RSS

ஒக்கம இவராய்..!

19 மே

இதைக் கேட்கும் வரை “தலை” பத்மநாதன் அன் கோ அடங்கவே இல்லை.

இதோ உலகமே கேட்டும்,பார்த்தும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் ” Everything is Over ” என்றும், சிங்களத்தில் “ஒக்கம இவராய்” என்றும், தமிழில் “எல்லாம் முடிந்தது” என்றும் இலங்கை ஊடகங்கள் சொல்லிவிட்டன.

இனி என்ன வேண்டும் ?

இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கான போருக்குத் தீட்டிய திட்டங்களை விட, புலி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதில் மிகக் கவனமாகத் திட்டம் தீட்டி வந்தார்கள் என்பதை எமது முன்னையான பதிவான “போரா.. அது எங்கெ நடந்தது?” வில் ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தோம்.

அதன்படி இப்போது இலங்கை இராணுவத்தின் இறுதித் தாக்குதல் அபாரமாக நடத்தப்பட்டுவிட்டது.

இறுதி நிமிடம் வரைத் தம் கொடூர முகங்களை புலிக்கொடியால் மறைத்துக்கொண்டிருந்த சில கயவர்கள், அப்பாவி மக்களின் உணர்ச்சிகளைப் பந்தாடுகிறார்கள் என்பதையும் “Benefit of the Doubt” எனும் பதிவில் மிகத் தெளிவாகக் கூறியிருந்தோம்.

உணர்ச்சியூட்டலில் எப்போதும் மிதந்து கொண்டு எதார்த்தத்துக்குப் புறம்பான கனவில், நம்பக் கூடாத ஒரு சித்தார்ந்தத்தை நம்பிக் கெட்டுப்போன அந்த அப்பாவிகளைப் பார்த்துக் கவலைப்படவும், சில விடயங்களின் உண்மை,பொய்களை அலசி அவர்கள் முன் வைப்பதையும் தவிர வேறு எதையும் நம்மால் செய்ய முடியாது.

“சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது” என்பார்கள், இதுவரை அவர்கள் கண்ட சூடு அந்த “உணர்வு மிகுதியால்” மறைக்கப்பட்டிருந்தாலும், இறுதியாக பத்மநாதன் வைத்த “சூடு” சுட்டே ஆக வேண்டும்.

அதுவும் சுட வில்லையென்றால் “நல்ல மாட்டுக்குத்தான் ஒரு சூடு” என்று இதை இப்படியே விட்டுவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்த நிமிடம் வரை தம் தலைவரின் மரணத்தைக் கூட மறைத்து வைத்திருக்கும் புலியின் பிரச்சார சக்திகள், இன்றும் பிரபாகரனின் உடல் வெளியுலகுக்குக் காட்டப்படாமல் விட்டிருந்தால் நாளைக்குள் ஒரு பெரிய நிதித் திரட்டல் செய்திருப்பார்கள்.

பணம்,பணம் என்று மக்கள் உணர்ச்சிகளோடு விளையடி பணத்தைப் பிரட்டி, இரும்புகளை வாங்கிக் குவித்தார்களே தவிர, அங்கே இருக்கும் மனங்களில் உண்மையான தைரியத்தை வளர்க்கத் தவறிவிட்டார்கள் என்கிற வாதம் ஒரு புறம் இருக்க, 30 வருடம் நீடித்ததாக நாம் அறியும் இந்தப் போராட்டம், ஒரு நிலையான கொள்கையுள்ள அரசாங்கம் அமைந்தவுடன் 3 வருடங்களுக்குள் முடிந்து விட்ட கதையானது நமக்கு மீண்டும் ஒரு விடயத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது.

 அதுதான், தெற்கின் அரசியல் வியாபாரத்தைப் பயன்படுத்தித் தம் இருப்பை புலிகள் தக்க வைத்துக்கொண்டனர், தம் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்காக எப்போதுமே தம் ஆதரவாளர்களின் அப்பாவித்தனத்தை, உணர்வுகளை உபயோகப்படுத்திக்கொண்டனர் என்பதாகும்.

இந்தியாவுக்கு தலைவர் நேசக்கரம் நீட்டுவாராம், அதை இந்தியா பற்றிப்பிடித்துக்கொள்ளுமா? இல்லையா? என்று இந்தியாவுக்கும் மிரட்டல் விடும் அளவுக்கு அவர்களின் மனோ நிலையை வைத்திருந்த புண்ணியம் எல்லாம் புலிகளின் பிரச்சாரத் “தலைகளையே” சாரும்.

போராட்ட அற வழிகளைத் தாண்டி, சமூகத்தின் சந்துபொந்தெல்லாம் தம்மை நிலைப்படுத்திக்கொண்டு “கூச்சல்”, “கூப்பாடுகள்” மூலம் “அனுதாபத்தை” உருவாக்கி, அதிலிருந்து “உலக அரங்கில்” தம்மை நியாயப்படுத்தி, ஒரு விடுதலைப் போராளிக்குழுவாக நிலை நிற்பதற்கு இவர்கள் கொடுத்த விலை ஏராளம், அதில் பறிபோன மனித உயிர்கள் பல ஆயிரம்.

மனிதநேயத்தின் பால் அக்கறை கொண்டுள்ளவர்களை சீண்டி, அவர்கள் அனுதாபத்தையும் பெறும் வகையில் புலிகள் பல தந்திரங்களைக் கையாண்டார்கள்.

அதில் மிகச்சிறப்பான தந்திரமாக அவர்களின் ஊடகவியலாளர்கள் எனும் போர்வை காணப்பட்டது. அதன் மூலம் இவர்கள் மக்களுக்கு ஓசியில் கொடுத்துக்கொண்டிருக்கு துன்பங்கள் அவர்களுக்கே உரித்தான கலை.

பத்மநாதன் இன்று இன்னுமொரு வேடிக்கையான அறிக்கையை விட்டெறிந்திருந்தார், அதாவது நடேசன்,புலித்தேவன் போன்ற அப்பாவிகள், ஆயுதம் ஏந்தாத அப்பாவிகள் அதுவும் வெள்ளைக்கொடியை ஏந்திச்சென்ற போது சுடப்பட்டார்கள் என்று.

அவர்களுக்கு புலியாடை அணிவித்து, இடுப்பில் துப்பாக்கியுடன் இதுவரை ஒரு போட்டோவும் வெளியிடாமலாவது இதைக் கதைத்திருக்கலாம், இன்றுதான் உங்கள் அறிக்கைகளைப் பார்ப்பவனாவது நம்பித் தொலைய.

சில்லறைத்தனமான தங்கள் திட்டங்கள் யாவும் அவர்களின் வங்கிக்கணக்குகளை நிரப்புவதற்காக மாத்திரமே எப்போதும் துணையிருந்திருக்கின்றன.

இறுதித்தருவாயிலும் தம் உண்மைத் தொண்டர்களின் உணர்வுகளைக்கூட உதாசீனப்படுத்தியதன் மூலம் மீண்டும் மீண்டும் அவர்கள் இதையே செய்திருக்கின்றனர்.

இனி என்ன? காட்டப்பட்ட உடலாம் தலைவருடையதா இல்லையா எனும் ஒரு ஆராய்ச்சி இன்றோ நாளையோ ஆரம்பமாகும், அதில் சில காலம் கழிய முன்பே வெளியிலிருந்தே ஈழம் பெறுவோம் என்று ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, தங்களை விட்டு தப்பியோடிய மக்களின் வாழ்க்கையிலும் விளையாடத் திட்டங்கள் தீட்டப்படும்.

அவர்கள் நிம்மதியையும் சேர்ந்தே குலைத்து, இஸ்ரேல் போல் ஒரு ஈழம் என்று முழங்கி எப்படியாவது மக்கள் நிம்மதியை இவர்கள் கெடுக்கப்போவது மட்டும் உறுதி.

தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற கட்டாய நிலைக்கு தற்போது விரும்பியே வந்திருக்கும் இலங்கை அரசின் செயற்பாடுகள் உலக அரங்கில் நன்கு கவனிக்கப்பட்டு வரும் இவ்வேளையில், அங்குள்ள அதாவது முழு இலங்கையிலும் வாழும் அனைத்து சிறுபான்மை மக்களின் நலனையும் கருத்திற்கொண்டாவது புலி “வால்கள்” அடக்கி வாசித்தால் சில நல்லது நடக்க ஆரம்பிக்கும்.

அதையும் குழப்பி, போராட்டம் இன்னும் முடியவில்லை என்று இலங்கை அரசையும் சொல்ல வைக்கப் புலிகள் முயன்றால், அது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் குழிதோண்டிப் புதைக்க எத்தனிக்கும் புலிகளின் செயலாகவே கணிக்கப்பட வேண்டும்.

 • உலகிலேயே மிகப் பயங்கரமான பயங்கரவாத அமைப்பு
 • ஆள்பலம், ஆயுத பலத்தில் யாரும் நெருங்க முடியாத அளவு வளங்கள் கொண்டிருந்த அமைப்பு
 • கட்டமைப்பில் மிகத் தீவிரமான அமைப்பு
 • தம் தலைவரே கட்டுப்பாடுகளை மீறிய போதும் போராளிகளை என்றும் கட்டுப்படுத்தியே வந்த அமைப்பு
 • தலைமையின் இருப்பிடத்தைப் பாதுகாக்க தம் இயக்கத்திலேயே யாரை வேண்டுமானாலும் ஊனப்படுத்திய அமைப்பு
 • இதை எல்லாவற்றையும் விட “உணர்ச்சியூட்டியே” ஒரு போராட்டத்தை முப்பது வருடங்கள் முன்னெடுத்து வந்த அமைப்பு

இன்று இருந்த இடம் தெரியாமல் அழிந்து போன வரலாற்றின் இறுதி அத்தியாயங்கள் எழுதப்பட்டு விட்ட நாளில், ஒரு எதோச்சிகார சிந்தனைக்குக் கிடைத்த சாவு மணியாக இதைப் பார்ப்பதற்கு சில மனிதர்கள் தயங்கலாம்.

ஆனால், அதுதான் மறுக்க முடியாத உண்மை.

பிரபாகரனின் துப்பாக்கி பிரிவினைக்காக மட்டுமன்றி, பிரமிளாக்களுக்காகவும் வெடித்த வரலாற்றை பல மக்கள் அறிந்து கொள்வது திட்டமிட்டு தடுக்கப்பட்டே வந்தது.

ஓர்மைப்படு்த்தி, தன்னைச்சுற்றியே ஒரு போராட்டக் கனவை வாழ வைத்த பிரபாகரன், ஒரு நாளில் அழிக்கப்பட்டால் இந்தப் போராட்டம் தொடர்வதற்கு ஒரு தலைமையை பிரபாகரன் ஒரு போதும் உருவாக்க வில்லை.

பிடல் காஸ்ட்ரோ போன்ற புரட்சித்தலைவர்கள் களத்தில் நின்று வெற்றிக்கனியை எட்டிப் பறித்தார்கள், பிரபாகரன் தன் சக போராளிகளிடமிருந்து கூட வெகு தூரம் எட்டாத் தொலைவில் தான் வாழ்ந்து வந்தார்.

தனக்காக முன்னரங்குகளில் நின்று அடுத்தவன் பிள்ளைகள் எல்லாம் செத்து மடிவதைத் “தியாகம்” என்று கூறிக்கொண்ட பிரபாகரனின் மனோ தத்துவம், தன் கழுத்தில் தொங்கிய சயனைட் வில்லையில் சர்க்கரையைத்தான் வைத்திருந்திருக்கும்.

இறுதி நிமிடத்தி்ல் கூட உயிர் வாழும் ஆசை விட்டுச்செல்லாத ஒரு மனிதனாய், அகலக் கண் விரித்து, அடங்காத ஆசைகளோடு தன் சொகுசு வாழ்க்கையையும் இழந்து, புற் தரையில் தன்னந்தனியாக கைவிடப்பட்ட இவர் நிலை, இவரே வளர்த்தெடுத்த பாசிசத்தின் இறுதி நிலையாகும்.

விடுதலைப்புலிகளின் மிகச்சிறந்த ஒரு படைப்பாக நாம் கருதுவது என்றால், அது அவர்களது பிரச்சாரங்களின் போது அவர்கள் கையாளும் வார்த்தைப் பிரயோகங்களாகும்.

அதன் பலன் தான் அவர்களை வாழ வைத்தது.

உணர்வுக்காகவும், உரிமைக்காகவும் வெகுண்டெழுந்த மக்களை ஒரு காலத்தில் சினிமா பார்த்து விசிலடிக்கும் கூட்டம் போன்று மப்பில் உளறும் தத்துவக்காரர்களுக்கு விசிலடிக்கை வைத்தார்கள் என்றால் இதை விட அதற்கு வேறு என்ன சான்று வேண்டும்.

உரிமைக்காகப் போராடும் மக்களுக்குக் களியாட்டக் குஷிப்படுத்தல்கள் வழங்கி அவர்களை வெறும் கூத்தாடிகளாக மாற்றிய இவர்களது திறமைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

இறுதி வரை “தமிழர்கள் அழிக்கப்படுகிறார்கள்” என்று இவர்கள் சொன்னது “புலிகள் அழிக்கப்படுகிறார்கள்” என்பதைத்தான் என்று உலகம் நன்கு புரிந்துகொண்டதனால் அமைதியாக இருந்து விட்டது.

“தமிழர்”,”தமிழர்” என்று தமக்குத்தாமே சொல்லிக்கொண்டார்களே தவிர, இலங்கையில் வாழும் தமிழர்களை யுத்த மூலமும் இன்ன பிற காரணிகள் மூலம் நியாயங்கற்பித்தும் மிகக்கொடுமையாக, அதிக அளவில் கொன்றொழித்தது இவர்கள் தான் என்கிற உண்மையை சிரத்தையெடுத்து மறைக்கப்பார்த்தார்கள்.

ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தாம் தோல்வியுறும் போதும் இனங்களுக்கிடையில் பிளவுகளை உருவாக்குவதில் காட்டிய நாட்டத்தினை ஒருக்காலமும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்குவதற்காக இவர்கள் காட்டியதே இல்லை.

இப்போது, அத்தனையும் முடிந்த கதை, சிங்களத்தில் சொன்னால் ஒக்கம இவராய்..! 

ஆனால், இனியொரு புது அத்தியாயம் தமிழர் வாழ்வில் எழுதப்படும் காலம் உதித்திருக்கிறது.

கடந்த 30 வருடங்களில் முதல் தடவையாக புலி இல்லாத, பிரபாகரன் இல்லாத ஒரு சமூகம் உருவாகப்போகிறது.

பல சமூகங்கள் தம் சந்தேகக் கண்களை கழற்றி வீசிவிட்டு, தம் ஒற்றுமையான வாழ்க்கையை ஆரம்பிக்கும் தேவை உருவாகியிருக்கிறது.

நச்சுக் காற்றை மட்டுமே சுவாசித்துப் பழகிவிட்ட அவர்கள் நல்ல காற்றை சுவாசிக்கும் காலம் விரைவில் உருவாக வேண்டிய காலக் கட்டாயம் இருக்கிறது.

இனிவரும் தலைமுறையாவது புலிகளாய்,மிருகங்களாய் இல்லாமல் மனிதர்களாய் வாழ ஆரம்பிக்கும் தேவை இருக்கிறது.

பத்மநாதா, அவர்களை வாழ விடு.

இப்போதுதான் ஒரு பிரபாகரனின் வரலாறு முடிந்திருக்கிறது, அதற்குள் நீ ஒரு ஆட்டத்தை ஆரம்பித்து இந்த அப்பாவி மக்களின் சாதாரண வாழ்க்கையைக் கெடுத்துவிடாதே.

அப்படித்தான் உனக்கு ஒரு ஈழம் வாங்கியே ஆக வேண்டும் என்றால், பேசாமல் முழுப் புலி ஆதரவாளர்களையும் அழைத்து அதற்காகவென்றே நிதி சேகரித்து, ஏதாவது ஒரு நாட்டிற்குச் சொந்தமான ஒரு தீவை வாங்கி, அந்தத் தீவில் உங்களோடு வர விரும்பும் மக்களை அழைத்துச்சென்று அதை முன்னேற்றி, உங்கள் வரலாற்றை உலகின் முதுகில் தங்க எழுத்துக்களால் எழுதி விடுங்கள்.

இப்போதும் நீங்கள் “தமிழர்கள்” எனும் பெயரில் அங்கே சும்மாயிருக்கும் மக்களுக்கு சுமைகளைக் கொடுக்க வேண்டாம், “தமிழீழத் தமிழர்கள்” என்று புது அடையாளத்தை உங்களை விரும்பி, உங்களோடு இணைந்து வாழ விரும்பும் மக்களுக்காக மட்டும் உருவாக்கி அதில் குளிர் காய்ந்து கொள்ளுங்கள்.

அங்கே இருப்பவர்கள் நலன் பற்றி உங்களுக்கு அக்கறை இருந்திருந்தால் ஆகக்குறைந்தது தொப்பிகல பறிபோன போதாவது நீங்கள் “வணங்கா மண்” அனுப்பியிருக்க வேண்டும், வன்னியில் தலைவரின் காலடியில் குண்டு விழ ஆரம்பித்த பின் இதையெல்லாம் செய்ய ஆரம்பித்திருக்கக்கூடாது.

“எங்கம்மா அம்மா உங்கம்மா சும்மா” என்பது போல புது மாத்தளன் வரை மக்களை இழு இழு என இழுத்துக்கொண்டு போய், பலி கொடுத்து, அதன் பின் தலைவருக்கு ஆப்பு நெருங்கியதும், ஆயுதங்களை மெளனிக்கிறோம், அடுப்படியை அகற்றி விடுகிறோம் என்று அறிக்கை விட்ட உங்கள் வீரம் எல்லாம் இனிமேலும் மக்கள் மீது திணிக்கப்படக்கூடாது.

உங்கள் வீராதி வீரப் போராட்டங்களை விரும்பும் மக்களோடு சேர்ந்து போராடுங்கள், இன்றளவும் அங்கே உங்களால் இழுத்துச் செல்லப்பட்டு, பின் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட எந்தவொரு “தமிழனுக்காகவும்” நீங்கள் ஒரு சிறு குரல் தானும் கொடுக்கவில்லை.

250 புலிகள் சிக்குண்ட இறுதிக் கட்டத்தை 25000 “தமிழ்” மக்கள் சிக்குண்டு, அதில் நீங்கள் மனந்திருந்தி ஆயுதங்களை அதுவும் “மெளனிக்க” வைக்கப்போவதாக அறிக்கை விட்டீர்களே தவிர, உண்மையில் “தமிழருக்காக” நீங்கள் குரல் கொடுக்கவில்லை.

உங்கள் “புலிகள்” தானே உங்களுக்குத் தெரிந்த “தமிழர்கள்”, இப்போது அவர்கள் அங்கே கூடாரங்களில் இருந்தால், அழைத்தெடுத்து உங்கள் தேவைகளை அப்பாவி மக்களுக்கு அப்பால், செயற்படுத்துங்கள்.

மீண்டும் மீண்டும் அந்த மக்களின் அடிப்படை “வாழும் உரிமையை” பறிக்காதீர்கள்.

வேண்டுமென்றால், ஒரு “தமிழ் ஈழத்தை” உருவாக்கி விட்டு,சர்வதேச மத்தியஸ்தத்தில் இலங்கை அரசுடன் பேசி இன்னொரு வணங்கும் மண்ணை அனுப்பி, “யார் உங்களோடு வர விரும்பிகிறார்களோ” அவர்களை இலவசமாக அழைத்துச் சென்று, மேம்பட்ட ஒரு சுதந்திரமான, அனைத்து வசதிகளையையும் உடைய வாழ்க்கையை உருவாக்கிக்கொடுங்கள்.

அதை விட்டு, இப்போது அவர்களிடம் இருக்கும் கோவணங்களையும் உருவி விடாதீர்கள், கோடிப் புண்ணியம் கிடைக்கும்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

3 responses to “ஒக்கம இவராய்..!

 1. Avanyan

  மே20, 2009 at 1:21 முப

  Hello

  your write up shows that how wicked you are and you really wants to damage the image of our Leader. I know you are a singhaleese and if you want you lick their ….. Our tamil people never will go behind people like you. We know the history of Srilanks. Prabhakaran is not a traitor like your Karuna and devananda and to lick singala…

  Unlike them our leade and their group had abnegated everything for the cause of tamil elam. we know if there is no LTTE what would have happened to tamil people. U dont try to villify our Leader he’s a legend.

   
 2. viswan

  மே20, 2009 at 7:40 முப

  புலிகளுக்காக மட்டும் கவலைப்படுபவர்கள் ஏராளமாக இருக்கையில் இலங்கைத் தமிழருக்காகக் கவலைப்பட்டு தைரியமாக உள்ளதைச் சொல்லிய உமக்கு நன்றி

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: