RSS

அம்மான் நீங்கள் எங்கே?

16 மே

இந்த மக்களுக்காகத்தானே 22 வருடம் களத்தில் நின்றீர்கள்? அவர்களின் உரிமைப் போராட்டம் திசை மாறிச்செல்கிறது என்று தானே உங்களை அவர்கள் பழித்திருந்தும் வெளியேறி நின்றீர்கள்? இன்று உங்கள் நேரம் வந்தடைந்திருக்கிறது, உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும் காலத் தேவை வந்திருக்கிறது.

சில கண்களுக்கு கிழக்கின் சூரியோதயம் மட்டுமே புலப்படும், ஆனால் உங்கள் கண்கள் அதன் மறைவையும் பார்க்கும் சக்தியைப் பெற்றிருக்கின்றன.

அன்றொரு நாள் அவர்களை விட்டு விலகி நின்ற போது நீங்கள் எடுத்துரைத்த எதார்த்தமும் சரி, இன்று மிக அண்மையில் நீங்கள் தொலைக்காட்சிகளுக்களித்த பேட்டிகளிலும் சரி, ஒரு போராடும் குணம் உங்களிடம் இன்னும் இருப்பதாய்ப் படுகிறது.

ஆனால், அது வெறும் அறிக்கை அளவில் உறங்கிக்கொண்டிருந்தால் நீங்கள் விரும்பிய மக்களுக்கு என்றுமே விடிவு கிடைக்காது.

உங்கள் கண்களுக்கு பல பக்கங்களைப் பார்க்கும் சக்தியும்,உங்கள் காதுகளுக்குப் பல விடயங்களைக் கேட்கும் சக்தியும், உங்கள் கைகளுக்குப் பல விடயங்களை செய்யும் சக்தியும் இருக்கிறது, இதற்கு முதல் ஒரு தமிழர் உரிமைப் போராளிக்கு இத்தனை சக்திகள் ஒன்றிணங்கக் கிடைத்ததில்லை.

வடக்கில் நீங்கள் அரசியலுக்குள் போக வேண்டாம், கிழக்கிலும் நீங்கள் அரசியல் செய்ய வேண்டாம், ஆனால் வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி ஒவ்வொரு தமிழ் பேசும் குடிமகனுக்கும் என்னதான் போராட்டம் என்பதை உங்களைத் தவிர நன்கறிந்தவர் அரச இயந்திரத்தில் வேறு யாரும் இருக்க முடியாது.

இராணுவ வெற்றியென்பது எதைச் சாதிக்கும்? எதைச்சாதிக்காது என்பதை சூற்சுமங்களுடன் அறிந்த போராளி நீங்கள், இதன் அடுத்த கட்டம் எதுவாக இருக்க வேண்டும் என்பதை நன்கறிந்து விளக்கமளிக்கும் திறமையும் உங்களிடம் இருப்பதை உங்கள் கடந்த கால நேர்காணல்கள் காட்டியிருக்கிறது.

“பிரபாகரன் மக்களை வெளியேற விட்டிருக்க வேண்டும்” என்று ஆணித்தரமாக ஒலிக்கும் உங்கள் குரல் அம்மானின் இணையத்தில் முன் பக்கத்தில் ஒலிக்கிறது, இதையே இந்த உலகமும் இணைந்து கூறிக்கொண்டிருக்கிறது.

“இராணுவ வெற்றிகளின் பின்” அவை அரசியல் நிலைப்பாட்டை எவ்வாறு மாற்றியமைத்திருக்க வேண்டும், அதன் தொடர்பில் எவ்வாறு செயற்பட்டிருக்க வேண்டும் என்கிற அறிவும், செயற்படுத்தும் திறனும் உங்களிடம் இருப்பதாகவே பெரும்பாலானோர் நம்பியிருக்கின்றனர்.

தமிழ் அரசியல் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக காத்திருக்கும் வடக்கின் வசந்தம் தற்போதைய சூழ்நிலையில் அந்த மக்களின் தேவையாகாது.

தப்பிப் பிழைத்து வந்திருக்கும் இந்த மக்களுக்கு மூச்செடுக்க நல்ல காற்று வேண்டும், குடிப்பதற்கு தடங்கலில்லாமல் நீர் வேண்டும், உடுப்பதற்கு இன்னொரு “செட்” ஆடையாவது வேண்டும், வயிறாற உண்பதற்கு அவர்களுக்கு சுய மரியாதையுடன் ஒரு வழி வேண்டும், அவர்கள் வாழ்க்கையை வாழ அவர்களுக்கு வழி வேண்டும்.

ஒரு சிறையிலிருந்து தப்பி இன்னொரு சிறையில் அவர்கள் வாழக் கூடாது, “ஆம்” இதுவே உங்கள் சித்தார்ந்ததுமும் என்று நம்புகிறோம்.

இருந்தாலும் அவர்களுக்குத் தெரிந்து, அவர்களுக்காகப் போராடிய உங்கள் போன்ற ஒரு போராளியின் குரல் அவர்களுக்காக நிச்சயம் ஒலிக்க வேண்டும்! 

உங்கள் செயற்திட்டங்கள் பற்றி அளவளாவும் தேவை நமக்கில்லை, ஆனால் உங்கள் குரல் இந்த மக்களுக்காக ஒலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் !

தமிழர் சமுதாயத்தின் உரிமைக்காக வலுப்பெற்றிருக்கும் உங்கள் கைகள் என்ன செய்யப்போகின்றன என்று ஆவலுடன் பார்த்திருக்கிறோம்! 

-அறிவுடன்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

2 responses to “அம்மான் நீங்கள் எங்கே?

 1. ராமசாமி

  மே16, 2009 at 11:47 முப

  உங்கள் வலைப்பூப் போல, இதனையும்
  யுனிகோடு எழுத்துருவுக்குக் கொண்டு போங்களேன்.
  http://www.sooddram.com/

  நிறைய மக்களுக்குப் போய்ச் சேரும்.

   
 2. பாரதி.சு

  மே16, 2009 at 2:54 பிப

  வணக்கம் நண்பரே!!!
  நான் சந்தேகப்பட்டது சரி தான். சாயம் வெளுத்திடுச்சு.
  ஏனய்யா!! “அறிவென்றொன்று..” இருந்தால் இவனை எல்லாம்
  எவன் தலைமை தாங்க கூப்பிடுவான்…இவனே ஒரு சுத்த
  அரவேக்காடு.
  ஏற்கனவே “அரசியல்” தெரியாத நாயளால நாங்க பட்ட பாடு போதாதா???

  //”தமிழர் சமுதாயத்தின் உரிமைக்காக வலுப்பெற்றிருக்கும் உங்கள் கைகள் என்ன செய்யப்போகின்றன என்று ஆவலுடன் பார்த்திருக்கிறோம்! //

  மண்ணாங்கட்டி என்ன வலு இருக்கு….மகிந்தவுக்கு முதுகு சொறியுறத தவிர…

  SHAME ON YOU BROTHER.
  BYE for ever.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: