RSS

Benefit of the Doubt

19 மே

தாம் வாழும் நாட்டின் அரசாங்கங்களை ஏமாற்றியும் பெறும் Benefit களையே புலிகள் மக்களிடமிருந்து அறவிடும் போது, Benefit of the Doubt கூட புலிகளைத் தானே சேர வேண்டும் ? அது தானே புலி நீதிக்குப் பொருந்தும்?

பத்மநாதா பயப்படாதே நீ தான் அடுத்த தலைவர்.

பொய்யும்,புரட்டும் மட்டுமெ தம் ஆயுதமாகக் கொண்டு ஒரு கண்மூடி சமூகத்தை இரண்டு தசாப்தங்களாவது ஏமாற்றிக்கொண்டிருந்த புலிகளின் தலைமைப் பதவியில் பிரபாகரனும் “தலை” யாக பத்மநாதனும் இருந்தார்களா என்று யோசிக்கும் அளவுக்குசீறிப்பாய்கறது பத்மநாதனின் அறிவு.

பரப்புரை ஒன்றையே தம் பலமான ஆயுதமாக வைத்துக்கொண்டிருந்த புலிகளின் அரசியல் தந்திரம், அதை நம்பும் மக்களை மட்டும்தான் சென்றடைந்திருந்தாலும் கூட, அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை.

பிரபாகரன், மக்களுக்காக அறிவிக்கப்பட்ட யுத்த சூனிய வலயத்துக்குள் தன் படை சகிதம் தஞ்சம் அடைந்து, இறுதியில் அத்தனையும் துடைத்தெறியப்பட்ட வேளையில் தப்பிப்போகும் போது கொல்லப்பட்டதும், அவர் பயணம் செய்ய முனைந்த ஆம்புலன்ஸ் வண்டி முற்று முழுதாக அழிக்கப்பட்டதும், அதிலிருந்த அத்தனை உடல்களும் கருகிச் சிதிறியதும் என்று பல வகை Doubt கள் பல்வேறு கோணங்களில் இருந்து வந்து கொண்டிருக்க, அதன் Benefit ஐ பயன்படுத்தி, சர்வதெசத்துக்கு மீண்டும் ஒரு முறை தாம் யார் என்பதை முன்னாள் புலிகள் நிரூபித்திருக்கிறார்கள்.

இலங்கை அரசுடன் முட்டிக்கொள்ளும் எந்த ஒரு அமைப்பையும்,நிறுவனங்களையும், அரசுகளையும் தங்கள் நண்பன் என்றே எப்போதும் நம்பிக்கொள்ளும் புலிகள் இங்கிலாந்தின் சானல் 4 நிறுவனத்தின் ஏக நண்பர்களாக மாறி விட்டார்கள்.

அவன் படத்தைக் காட்டும் வரை நாம் நம் படத்தை ஓட்டியே தீருவோம் என்று கங்கணம் கட்டியிருக்கும் பத்மநாதன் அன் கோ, “விடுதலைப் புலிகளின் தலைவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்” என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையினை வெளியிட்டு, மீண்டும் புலி ஆதரவாளர்களின் வயிற்றில் பாலை வார்த்து, நெஞ்சாங்கூட்டில் குடியிருக்க ஆரம்பித்துவிட்டார்.

புலித்தலைவர் உயிரோடு இருக்கிறார் எனும் படத்தை நெடுநாள் ஓட்ட முடியாமல் போனாலும், அதுவரை கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுருட்டுவதை சுருட்டிக்கொள்ளலாம் என்று நினைத்தாரோ என்னவோ “பாதுகாப்புக்” காரணங்களுக்காக அவர் இருக்கும் இடத்தையும் சொல்ல முடியாது என்று கூறிவிட்டார்.

This is a Serious Statement !

புலி ஆதரவாளர்களின் உணர்வுகள் எப்போதும் பந்தாடப்பட்டே வந்தன என்பதை மீண்டும் ஒரு தடவை இவர் நிரூபிக்கப்போகிறார்.

இவரது இந்த அறிக்கையின் பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம்.

  • இறுதியாகக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரபாகரனின் குரலில் தான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன், தமிழ் மக்களே விடுதலைப் புலிகள் அழிய மாட்டார்கள், உங்களுக்குத் தமிழீழத்தைப் பெற்றே தருவோம் எனும் தொரணையில் ஒரு ஒலிப்பதிவை அல்லது ஒரு ஒளிப்பதிவைக் கூட பெற்றிருக்கலாம்.
  • இறுதிக்கட்டம் வந்து, அப்படித்தான் என்னைப் பிடிக்க அவர்கள் வந்தாலும், என் உடலை அவர்கள் கைப்பற்ற முடியாத வாறு நான் மனித வெடிகுண்டாக மாறிவிடுவேன் என்று ஏதாவது பிரபாகரனே சொல்ல, அந்த Benefit of the Doubt இருக்கும் வரை மக்கள் உணர்வுகளை பந்தாடிக்கொண்டே இருப்பது என்று பத்மநாதன் அன் கோ திட்டமிட்டிருக்கலாம்.
  • அதுவும் இல்லாவிடின், இலங்கையில் தமிழீழம் காணப்போகிறோம் என்று புறப்பட்டு கடைசியில் இலங்கையின் 32 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை சீர் குலைப்பதே எங்கள் நோக்கம் என்று நடேசன் ஐயா விட்ட அறிக்கையும் நாசமாகிப் போனதனால், தற்போது எஞ்சியிருக்கும் தமிழ் மக்களை நிரந்தர அடிமைத்தனத்துக்குள் தள்ளி, அதன் மூலம் சர்வேதசத்தில் தம் இருப்பை நியாயப்படுத்த முயலலாம்.
  • அதாவது, தலைவர் உயிரோடு இருக்கிறார் என்ற Benefit of the Doubt இருக்கும் வரை, அவர் கொல்லப்பட்டார் என்பது உண்மையில்லை என்றால், ஒன்றில் அவர் வெளிநாட்டுக்குத் தப்பிப் போயிருக்க வேண்டும், அல்லது மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்திருக்க வேண்டும்? எனவே, அந்த ஊகத்தை இலங்கை இராணுவத்திடம் கசிய விட்டு, முகாம்களில் இருக்கும் மக்களை அவர்களைக் கொண்டே துன்புறுத்தி, அதன் மூலம் சர்வதேச அரங்கில் பிரச்சாரங்களை முடுக்கிவிடும் நோக்கமாக இருக்கலாம்.
  • இப்படியான பிரச்சாரங்கள் மூலமாக, ஆகக்குறைந்தது இலங்கை அரசாங்கத்தை ஒரு சர்வதேச போர்க்குற்றவாளிகளாகவாவது வெளிக்கொணர்ந்து தம் தலைவரின் ஆத்ம சாந்திக்கு காணிக்கையாக்கலாம் அல்லது அதை வைத்து மேலும் மேலும் இந்த வெளிநாடு வாழ் மக்கள் உணர்வுகளைப் பந்தாடி தம் வங்கிக் கணக்குகளையாவது நிரப்பிக்கொள்ளலாம்.

காலா காலம் வசூல் மன்னர்களாகத் திகழ்ந்தாலும் இறுதியில், ஒருவருக்கும் பயன்படாமல்,சூசையின் மனைவியின் கையில் ஒரு பண சூட்கேசும், சார்ளஸ் அந்தனியின் கையில் பெரும் பணக்கட்டும் நாசமாகிப்போனது.

உழைப்பாளிகள் பணம் எல்லாம் விதம் விதமான இரும்புத்துண்டங்களாக இலங்கை இராணுவ கண்காட்சிப் பொருளாகிப் போனது, எனவே எதையாவது செய்து இன்னொரு கை பார்ப்போம் என்று பத்மநாதன் அன் கோ கிளம்பியும் இருக்கலாம்.

எது எப்படியோ, இவர்களின் இந்த ஆட்டமெல்லாம் Benefit of the Doubt இருக்கும் வரைதான்.

அது தீர்க்கப்படும் அந்த வேளை .. மிக இறுதியாக உங்களை நம்பி, மிக இறுதியாக ஆனால் உணர்ச்சிபூர்வமாக தன் தலைவனின் இழப்புக்காகக் கண்ணீர் சிந்திய அந்தக் கடைசி மனிதனின் நெஞ்சையும் பிளந்து அதன் இரத்தச்சூட்டில் நீங்கள் குளிர் காயும் உண்மை வெளி வரும்.

அந்த நாள், நீங்கள் அடியோடு காணாமல் போக வேண்டும் !

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

One response to “Benefit of the Doubt

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: