RSS

பிரபாகரனின் “அந்த” இறுதி நாள் ..

20 மே

இந்தப் பதிவை நீங்கள் படிக்கும் முன்னராகவே இது ஊகத்தில் அமையப் பெற்றிருக்கும் ஒரு பதிவென்பதை மனச்சாட்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆனாலும், இந்த ஊகங்களை நியாயப்படுத்தும் வலுவான காரணிகள் இருப்பதனால் சில வேளை இது வே உண்மையாகவும் கூட இருந்திருக்கலாம், உண்மைய ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் தொடர்ந்து படித்துப்பாருங்கள்.

அவர் இறக்கவே இல்லை என்பவர்களை தூக்கி வீசிவிட்டு எங்கே இறந்தார் என்பதிலிருந்து ஆரம்பிப்பது நல்லது எனப்படுகிறது.

அவரது மரணச் செய்தி வெளிவரும் வரை இறுதி நேரத்தில் நடந்தேறிய சில சம்பவங்களை மீள ஆராய்வதில் சில “உண்மைச்” செய்திகள் கிடைக்கலாம்.

இன்று விடுதலைப்புலிகளின் ஒரே குரல் பத்மநாதன் அல்லது என்று இன்டர்போலால் தேடப்படும் கே.பி ஆகும்.

ஏனெனில் அவரை மட்டும் தான் தன் இறுதிக்காலத்தில் பிரபாகரன் ஒரு புலிப்பிரதிநிதியாக அதுவும் சர்வதேசங்களோடு பேசவல்ல பிரதிநிதியாக அறிமுகப்படுத்தியிருந்தார், அதுவே விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தின் இறுதி நியமனமாகவும் இருந்தது.

பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தியை மறுத்திருக்கும் கே.பி, பிரபாகரனின் காலடி வரை இராணுவ சிப்பாய்களின் துப்பாக்கி ரவைகள் பாயும் தொலைவு வந்த நேரத்தில் மிக முக்கியமான ஒரு அறிவிப்பை மேற்கொண்டிருந்தார்.

“எமது துப்பாக்கிகளை மெளனிக்க நாம் தயாராக இருக்கிறோம்” எனும் செவிடன் காதில் ஊதிய சங்கான அறிவிப்புத்தான் அது.

பிரித்தானியாவின் Channel 4 தொலைக்காட்சி தவிர, வேறு எந்த சர்வதேச ஊடகத்தையும் கவராத இந்த அறிவிப்பு வந்த அந்தக் கணமே, பிரபாகரனின் “இருப்பு” கேள்விக்குறியாக்கப்பட்டதை விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் தவிர்ந்த அனைத்துலகமும் உணர்ந்துகொண்டது.

“தலைவரே இந்த ஆணையை” நேரடியாகக் கூறினார் என்று கே.பி வழங்கிய அந்த சாட்சியத்தில், தலைவருடன் நான்கு மணி நேரம் நான் தொலைபேசியில் உரையாடினேன் என்றும் கூறப்பட்ட போது, பிரபாகரன் தன் இறுதி நிலையை உணர்ந்த பின் தான் இந்தப் பேச்சு வார்த்தை நடந்திருக்கக்கூடும் என்பது தெளிவானது.

அப்படியானால், சர்வதேச அரங்கில் இதுவரை காலம் அனைத்துலக போலீசுக்கும் மண்ணைத் தூவி தமது ஆயுத மற்றும் கடத்தல் வியாபாரங்களை கச்சிதமாகப் பார்த்து வந்த கே.பியின் சர்வதேசத் தொடர்புகளின் மூலம் “எதையாவது” செய்து, இலங்கை இராணுவத்தினை பிரபாகரனை நெருங்காமற் செய்வது முழு நோக்கம் என்பதும் அப்பட்டமாகத் தெளிவாகியது.

கருணா கூட தான் பிரிந்து வந்த மறுநாள் பி.பிசி க்குப் பேட்டியளிக்கும் போது தான் தன் “தலைவரை” மதிப்பதாகவே கூறியிருந்தாலும், இந்த கே.பி “பிரபாகரன்” என்று பெயர் சொல்லியே இறுதி செவ்விகளில் விளித்திருந்ததை அந்த ஒலிப்பதிவுகளில் கேட்கலாம்.

எனவே, பிரபாகரனின் விடுதலைப் புலிகளின் “தலையாய” நிலையில் கே.பி இருந்திருப்பதும், கே.பியின் சர்வதேச வலைப்பின்னல் தொடர்புகள் இவர்களின் போராட்ட சூற்சுமத்தின் ஒரு பகுதி ஆளுமையைக் கொண்டிருந்திருப்பதுவும் கூட ஊகிக்கக் கூடிய ஒன்றாக மாறுகிறது.

சம நிலையில் வைத்து, புலிகளின் “இருப்பை” வைத்து அரசியல் வியாபராம் செய்யத் தேவையில்லை என்கிற நிலையை மிகக் கடுமையாக எடுத்த மஹிந்த அரசாங்கம், இந்த யுத்தம் ஆரம்பித்த நாள் முதல் பழைய சர்வதேச தலையீடுகளை முற்று முழுதாக நிராகரித்து, அவர்களை தமது எல்லைகளுக்கப்பாலும், அவர்கள் கூற்றுக்களை இலங்கையின் இறையாண்மைக்கு அப்பாலும் வெளியில் வைத்தே கையாண்டு வந்ததையும் அவதானிப்பதன் மூலம், இந்த வலைப்பின்னலின் ஆளுமையை இலங்கை அரசாங்கமும் நன்கு அறிந்திருந்திருக்கக் கூடும் என்கிற முடிவையும் எட்ட முடியும்.

கே.பி யின் குரல் சர்வதேசத்தை நோக்கி எழ முன்னராக அதே சர்வதேசத்தை நோக்கிய ஒரு கண்டணத்தையும் அவர் வெளியிட்டதாக தமிழ்நெட் வெளியிட்டிருந்தது.

கண்டனத்துக்குப் பின் தலையீடு எனும் வகையிலாவது இந்த வலைப்பின்னலை உள்ளே இழுத்து, தம் “விடுதலைப்போராட்ட” வியாபாரத்தை நடத்த இவர்கள் எடுத்த அடுத்த முயற்சியாகவே இறுதியாக வழங்கப்பட்ட “ஆயுதங்களை மெளனிக்கும்” செவ்வியும் அறிக்கையும் பார்க்கப்படவேண்டும்.

உயிர்மேல் ஆசையுள்ள பிரபாகரனும் இறுதி வரை முள்ளி வாய்க்காலில் தன் படை சூழக் காத்திருந்ததும் கே.பியின் சர்வதேச வலைப்பின்னலின் சக்தியை நம்பித்தானாக இருக்க வேண்டும்.

இறுதியாகத் தன் மனைவியையும்,பிள்ளையையும் நாட்டை வி்ட்டு அனுப்பும் வேலையை (அதுவும் நடந்திருந்தால்) பிரபாகரனுக்காக கே.பியும் அவரது சர்வதேசத் தொடர்புகளும் தான் செய்து கொடுத்திருக்க வேண்டும்.

எது எப்படியோ, இலங்கைக்கு வெளியே என்று வந்து விட்டால், விடுதலைப் புலிகள் எனும் இயக்கம் முன்னாள் கே.பி இன்னால் எஸ்.பியின் கைகளினாலேயே இயக்கப்பட்டிருக்கிறது.

எனவே, இறுதியாக கே.பியின் ஏற்பாட்டில் ஒரு “நாடகம்” அரங்கேறியிருக்க வேண்டும்.

இதை “நாடகம்” என்று குறிப்பிடுவதற்கும் சில காரணங்கள் உண்டு, அதில் பிரதான காரணம் பிரபாகரனின் இறந்த உடலம்.

கே.பியின் ஏற்பாட்டில் சில சர்வதேச சக்திகளின் துணையோடு இலங்கை இராணுவத்தோடு இறுதி நேரப் பேரம் ஒன்று நடந்தேறியிருப்பது மிகத் தெளிவாக கே.பியாலேயே கூறப்பட்டிருக்கிறது.

தமது தலைவர்கள் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்கள் என்று ஆரம்பித்த கே.பியின் அறிக்கையை புதினம் வெளியிட்டிருந்தது, அதில் இலங்கை இராணுவத்தின் 58வது படைப்பிரிவோடு பேசி, நடேசன்,புலித்தேவன் உட்பட ஒரு சிலர் வெள்ளைக்கொடியை ஏந்திக்கொண்டு வெளியில் வந்து சரணடைவதாக உடன்பட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தது.

எனினும், தற்போது அந்தத் தலையங்கத்தையும் உள்ளடக்கத்தையும் கொஞ்சம் மாற்றி..  “தகவல்கள் தெரிவிக்கின்றன” என்று தமது இறுதி செய்தியாளரும் தொலைபேசியை துண்டித்துக்கொண்டார் என்று சொன்ன பின்னும் புதினம் செய்தியை எடிட் செய்திருக்கிறது.

http://www.puthinam.com/full.php?2b3WuZe0dQe4j0ecCI8B3b4kdFj4d3d5g3cc2HoT3d43cUX3b035Nm3e

அவர்கள் செய்தியை எவ்வாறு மாற்றியமைத்தாலும், ஒரு உண்மை மட்டும் இங்கே மிகத் தெளிவாகப் புலனாகிறது.

அதாவது, இறுதி நேரத்தில் சில சர்வதேச சக்திகளின் உதவி நாடப்பட்டிருக்கிறது என்பதுதான் அது.

அதைப் புதினம், அனைத்துலக சமூகத்திடமிருந்து இந்த சரணடைதலுக்கு சாதகமான சமிக்ஞைகளும் கிடைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிப்பதாகக் கூறி (தற்போது) , “ஆம்” இந்த இறுதி நேர பேரம் நடந்தது உண்மை என்பதற்கு சாட்சியளிக்கிறது.

இதே வேளையில் தமிழ்நெட்டும் மிகவும் விரக்தி யடைந்த நிலையில் , Colombo ‘ended’ the battle with a massacre என்று மே மாதம் 18ம் திகதியும், மறு நாள் 19ம் திகதி War crime in the massacre of LTTE officials என்று தலைப்பிட்டு புதினத்தின் அதே செய்தியையும் வெளியிட்டிருந்தது.

இறுதி நேரப் பேரம் கே.பி தலைமையில் நடைபெற்றது உண்மெயென்றால் அது நடேசனையும், புலித் தேவனையும் காப்பாற்றுவதற்காக நடந்த பேரமாக இருந்திருக்கப் போவதே இல்லை.

அதன் முழுப் பின்னணியும் பிரபாகரனைக் காப்பாற்றுவதாக மட்டுமே இருந்திருக்கும்.

30 வருடங்கள் தன் எதோச்சாதிகாரப் போக்கால் நாட்டை சீரழித்தாலும், இறுதிக் காலத்திலாவது, சிறைகளில் இருந்தாவது ஒரு உண்மையான உரிமைப் போரை வழி நடத்தலாம் என்ற ஆகக்குறைந்த நல்லெண்ணமாவது பிரபாகரனின் உள்ளத்தில் வந்திருந்தாலும் வந்திருக்கலாம், இல்லை அப்படியாவது வெளியே போய் விட்டு ” நாம் சொன்னால் மக்கள் எதையும் நம்புவார்கள் ” பின்னர் வேறு எதையாவது கூறி சமாளித்துக்கொள்ளலாம், முதலில் தலை தப்பினால் போதும் என்றும் நினைத்திருக்கலாம்.

இரண்டுமே பிரபாகரனால் மட்டுமே சொல்லக்கூடிய உண்மை.

ஆனாலும், இந்தப் பேரத்தை நடத்திய கே.பிக்கு இதன் அடிப்படை நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.

30 வருட போராட்டமே பிரபாகரனைச் சுற்றி நடந்த போது, இறுதி நேர பேரம் பிரபாகரனின் நலனில் தான் முழு அக்கறை கொண்டிருந்திருக்கும்.

வெற்றிக்களிப்பில் எதிரியைச் சுற்றி வளைத்திருந்த இராணுவம் இதற்கு உடன்பட்டதா இல்லையா என்பது அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களின் வெளிப்பாடு.

கடந்த தடவை இந்திய இராணுவத்தால் பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டபோது காப்பாற்றுவதற்கு ஒரு பிரேமதாசா இருந்தார், ஆனால் இந்தத் தடவை கே.பி யின் சர்வதேசத் தொடர்பைத் தவிர வேறு எதையுமே நாடிச்செல்ல முடியாத இறுக்கமான சூழ்நிலை என்பதால் கே.பி எதைச் செய்தாலும் அதில் தான் பிரபாகரனின் முடிவும் தங்கியிருந்தது.

இப்போதிருந்து இதை இரண்டு வகையாகப் பார்க்கலாம், ஆனாலும் முதலில் புலிகளுக்கு ஆதரவான கோணத்திலேயே இதைப் பார்ப்பதாயின், பிரபாகரனின் உடலத்திலிருந்து அதை ஆரம்பிக்க வேண்டும்.

இறுதி நேரத்தில் அங்கே நடந்தது என்ன ? எனும் ஊகத்திற்கு அவரது உடலம் சில சாட்சிகளைத் தருகிறது. அதில் பிரதானமானது அவரது தோற்றம்.

அரசாங்கம் வெளியிட்டிருக்கும் ஒளிப்பதிவுகள் மற்றும் நிழற்படங்களில் பிரபாகரனும் முன் பகுதியில் எந்த வொரு தாக்கத்தையும் காண முடியவில்லை.

அவரது கண் இமைக்குக் கீழ் இருந்து பாதம் வரை எந்த ஒரு சிறு துப்பாக்கிக் காயங்களோ அல்லது வேறு குண்டுச் சிதறல்களால் ஏற்பட்ட காயங்களோ,அடையாளங்களோ அடியோடு இல்லை.

எனவே, பிரபாகரன் தொலை தூரத்தில் இருந்து சுடப்படவில்லை என்று சாதாரணமாகவே இதன் அடிப்படையில் முடிவெடுக்கலாம்.

அப்படியானால், அவர் அருகில் கொண்டுவரப்பட்டிருக்கிறார் அல்லது அவருக்கு மிக அருகில் இராணுவம் இருந்திருக்கிறது.

இந்த நிலையில், இராணுவத்தின் ஒரு கூற்றை கவனிப்போமாயின்

“He was certainly not man enough to fight a single battle against army, but instead tried to save his life until the last moment,” என்றும் ..”Not for a single second did he he want to commit suicide, but tried to escape betraying his most loyal followers before a soldier shot him down”. என்றும் மிக உறுதியாகக் கூறப்பட்டிருக்கிறது.

இதன் அடிப்படையில் மேற்கூறிய பேரம் பேசுதலையும் தொடர்பு படுத்திப் பார்த்தால் ஆகக்குறைந்தது பிரபாகரனுக்கும் இராணுவத்துக்கும் இடையில் ஒரு Close Range தொடர்பு இறுதி நேரத்தில் இருந்திருக்கும் என்று உறுதியாக நம்ப முடிகிறது.

இந்த சந்திப்பு ஏதோ ஒரு வகையில் ஒரு முறுகல் நிலையைத் தோற்றுவித்திருக்கும் வாய்ப்புகளும் அதிகமாகக் காணப்படுகிறது.

அது பேரங்களின் விளைவாகவே இருந்திருக்கும் சாத்தியம் அதிகமாகக்காணப்படுகிறது.

அதற்கான சில “அந்த நேர” ஊகங்களுகம் வலுவான காரணிகளாக அமைகிறது.

பிரதானமாக குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு ஆம்புலன்ஸ் வண்டியின் பயணம் குறித்துக் கசிந்த செய்தியைப் பார்க்க வேண்டும், இந்தப் பக்கத்தில் இராணுவத்துடனான பேரம் நடந்துகொண்டிருக்கும் போது, ஏதோ ஒரு வகையில் இராணுவத்தினருக்கு நெருக்குதலைக் கொடுக்கும் நோக்கில் பிரபாகரனால் அல்லது பொட்டம்மானால் தீட்டப்பட்ட திட்டத்தின் படி, சுற்றி வளைத்திருக்கும் இராணுவத்தினரைத் தாண்டிச் செல்ல ஒரு வண்டி முயற்சித்திருக்கிறது.

இதன் போது, கலவரமடைந்த இந்த சந்திப்பு இறுதியில் மீண்டும் ஒரு சண்டையில் முடிந்திருக்கிறது.

மிரண்டு போன இராணுவத்தின் ஒரு பகுதி ஆம்புலன்ஸை முற்றாக அழிக்க, இப்படியான ஒரு இக்கட்டான நிலையில் இந்த அளவு ரிஸ்க் எடுத்து வெளியேற முயற்சிப்பதாக இருந்தால் அது பிரபாகரனைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்கிற ஒரு முடிவுக்கு வந்து, தப்பிப் போக எத்தனித்த பிரபாகரன் வண்டியோடு சேர்த்து தாக்கியழிக்கப்பட்டார் என்கிற செய்தி பரவியிருக்க வேண்டும்.

இந்த செய்தியில் முழு உலகமும் கவனத்தைத் திருப்பியிருந்ததனால், இன்னொரு செய்தியை கவனிக்கத் தவறி விட்டது, அதாவது மே மாதம் 19ம் திகதி காலையிலும் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறு அளவில் சண்டை நடந்தது என்பதாகும்.

பேரம் பேசுதல் நடைபெற்ற நேரம் காலை 5.45 என்று புதினம் தெரிவித்திருக்கிறது, எனவே அதற்கு முன்பாக இருளில் பல விடயங்கள் அங்கே நடைபெற்றிருக்கின்றன.

இப்போது சண்டை வெடித்ததனால் பிரிக்கப்பட்ட புலிகளின் இறுதி அணி சிறு சிறு குழுக்களாகவே இராணுவத்துக்கு முகம் கொடுத்திருக்க வேண்டும்.

அந்த சந்தர்ப்பங்களில் திக்குத் தெரியாமல் சிதறிப்போன புலித் தலைவர்களின் உடலங்களைத்தான் இராணுவம் இன்னும் தேடிக்கொண்டிருப்பதாகவும் கொள்ளலாம்.

எனினும், பிரபாகரனைப் பொறுத்தவரை இராணுவத்தின் பிரதான இலக்கு அவர் என்பதால் அவர் தனியாக மாட்டிக்கொண்டது போலத் தான் தெரிகிறது.

அதிலும் மிக மிக நெருக்கமாக இருந்து தலையின் பின் பகுதி குறி வைக்கப்பட்டிருக்கிறது, அதுவும் இராணுவம் காட்டிய படங்களைப் பார்க்கும் போது, தலையின் மேற்பகுதியில் தாக்குதல் நடந்ததுக்கான அறிகுறிகள் காணப்படுகிறது.

அவரது முகத்தை மக்களுக்குக் காட்டுவதற்காக வைத்திருக்க வேண்டும் என்று திட்டமிட்டு தாக்குதலை நடத்தி விட்டு, பின்னர் தண்ணீரில் வீசி, சில மணிநேரங்களின் பின்னர் எடுத்திருக்கவும் கூடும்.

அல்லது உண்மையிலேயே அந்த இறுதி நேரத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, தப்பிச் செல்ல முயன்ற பிரபாகரனின் தலையின் பின் பகுதி தாக்கப்பட்டிருக்கவும் கூடும்.

எதுவாகினும் பிரபாகரன் சுடப்பட்டதை விட பாரிய ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டிருக்கக்கூடிய சாத்தியத்தையே அதிகமாக ஊகிக்க முடிகிறது.

“Not for a single second did he he want to commit suicide, but tried to escape betraying his most loyal followers before a soldier shot him down”

இராணுவக் கூற்றை வைத்துப் பார்க்கும் போது தன்னோடு இருந்த தமது விசுவாசிகளையும் விட்டு விட்டு பிரபாகரன் தப்ப முனைந்ததாகவும் இறுதி நேரம் வரைக்கும் தன் உயிரை மாய்க்க அவர் விரும்பவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது சாட்சியங்களால் நிரூபிக்கப்படக்கூடிய உண்மைக் கூற்றாக இல்லாவிடினும், இராணுவம் கூறுவது போன்று யாரோ ஒரு சிப்பாய் “இவர்தான் பிரபாகரனைக் கொன்றவர்” என்று அறிமுகப்படுத்தப்படப் போகிறார், அவரது விளக்கங்கள் மேலதிக ஊகங்களுக்கான விடைகளைத் தரலாம், ஆனாலும் அவற்றையும் நிரூபிக்க முடியாது.

எது எப்படியாகினும், இதில் நிரூபிக்கப்படக்கூடிய ஒரே உண்மை, இரு தரப்புத் தகவல்களும் பெருமளவு உடன்படும், இறுதி நேரப் பேரமாகும்.

இராணுவம் பிரபாகரனை நெருங்கியிருந்த சூழ்நிலையும், கே.பியின் சர்வதேச சமூகத்தினூடான பேரமும் ஏறத்தாழ உண்மையில் நடந்த சம்பவங்களாக இருப்பதனால், இதன் அடிப்படையில் இப்போது வரை வெளியாகியிருக்கும் விடயங்கள் இந்த ஒவ்வொரு சம்பவத்தையும் தொடர்பு படுத்தும் வலுவான காரணிகளாக இருக்கின்றன.

இலங்கை இராணுவம் தற்போது சூசையின் உடலம் மற்றும் வேறு சில புலிகள் இயக்கப் போராளிகளின் உடலங்களின் படங்களையும் வெளியிட்டிருக்கிறது, இதில் சூசையே மிக மோசமாக துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திக் குறிப்புகள் இணைக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது பிரபாகரன் இராணுவத்தின் மிக நெருங்கிய பிடியில் முழுமையாக அகப்பட்டது உறுதியாகிறது. 

பிரபாகரன் இறக்கவில்லை என்று நம்புவோர் இது தொடர்பில் இப்போது அலட்டிக்கொள்ளத் தேவையில்லை, உங்கள் மனங்கள் அதை ஏற்றுக்கொள்ளும் நாளில் இதைப்பற்றி சிந்தித்துக்கொள்ளலாம்.

துரதிஷ்டவசமாக இதுதான் உண்மையில் நடந்திருக்கும் என்று வந்தால், பிரபாகரன் எனும் மனிதனின் உயிர்ப்பயம்,வீரம் போன்றன பெரும் கேள்விக்குறிகளாக்கப்படும்.

இன்னும் பிரபாகரனே சாகவில்லை அதற்குள் இப்படியொரு ஆய்வா என்று நினைத்தால் இது வெறும் “புலி எதிர்ப்பு” ஆய்வுதான், வேண்டுமானால் உண்மைகள் ஒரு நாள் உணரப்பட்டதும் வந்து எங்கள் ஊகங்கள் சரியாக இருந்ததா என்பதை சொல்லிச் செல்லுங்கள்.

புலிகளின் அனைத்துப் பினாமி ஊடகங்களும் இந்த நிமிடம் வரை பிரபாகரன் சாகவில்லை என்று காட்டுக்கத்தல் கத்தி, அவரது பழைய பழைய படங்களை வைத்து ஒப்பீடு நடத்திக்கொண்டிருக்கிறார்களே தவிர மிக அண்மையில் கடந்த நவம்பர் மாவீரர் தினத்தில் வெளிவந்த அவர் படங்களை ஒப்பீடு செய்ய அவர்களே பயப்படுகிறார்கள்.

எனினும், புலிப்பினாமிகள் அத்தனை பேரும் காட்டுக்கத்தல் கத்திக்கொண்டிருக்கும் இந்த வேளையில், புலிகளின் பிரதான ஊடகங்களான தமிழ்நெட்டும், புதினமும் இதுவரை உத்தியோகபூர்வமான ஒரு மறுப்பறிக்கையைக் கூட வெளியிடவில்லை என்பது அனைத்து புலி ஆதரவாளர்களும் கவனிக்க வேண்டிய விடயமாகும்.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கே.பி சொன்னதாக புதினத்தில் இருக்கும் செய்தியும் இலங்கை இராணுவம் பிரபாகரனின் உயிரிழப்பை உறுதி செய்ய முன்னர் பதியப்பட்ட பதிவாகும்.

சுத்துமாத்துப் பினாமிகள் மட்டும் கத்திக்கொண்டிருக்க, சர்வதேசத்தினால் புலிகளின் ஊடகங்களாக மேற்கோள் காட்டப்பட்ட இவ்விரு ஊடகங்களும் மிகவும் அமைதியாக இருப்பதன் பின்னணியில் அவர்களுக்கும் கூட ஒரு “ஆசை” இருக்கலாம், அல்லது கே.பியின் அடுத்த ஈழத் திட்டத்திற்கான ஆரம்பமாகவும் இருக்கலாம்.

ஆனாலும் புதினத்தில் யாருக்கோ மனச்சாட்சி உறுத்துகிறது போலவும் இருக்கிறது, மே 20 திகதியிடப்பட்ட ஒரு பதிவின் தலைப்பு

 

துயரைப் பகிர்வோம்; அமைதியாக எங்களை நாங்களே தேற்றுவிப்போம்
[புதன்கிழமை, 20 மே 2009, 08:59 மு.ப]

 

 என்று அமைந்திருக்கிறது, சூசகமாக சில கருத்துக்கள் அங்கே கசிய விடப்பட்டு, அதைக் கருத்துக்களம் எனும் பெயரில் மின்னஞ்சல் முகவரியிட்டு மக்களின் கருத்துக்காகவும் விடப்பட்டிருக்கிறது.

இது ஒரு சிறு மாற்றம், இந்த மாற்றம் நாளை ஒரு நாள் உண்மைகளைச் சொல்லும்.

அந்த உண்மைகள் வெளிவரும் வேளையில், இந்த இறுதி நேரப் “பேரம்” தொடர்பான பல விடயங்கள் வெளி வரும், அப்போது சில வேளைகளில் நமது ஊகங்களும் ஊர்ஜிதப்படுத்தப்படலாம்.

எனினும், உண்மைகளைப் பேசும் பக்குவத்தைப் இழந்து, பரப்புரை மருத்துவர்களிடம் விடுதலைப் போராட்டத்தை விற்றது முதல் இது வரை புலிகள் தப்பித்தவறியும் உண்மைகளை மக்கள் முன் நியாயமாக எடுத்துரைத்ததே இல்லை.

எனவே, பிரபாகரனைக் காலங்கடந்தாவது “மாவீரனாக்கும்” முயற்சிகளுக்காக பல கதைகள் புனையப்படும்.

இலங்கை இராணுவத்தின் இராணுவ வெற்றியானது, பிரபாகரன் இந்தத் தீவில் இறுதியாக ஒளிந்திருந்த கடைசி அங்குலத்தையும் மீட்டெடுத்த பின்னர் தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, அவர் தலை முன்னால் இராணுவத் துப்பாக்கிகள் நீட்டப்பட்டது மறுக்க முடியாதது, ஆனாலும் அதையும் மறுத்து பல சூப்பர் மேன் கதைகளை எதிர்கால நலன்களை கருத்திற்கொண்டு இன்நாளின் புதிய தலைவர் முன்னெடுத்துச் செல்லும் சாத்தியமும் உண்டு.

ஒட்டு மொத்த புலிகள் இயக்கத்தின் தூண்களும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு கூண்டோடு அழிக்கப்பட்ட வரலாறு வரை அவர்களது விளக்கங்ள் மாறிச்செல்லலாம், இது புலிகள் ஆதரவு நிலையிலிருந்து பார்க்கக் கூடிய பார்வை.

ஆனால், ஒட்டுமொத்தத் தளபதிகளும் ஒரே இடத்தில் “குவிக்கப்பட்ட” யுத்த தீர்க்க தரிசனம் !? என்பதன் பின்னால் இதே விடயத்தை புலிகளுக்கு எதிரான போக்கிலிருந்தும் ஆராய ஆரம்பித்தால், அது ஏன் இவர்கள் ஒரே இடத்தில் “குவிக்கப்பட்டார்கள்” எனும் கேள்வி எழும்.

இலங்கையில் இறுதியாகப் போர் நடந்த அத்தனை நிலப்பகுதியும் இராணுவத்தினருக்கு புதிய இடங்களாக இருந்தாலும், புலிகளுக்கு இது பழகிப்போன நிலமாகும்.

இராணுவம் வரைபடங்களை வைத்து முன்னேறிக்கொண்டு சென்ற ஒவ்வொரு அங்குல நிலத்தையும் புலிகள் கால் நடையாகவும் பல காலங்கள் கடந்து சென்றிருப்பார்கள்.

அந்த அளவுக்கு தம் கட்டுப்பாட்டுப் பகுதியின் பூகோள அமைப்பை நன்கறிந்து வைத்திருந்த புலிகள், தம் கடற் பகுதிகள், தம்மிடம் இருக்கும் வசதிகள், தம்மால் முடிந்தது முடியாதது எது என்பதெல்லாம் நன்கு அறிந்து வைத்திருந்த புலிகள், அவர்கள் ஆதரவாளர்களே சொல்லுவது போல் பின்வாங்கிப் பின்வாங்கித்தான் சென்றார்கள் என்றால் யாருடைய தூண்டுதலால் பின்வாங்கினார்கள்? 

பின்வாங்கிப் பின்வாங்கிப் பின்னர் முள்ளி வாய்க்காலில் ஒட்டுமொத்தப் பெரும் தலைகளுடன் ஒரு இடத்தில் ஏன் குவிந்து கொண்டார்கள்? நாளை ஒரு விபரீதம் ஒன்று நடந்தால் முழுப் புலியும் கூண்டோடு அழிக்கப்பட்டுவிடுமே என்கிற சாதாரண அறிவு கூட இல்லாமலா புலனாய்வுப் பிரிவெல்லாம் வைத்திருந்தார்கள்.

சயனைட் வில்லைகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு வாழ்ந்த அனைத்துத் தளபதிகள், முக்கியஸ்தர்கள் சகிதம் ஒரு இடத்தில் குவிந்து, ஒரு கட்டத்தில் சயனைட்டெல்லாம் அடிக்க வேண்டாம் வெள்ளைக் கொடி பிடிப்போம் எனும் மன நிலைக்கு எதனால் கொண்டுவரப்பட்டார்கள்?

முள்ளிவாய்க்காலில் அவர்கள் காலடிக்கு இராணுவம் வரும் வரை பலிகொடுத்த ஆயிரமாயிரம் மக்கள்,போராளிகளின் தியாகங்களை எல்லாம் சாகடித்துவிட்டு இறுதியாகவும் இப்படிப் பேரம் பேசப்போன புலிகளின் உண்மையான தத்துவம் என்ன?

பேரம் பேசி உயிர்களை தப்ப வைத்துக்கொள்ள அவர்கள் முயற்சி செய்ய, வாருங்கள் வந்து அமருங்கள் என்று பாய் விரித்து அத்தனை பேருக்கும் புதினம் சொன்னது போல வஞ்சகத் தாக்குதலைத்தான் இராணுவம் தன் யுத்த தந்திரமாகத்தான் செய்திருந்தாலும் “அந்த” நிலைக்கு அவர்கள் சென்றதன் காரணம் என்ன? உண்மையிலேயே அவர்கள் புலிகளா இல்லை பூனைகளா?

இல்லை “நான் உங்களை எல்லாம் காப்பாற்றுவேன்” என்று யாராவது அனைவரையும் ஒரு இடத்தில் குவித்து “காவு” கொடுத்தார்களா? அப்படியானால் அதில் அவருக்கு அல்லது அவர்களுக்கு என்ன இலாபம்? அதற்காக அவர்கள் பெற்றது என்ன? இழந்தது என்ன? என்று ஓராயிரம் தொடர் கேள்விகள், புலிகளுக்கு எதிரான நிலையிலிருந்து கேட்கப்படலாம்.

அத்தனைக்கும் உண்மை தெரிந்த பிரபாகரன் இப்போது உயிரோடு இல்லை, எனவே இந்த உண்மைகளும் மறைக்கப்பட்டு இன்னும் சில காலங்கள் புலி ஆதரவாளர்களி்ன் “உணர்வுகள்” பந்தாடப்படுவது உறுதி.

இரண்டில் எந்தப் பக்கம் பார்த்தாலும், பிரபாகரன் இராணுவத்தின் பிடியில் மிக இறுக்கமாக, மிகவும் நெருக்கமாக வைத்து கொல்லப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சியமாகத் தெரிகிறது.

ஆனாலும் சுய சிந்தனையுள்ளவர்களுக்கு, இனி வரப்போகும் இருபக்க “அறிக்கைகளும்” பல விடயங்களை தெரிவுபடுத்தும் என்றும் எதிர்பார்க்கலாம்.

உணர்வோடு ஆரம்பித்து பல்லாயிரம் உயிர்களுக்கு உலை வைத்து, இறுதியில் நீரோடு கிளறப்பட்டு, மீண்டும் தண்ணீரில் முடிந்து விட்டது தனித் தமிழ் ஈழ விடுதலைச் சரித்திரம்.

அடுத்த அத்தியாயமாவது மக்கள் நலன் சார்ந்ததாக அமைய வேண்டும், அல்லல் படும் மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும்!

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

10 responses to “பிரபாகரனின் “அந்த” இறுதி நாள் ..

 1. உமாபதி

  மே20, 2009 at 4:07 பிப

  //அடுத்த அத்தியாயமாவது மக்கள் நலன் சார்ந்ததாக அமைய வேண்டும், அல்லல் படும் மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும்!//

  மிக அவசியமான ஒன்று.

   
 2. brown flore

  மே20, 2009 at 5:52 பிப

  arumaiana karuthu

   
 3. aravi

  மே20, 2009 at 6:18 பிப

  very good article

   
 4. kalivarathan

  மே22, 2009 at 2:22 பிப

  good artical

   
 5. prasanna

  மே28, 2009 at 8:52 பிப

  Well said……
  i thoroughly agree with your point of opinion and reality.

   
 6. anbu

  திசெம்பர்24, 2009 at 6:07 முப

  அந்த அளவுக்கு தம் கட்டுப்பாட்டுப் பகுதியின் பூகோள அமைப்பை நன்கறிந்து வைத்திருந்த புலிகள், தம் கடற் பகுதிகள், தம்மிடம் இருக்கும் வசதிகள், தம்மால் முடிந்தது முடியாதது எது என்பதெல்லாம் நன்கு அறிந்து வைத்திருந்த புலிகள், அவர்கள் ஆதரவாளர்களே சொல்லுவது போல் பின்வாங்கிப் பின்வாங்கித்தான் சென்றார்கள் என்றால் யாருடைய தூண்டுதலால் பின்வாங்கினார்கள்?

  பின்வாங்கிப் பின்வாங்கிப் பின்னர் முள்ளி வாய்க்காலில் ஒட்டுமொத்தப் பெரும் தலைகளுடன் ஒரு இடத்தில் ஏன் குவிந்து கொண்டார்கள்? நாளை ஒரு விபரீதம் ஒன்று நடந்தால் முழுப் புலியும் கூண்டோடு அழிக்கப்பட்டுவிடுமே என்கிற சாதாரண அறிவு கூட இல்லாமலா புலனாய்வுப் பிரிவெல்லாம் வைத்திருந்தார்கள்.

  சயனைட் வில்லைகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு வாழ்ந்த அனைத்துத் தளபதிகள், முக்கியஸ்தர்கள் சகிதம் ஒரு இடத்தில் குவிந்து, ஒரு கட்டத்தில் சயனைட்டெல்லாம் அடிக்க வேண்டாம் வெள்ளைக் கொடி பிடிப்போம் எனும் மன நிலைக்கு எதனால் கொண்டுவரப்பட்டார்கள்?

   
 7. AbooAbdulRahmaan

  ஜனவரி14, 2010 at 6:57 முப

  பின்வாங்கிப் பின்வாங்கிப் பின்னர் முள்ளி வாய்க்காலில் ஒட்டுமொத்தப் பெரும் தலைகளுடன் ஒரு இடத்தில் ஏன் குவிந்து கொண்டார்கள்? நாளை ஒரு விபரீதம் ஒன்று நடந்தால் முழுப் புலியும் கூண்டோடு அழிக்கப்பட்டுவிடுமே என்கிற சாதாரண அறிவு கூட இல்லாமலா புலனாய்வுப் பிரிவெல்லாம் வைத்திருந்தார்கள்.

  சயனைட் வில்லைகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு வாழ்ந்த அனைத்துத் தளபதிகள், முக்கியஸ்தர்கள் சகிதம் ஒரு இடத்தில் குவிந்து, ஒரு கட்டத்தில் சயனைட்டெல்லாம் அடிக்க வேண்டாம் வெள்ளைக் கொடி பிடிப்போம் எனும் மன நிலைக்கு எதனால் கொண்டுவரப்பட்டார்கள்?

  முள்ளிவாய்க்காலில் அவர்கள் காலடிக்கு இராணுவம் வரும் வரை பலிகொடுத்த ஆயிரமாயிரம் மக்கள்,போராளிகளின் தியாகங்களை எல்லாம் சாகடித்துவிட்டு இறுதியாகவும் இப்படிப் பேரம் பேசப்போன புலிகளின் உண்மையான தத்துவம் என்ன?

   
 8. nimalan

  மார்ச்1, 2010 at 4:49 பிப

  i realy appreciate you.well done

   
 9. malaravan

  திசெம்பர்1, 2011 at 2:28 பிப

  நீங்கள் எவ்வித குழப்பங்களும் செய்யாமல் இருக்கும்படி வேண்டிக் கொள்கின்றோம் .அனைத்து ஊடகங்களுக்கும் எமது பணிவான வேண்டுகோள் , தயவுசெய்து அனைத்து விமர்சன கட்டுரைகளையும் , அறிக்கைகளையும் பிரசுரிப்பதை நிறுத்தி மாவீரர்களின் வரலாறு ,கவிதைகள் , ஆக்கங்கள் பல்வேறு உங்கள் இணையத்தளத்தில் பிரசுரிக்கவும்

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: