RSS

இறுதி அத்தியாயம்..!

18 மே

கையில் கிரனைட் ஒன்றுடன் மட்டும் தன் நம்பிக்கையைப் பெரும் ஆயுதமாகக் கொண்டு மிதி வண்டிகளில் சென்று வீர உரம் சேர்க்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டம், இறுதியில் உங்கள் “ஏக பிரதிநிதித்துவத்தில்” சங்கமமாகி, உலகில் எந்த வொரு விடுதலை அமைப்புமே கண்டிராத அத்தனை வளங்களும் இருந்தும் தோற்றுப்போயிருப்பதன் உண்மையை அலசாத வரை உங்கள் இறுதி அத்தியாயம், நீங்கள் விட்டுச் செல்லும் உங்கள் ஆதரவாளர்களுக்கு எப்போதுமே ஒரு புரியாத புதிராகவே இருக்கப்போகிறது.

” சர்வதேசமே அனைத்திற்கும் பொறுப்பு ” – பிரபாகரனின் இறுதி அறிக்கையாகக் கொள்ளக்கூடிய பத்மநாதன் வழி வந்த கூற்று.

ஆனால் சர்வதேசம் ஏன் உங்கள் கோரிக்கைகளைக் கேட்க வேண்டும்? நீங்கள் யார் என்பதற்காகக் கேட்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவை முழுதாக மறந்து விட்டீர்கள்.

அதன் முடிவே உங்கள் இறுதி அத்தியாயமாகிறது.

“போரை நிறுத்துவது தொடர்பாகவும் உடனடிப் போர் நிறுத்தம் தொடர்பாகவுமே நாம் நேற்று தொடக்கம் பேசிக்கொண்டிருக்கின்றோம். நாம் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்களில் கலந்துகொள்வதற்கு தயாராக இருக்கின்றோம்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது சரணடைவதோ ஆயுதங்களைக் கையளிப்பதோ அல்ல. அப்பகுதியில் படுகாயமடைந்திருக்கும் 25 ஆயிரம் மக்களையும் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை எனவும் லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சிச் சேவையான ‘சனல் – 4’ தொலைக்காட்சிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அளித்த பிரத்தியேகப் பேட்டியின்போது பத்தமநாதன் தெரிவித்தார். நன்றி : புதினம்.

உலகம் பல காலமாக உங்களை நோக்கிக் கேட்ட விடயத்தை நீங்கள் நேற்று அதுவும் 18ம் திகதி மே மாதம் 2009ம் ஆண்டு முதல் தான் நீங்கள் பேச ஆரம்பித்திருக்கிறீர்கள்.

அதுவும் இலங்கை இராணுவம் சொல்வதன் படி நானூறு சதுர மீற்றர் அளவுக்குள் வந்த பின்னர் தான் பேச ஆரம்பித்திருக்கிறீர்கள், துரதிஷ்டம் உங்கள் பேச்சை யாருமே கேட்காத நிலையை உருவாக்கிவிட்டுப் பேச வந்தீர்கள்.

இலங்கையில் உரிமைப்போராட்டம் இருந்தே ஆக வேண்டும் என்கிற ஒரு நிலையை இனி வரும் அரசியல் சூழ்நிலையும் உருவாக்குமாக இருந்தால், இவையெல்லாம் வரலாற்றில் என்றுமே மறக்கப்பட முடியாத பாடங்கள்.

இலங்கை இராணுவம் இன்று விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்துவிட்டது என்கின்ற உண்மையை எவாராலும் மறுக்க முடியாது.

ஆனால் கசப்பான இந்த முடிவுரையிலும் உங்கள் கறை பிடித்த உள்ளங்கள் தவறான வழிகாட்டலை மட்டுமே விட்டுச்செல்வதுதான் வேதனைக்குரிய விடயம்.

நீங்கள் பிடித்து வைத்திருந்த தமிழீழ முயலுக்கு மூன்று கால் என்பதை மீண்டும் பறை சாற்றி நீங்கள் கேள்வி கேட்கத் துணிந்த அதே சர்வதேசத்தின் வாய்களை உங்கள் கைகளாலேயே அடைத்து விட்டே உங்கள் இறுதி அத்தியாயத்தை எழுதியிருக்கிறீர்கள்.

இறுதி நேரத்திலும் சூசை விடவில்லை, 25000 மக்கள் தெருவோரம் பிணங்கள் என்றெல்லாம் உண்மை கலந்த பல அறைகூவல்களை விடுத்தாலும் சர்வதேசம் இதை நம்பத் தயாராக இருக்கவில்லை, இறுதி வரை உங்களை நம்பப் போவதும் இல்லையென உறுதியாகவே இருந்து விட்டது.

அதற்கான காரணங்களை நீங்கள் கடந்த காலங்களில் தேடிப்பார்க்க முயலவில்லை என்பதால் இறுதிக்காலங்களில் அறிய முடியாமலே அப்பாவியாகிவிட்டீர்கள்.

உங்கள் வீழ்ச்சி என்பது தமிழினத்தால் பெருமையாக நினைக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக இல்லாவிடினும் கூட நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடிய ஒரு சாராரை உருவாக்கிய பெருமை உங்களை மட்டுமே சாரும், அதற்கான முழுக்காரணமும் உங்கள் “கற்கால வித்தைகளில்” வைத்திருந்த நம்பிக்கையும், நவீன உலகை முகங்கொடுக்க முடியாத அரசியல் வங்குரோத்து நிலையுமாகும்.

“உணர்ச்சியூட்டல்” எனும் ஆயுதத்தை எப்படியெல்லாம் பாவிக்கலாம் என்று நீங்கள் கற்றுக்கொடுத்த பாடத்தைக் கடைப்பிடிக்கப் போய் கடைசியாக வாங்கிக்கொண்டது ஜெயலலிதாவாகும். இதுவரை அவர் மேல் மக்கள் வைத்திருந்த அத்தனை அபிப்பிராயங்களையும் சில்லறைத்தனமாக மாற்றியமைத்த பெருமை அவரையே சாரும்.

அவர் வேண்டுமானால் அதற்கு வை.கோவையும், ராமதாசையும் காரணங்காட்டலாம், ஆனால் அவர் தேடிக்கொண்டது அவரே எழுதிய விஞ்ஞாபனத்தின் விளைவையாகும்.

அண்டைய மானிலம், தொப்புள் கொடி உறவுகள் கூட தம்மை கை விட்டுவிட்டார்கள் என்று தமிழ் மக்கள் நம்ப வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள், ஆனால் வரலாறு மீள எழுதப்படப் போகின்றது.

தமிழக மக்கள் தம்மைக் கைவிடவில்லை என்று தப்பி வந்த மக்கள் இனிமேல் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு தமிழக அரசியல் இலங்கையில், அதுவும் இடம் பெயர்ந்திருக்கும் மக்கள் மத்தியில் நன்கு பாவிக்கப்படும்.

ஒருவேளை, இது “நன்றிக்கடனுக்கான” கூட்டணி உடன்பாடாகவும் இருக்கும்.

செல்லாக் காசாகிப்போன உங்கள் கோஷங்கள், இன்றளவும் ஒரு தனி நபர் பாதுகாப்பை முன் நிறுத்தி நகர்த்தப்பட்டதனால் உலகமே ஒன்று சேர்ந்து உங்களுக்கு “செக்” வைத்திருக்கிறது.

இறுதி வரைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை, ஆர்ப்பாட்டங்களுக்கு உந்திச்சென்ற உங்கள் சித்தார்ந்தம், ஆகக்குறைந்தது அவர்களது கூச்சல்களில் ஒரு சிலவாவது முழுத் தமிழினத்திற்கும் ஏற்றவாறு மனித நேயத்துக்கான குரலாக ஒலிக்காமல் போன குறையும் உங்கள் சார்பில் அவற்றை ஒழுங்கு செய்தவர்களின் சித்தார்ந்தத் தெளிவை காட்டியது.

நீங்கள் “தமிழ் மக்கள்” சாகிறார்கள், “தமிழ் மக்கள்” சாகிறார்கள் என்று போட்ட ஒவ்வொரு கூச்சலும் “உங்கள்” சாவுக்காக நீங்கள் போட்ட ஒப்பாரியாகப் பார்க்கப்பட்டனவே தவிர, இறுதி வரை அதாவது சூசையின் 25000 கணக்கு வரை கூட அது “தமிழ் மக்களின்” குரலாக மதிக்கப்படவே இல்லை என்கிற உண்மையை இன்று இல்லாவிடினும் என்றாவது ஒரு நாள் உங்கள் ஆதரவாளர்களும் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

ஒவ்வொரு தடவையும் சர்வதேசம் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சிக்குப் பின்னாலும், “உங்கள்” நலன், “உங்கள்” இருப்புக்காகவே நீங்கள் நிபந்தனைகளை வைக்க ஆரம்பித்தீர்கள் என்பது பொய்யாக இருந்திருந்தால், இன்று இந்த சர்வதேசம் வாய்கட்டி இருந்திருக்கப்போவதில்லை.

மாறாக, முழு உலகமும் உங்கள் வித்தையை வானிலிருந்து ஆளில்லா விமானம் மூலம் வேவு பார்த்துக்கொண்டே இருந்தது.

இன்று உங்கள் இறுதி அத்தியாயத்தின் இறுதி வரிகளின் படி, ஆகக்குறைந்த உங்கள் இலக்காக ” இலங்கை ஒரு மனிதப் பேரவலத்தைக் கொண்டு இந்த யுத்தத்தை முடித்தது” , ” இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்கள் புரிந்துள்ளது”  என்கின்ற சாதனையோடு முடிவுறுகிறது.

இந்த அறிக்கைகளை ஒரே ஒரு மிலிபாண்டும் , குச்னரும் ஆதரித்து ஒரே ஒரு மனித நேய அமைப்பு அறிக்கை விட்டும் உங்களை குஷிப்படுத்தியதைத் தவிர வேறு எதையும் உலக அரங்கில் சாதிக்க முடியாமல் போனதானது வரலாறு.

அது இனிமேலும் எதையும் சாதிக்கப்போவதில்லை என்பது “பயங்கரவாதத்திலிருந்து மீட்சி பெற்ற” ஒரு இலங்கைத் தீவின் பொருளாதாரக் கொள்ளையில் மேலை நாடுகள் காட்டிக்கொள்ளப் போகும் தீவிர கரிசணையில் முற்றுப் பெறும்.

ஆனால் துரதிஷ்டவசமாக அப்போது அதை உணர்ந்துகொள்வதற்கு நீங்கள் உயிரோடு இருக்கப்போவதில்லை, உங்கள் ஆதரவாளர்களும் தம் சுய சிந்தனையை முடுக்கிவிடும் வரை இதை உணரப்போவதில்லை.

முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட உங்கள் சொந்தப் போராளிகளின் உயிரிழப்பு, எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர் பறிப்பு, பல ஆயிரங்களில் மாற்று இயக்கத்தவர்களின் உயிர்கள் மீதான “களையெடுப்பு”, பேரூந்துகளில், சந்தைகளில், வர்த்தகக் கட்டிடங்களில் பறிபோன அப்பாவிகளின் உயிர் பறிப்பு, இலங்கை இராணுவத்தின் விமானக் குண்டுகளில், துப்பாக்கி ரவைகளில் வேட்டையாடப்பட்ட தமிழனத்தின் தலைமுறைப் பறிப்பு என்று இறுதி வரைக்கும் “கற்காலத்தை” விட்டு வெளியே வராத உணர்விழந்த போராட்டத்தின் இறுதி அத்தியாயம் இதை விட எப்படி முடிந்துவிட முடியும்?

அன்று தன் நம்பிக்கையை ஆயுதமாக வைத்திருந்த போது பொல்லும், புல்லும் கூட போராடச் சென்றவர்களின் ஆயுதங்களாக இருந்தது.

ஆனால், உலகமே அதிர்ந்து போகும் நவீன ஆயுதங்கள், நீங்களே பறை சாற்றிக்கொண்டிருந்த ஆயிரமாயிரம் போராளிகள், கட்டாயப் பயிற்சி கொடுக்கப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவி மக்கள், குழந்தைகள், மாணவர்கள், வான்படை, கடற்படை,தரைப்படை,இன்டர்நெட் படை என்று எத்தனையோ படைகள் இருந்தும், உங்கள் போரட்டம் இப்படியான ஒரு முடிவை சந்தித்திருக்கிறது என்றால், அதற்கான ஒரே காரணம் ?

உங்கள் போராட்டத்தில் “உயிர்” இருக்கவில்லை என்பதுதான்.

இருந்த “உயிரை” பிரேமதாசாவின் கைகளில் நீங்கள் அடகு வைக்க ஆரம்பித்த நாளில், உங்கள் “தன் நலம்” மேலோங்கியது, பின்னரும் அது மேலோங்கிக் கொண்டே சென்றதே தவிர, மீண்டும் அந்த உணர்வும் உயிரும் உள்ள போராட்டத்திற்குள் மீளவே இல்லை என்பது வரலாறு பதிந்து கொள்ளப்போகும் உண்மை.

உங்கள் ஆத்மாக்கள் சாந்தி அடையட்டும் !

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

One response to “இறுதி அத்தியாயம்..!

  1. Nathan

    மே18, 2009 at 5:30 பிப

    The reason for this defeat is : Prabakaran started this tamil liberation fight with a murder. Murder of Alfred Thuraiappah who is a good person who wanted to moderate Jaffna. It is the “Pillayar Suli”. After that his ambition was to kill the educated tamils, because he wanted to establish a nation consiste of uneducated people who can stay under his legs. The sufferings of the victimised tamil, muslim and singala people made this defeat. Thank You

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: