள், கீழே உள்ள படத்தில் காணப்படும் ஆகக்குறைந்தது ஆறில் நான்கு “அதிசயங்களை” காட்டியிருக்கிறோம், மீதி இரண்டையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
brown flore
மே22, 2009 at 6:15 பிப
no point in taking a third grade journalist serius just dont care
A.Chandrakumar
மே22, 2009 at 9:46 பிப
நீங்கள் என்ன உண்மையை எழுதினாலும் புலி ஆதரவாளர்களான ஐந்து அறிவு ஜீவன்களுக்கு எதுவுமே புரியமாட்டாது. இவர்கள் எல்லாம் நடமாடும் றொபோக்கள்.
இவர்களை மாற்றும் மென்பொருள் புலித்தலைமையிடம் மட்டும் தான் உள்ளது. அந்த புலித்தலைமையோ அழிந்து விட்டது. இனி இவர்களுக்கு புதிய வன்பொருள் பொருத்தி புதிய மென்பொருள் பதிந்தால் மட்டுமே இந்த ரொபோக்களுக்கு உண்மை விளங்கும்.