RSS

அங்கிருந்தே ஒரு குரல் ..

16 மே

உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் “மனிதம்” இருக்கிறது! அதை அவரவர் தேவைக்கேற்ப மூடிமறைத்துக்கொண்டிருப்பதனால் தான் சில நேரங்களில் உண்மையான அவலக் குரல்கள் வெளியில் கேட்பதில்லை.

இந்த வலைப்பூவில் எதை நாம் வலியுறுத்துகிறோமோ அதை அங்கிருந்தே ஒரு குரல், அத்தனை அல்லல் மத்தியிலும் சொல்லக் கேட்ட போது, காது குளிர்கிறது ! “ஆம்” மனிதம் அழிந்துவிடவில்லை என்று பெருமைப்பட வைக்கிறது.

அதை உங்கள் கண்களால் ஒளிப்படமாய்க் காணுங்கள் !

கீழே ஒரு வீடியோ இணைப்பைத் தரப்போகிறோம், அதில் ஒரு “உண்மைச் சங்கதியையும்” சொல்லப்போகிறோம், உங்கள் அறிவுடன் மோதிக்கொண்டு அதை ஏற்றுக்கொள்ள முடியுமா பாருங்கள்.

புலி எதிர்ப்பு எனும் ஒரு கோஷம், தனியாகப் புலிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ஒலிப்பதல்ல, புலிகளின் அடாவடித்தனங்கள், அவர்கள் தம் சமுதாயத்திற்குக் கொண்டு சேர்த்த அவலங்கள் மூலம் வலுப்பெற்று ஒலிக்க ஆரம்பித்த ஒரு கோஷமாகும்.

விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு விடுதலைப் போராட்ட வழியிலிருந்து வெளிச்சென்று மக்கள் நலன் பற்றிச் சிந்திக்காத ஒரு ஆயுத மோகங்கொண்ட அமைப்பாக மாறிய நாட்களிலிருந்து இந்தக் குரல்கள் உலகெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது, பாவம் கேட்கத்தான் ஆள் இல்லாமல் போனது.

சரி, அதையெல்லாம் விடுவோம், இது நேற்றைய தினம் (16-05) நந்திக்கடல் களப்பு வழியாகத் தப்பி வருவோர், கரை சேரும் போது இலங்கையின் ரூபவாஹினி தொலைக்காட்சிக் குழுவினர் அங்கிருந்து படம் பிடிக்கும் காட்சி.

மக்கள் அந்தப் பயங்கர சூழ்நிலையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, தம்மால் முடிந்த அத்தனை வழிகளிலும் தப்பி வருகிறார்கள்.

கையில் குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு டியுபில் ஏறி கொந்தளிக்கும் கடலைத்தாண்டி வருகிறார்கள், நடேசன் ஐயாவின் கூற்றுப்படி அவர்களாகவே விரும்பி விடுதலைப்புலிகளே எங்கள் காவலர்கள் என்று அந்தப்பக்கம் இருந்த இருதித் தொகுதி பலிக்கடாக்களில் இவர்களும் அடங்குவர்.

சரி, அந்தக் குற்றச்சாட்டைக் கூட விடுவோம்!

கரை சேரும் போது, கடல் நீரில் ஆடை கழன்று போய், அந்தத் தள்ளாடும் வயதிலும், நாலு காலில் நடக்க நிர்ப்பந்திக்கப்படும் அந்த வயதான மூத்த தமிழ் மகனைப் பாருங்கள் !

கரை சோந்ததும் உயிர் தப்பியது என்று நினைத்த மறு கணம், எம்மை விட்டுப் போய்விட்டார்கள் என்ற விரக்தியில் மறுபுறமிருந்து புலிகள் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படும் போது அவர்கள் உயிருக்குப் போராடும் உண்மை நிலையைப் பாருங்கள்!

அத்தனைக்கும் மேலாக இதே ஒளிப்படத்தில் 2 வது நிமிடம் 13வது செக்கனில் வந்து  பேசும் அந்த அபலைத் தமிழ்ப் பெண் என்ன கூறுகிறார் என்று செவி மடுத்துக் கேளுங்கள்.

ஐயா, மனிதக்காவலர் என்று கூறி எம் எதிர்காலத்தையே அழிக்கும் கனவான்களே, முடிந்தால் அந்தப் பெண்ணின் பாதத்தைத் தொட்டுக் கும்பிடுங்கள், ஒரு உண்மையான தாயின் உள்ளத்தை நன்றாக உங்கள் உயிருக்கும் போதே உங்கள் சொந்தக் கண்களால் பாருங்கள்.

இப்படி ஒரு பெண் அங்கிருப்பது ஒன்றே போதும், இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு நாங்கள் இந்த விழிப்புணர்வுக்காகப் போராடத் தயாராக இருக்கிறோம்.

உயிர் தப்பி வந்த அந்த நிலையிலும் ” தெருவொரங்களில் எம் மக்கள் கஷ்டப்படுகிறார்கள், யாரும் அற்ற அனாதைப் பிணங்களாகக் கிடக்கிறார்கள், நான் தப்பி வந்துவிட்டேன், ஆனால் அனைவரும் மீட்கப்பட வேண்டும், அரசிடம் சொல்லி அனைவரையும் மீட்கச் சொல்லுங்கள், நான் உயிர் பிழைத்ததில் பிரயோசனமில்லை, எல்லோரும் வாழ வேண்டும்,எல்லோரும் உயிர் பிழைக்க வேண்டும், அவர்களைக் காப்பாற்றுங்கள்” என்று கதறி அழுகிறார்.

புலிக் கனவான்களே, உங்கள் செவிட்டுக்காதுகளுக்கு அந்தப் பெண்ணின் தூய உள்ளத்துடனான கதறல் கேட்கிறதா பாருங்கள்!

அந்தப் பெண் சிங்கள மொழியில் கதறுகிறாள், எனவே ஒரு சிங்கள மொழிபெயர்ப்பாளரை அதுவும் ஒரு புலி ஆதரவில்லாத சிங்கள மொழிபெயர்க்காளரை வைத்து அவள் உண்மையில் என்னதான் கூறுகிறாள் என்று கேட்டுப்பாருங்கள்.

தன் உயிர் தப்பி வந்த அந்தக் கணத்திலும் மற்ற உயிர்களையும் பற்றிச் சிந்திக்கும் இந்தத் தாயையும் சேர்த்துத்தான் ஐயா நீங்கள் பலி கொடுக்கப் பார்த்தீர்கள், ஆயிரத்தில் எத்தனை பேரை ஆபத்திலும் சுயநலமில்லாமல் காண்பீர்கள்?

உங்கள் சுயநலத்திற்காக நீங்கள் கொன்ற கணக்குகளை விட நீங்கள் பலி கொடுக்கத் தயாரான கணக்கு அதிகமானது, ஆனால் அதிஷ்டவசமாக உம் அப்பன் அதுதான் அந்தக் கடவுள் அந்த மக்கள் பக்கம் இருக்கிறான் !

இப்போது வீடியோவைப் பாருங்கள் ..

 

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

3 responses to “அங்கிருந்தே ஒரு குரல் ..

 1. Thambiah Sabarutnam

  மே16, 2009 at 12:18 பிப

  நேற்று மதிவதனி பாலச்சந்திரன் உட்பட முக்கிய புலிகளின் குடும்பத்தவர் போலி அடையாள அட்டைகளுடன் இராணுவத்திடம் சரண் அடைந்து விட்டபோதும் இன்று இராணுவத்தினர் அவர்களை அடையாளம் கண்டு விட்டனர். ஞாயிறு காலை ராஜபக்சே பிரபாகரன் பிணமான செய்தியை தெரிவிக்க இருப்பதாக இங்கே சொல்லப்படுகிறது.
  இந்திய தீர்வை இருபது வருடத்திற்கு முன்னர் ஏற்றிருந்தால் முப்பதாயிரம் புலிகள் மாவீரர்கள் என்று மாய்ந்திருக்க வேண்டியதில்லை. கிளிநொச்சி பிடிபட்டதோடு யுத்த நிறுத்தம் அறிவித்திருந்தால் வன்னி மக்கள் இவ்வளவு இழப்புகளையும் அவலங்களையும் சந்ததித்திருக்க வேண்டி வந்திருக்காது.
  அரசியல் சூனியங்களை அறிவு கெட்ட முழு முட்டாள்களை புளுகு புளுகு என்று புளுகி இந்தா பண்ணப் போகிறான் படைக்கப் போகிறான் என்று பிலிம் காட்டி கடைசியில் கண்டது என்ன
  பங்கருக்குள் பாவாடையோடு படுத்துகிடந்த பேடி பிணமானதும் இன்னமும் புலி வாலுகள் அகபட்டதை சுருட்டி கொண்ட பின்னர் அரசாங்கம் அறிவித்த பின் தாமும் பிரபா பிணமானதை அறிவிக்க உள்ளார்கள்.
  இனியாவது அரசியல் பிழைப்பு நடத்தும் நரியர்களை நம்பாது ஒன்றுபட்டு முன்னேறுவோம்.

   
 2. Thambiah Sabarutnam

  மே16, 2009 at 6:27 பிப

  புலிகளோ யுத்தம் இல்லாத போது மக்கள் சலிப்படைந்து போவார்கள் என்றும் போராளிகள் மன மாற்றம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் அடுத்த இயக்கத்தவரையாவது போட்டுத் தள்ளுவதில் ஊக்கம் கொடுத்து. அந்த போர் மூடில் போராளிகளை வைத்திருக்க முயன்றார்கள்.சொறிந்தவன் கை சும்மா இருக்காது என்பது போல போரையும் வலிந்து தொடுத்தனர்.
  புலிகளது ஆயுதத்துக்கு பயந்தே புலி வாலை விட முடியாமல் அநேகர் இருந்தனர்அவர்கள் 30 வருடத்தில் பட்ட துன்பம் ஏராளம். ஆனால் அதுக்கு அவர்களுக்கு பட்டதோஅல்லது கிடைத்த நின்மதியோ ஒரு துளி கூட கிடையாது. ஆயுதம் மக்களின் உனர்வுகளையும் உரிமைகளையும் அடக்கியதே தவிர, அதை மக்களுக்கு எதுவும் பெற்று தரவில்லை. இறுதி நேரத்தில் கூட மக்களில் எந்தவித அக்கறையும் இல்லாமல் ஆயுதத்தை காப்பாற்றவே புலிகளின் வியாபாரிகள் உலகம் முளுவதும் ஓலமிட்டனர்.
  யுத்தத்தின் பின் சமாதானம் இப்படியும் வரும்? அமெரிக்க ஜப்பான் போரின் பின்னும் , ஜெர்மன் ஐரோப்பிய போரின் பின்னும் சமாதானம் வந்தது. அங்கே வாழும் மக்கள் வெறுத்து விட்டால் அடுத்தவரால் ஒன்றும் செய்ய முடியாது. இன்று ஜேவீபீ மற்றொரு புரட்சிக்குத் தயாரில்லை. இலங்கை வாழ் தமிழரும் இன்னொரு இழப்புக்கு தயாரில்லை.

  பிற்குறிப்பு
  முன்னாள் பிஸ்டல்குழு தலவன் தமிழ்செல்வனின் மனைவி கூட தன புதிய காதலனுடன் புது வாழ்வு அமைக்க ராணுவத்திடம் சரண் அடைந்து விட்டார்.

   
 3. Rajenderam Abreham

  ஓகஸ்ட்30, 2010 at 9:47 பிப

  தமிழனுக்கு இலங்கையில் பிரச்சனை என்கிறார்கள். ஆனால் கொழும்பிலும், தென் இலங்கையிலும் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழும் தமிழரின் தொகையை ஒப்பிட்டு பார்ப்பதில்லை.

  அதற்குமேலாக, வெளிநாடுகளிருந்து படை, படையாக வந்து போகும் தமிழ் சனங்களின் தொகையையும் கண்டுகொள்வதில்லை.

  எத்தனையோ வெளிநாட்டு தமிழர் இலங்கையில் சிங்கள தலைவர்களுடன் சேர்ந்து வியாபார முதலீடுகள் செய்துள்ளார்கள்.

  அதிப்பற்றி கதையே இல்லை. அதெல்லாம் தமிழ்ஈழ வெப்களில் வெளிவரமாட்டது. தமிழ் செய்தியாளர்கள் கண்களில் தெரிவதும் இல்லை.

  தயவு செய்து, இனிமேலும் வெளிநாடுகளிருந்து குறைக்க வேண்டாம்!. தமிழ் தமிழ் என்று புலம்ப வேண்டாம்!.

  தன்மானம் உள்ள, உண்மையான தமிழ் பற்றுள்ள தமிழன் என்றால் எமது மண்ணில் வந்து வாழ்துகொண்டு கதைக்கவேண்டும். உங்களை வரவேற்க நாங்கள் ரெடியாகவுள்ளோம்.

  அதற்கு உங்களில் எவரும் ரெடியா??

  அகதித்தமிழன், அடிமட்ட சிந்தனைத்தமிழன், சுயனலத்தமிழன், கள்ளத்தமிழன், பரதேசி தமிழன், கூலித்தமிழன், வேசித்தமிழன், கொடி பிடித்து கும்மாளம் போடும் குரங்குதமிழன், ஊர்வலம் போகும் செம்மறித்தமிழன்…………..

  எவன் வருவான் இங்கு வாழ? எவன் வருவான் இங்கு தன்மானத்துடன் வாழ?

  ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் எமது மண்ணை விட்டு, எமது மக்களை கோவணத்துடன் தள்ளி விட்டு, தங்கள் தங்கள் குடும்பத்துடன் கோழைகளாக, தங்களின் சுயனலத்திக்கு, தங்கள் பிழைப்புகளுக்கு பொய், புரட்டு, களவு செய்து, தமிழனின் மானத்தை விற்று, மரியாதை இழந்து, போலி வாழ்க்கை வாழ்வதை விட மகிந்தாவின் காலில் விழுந்து கும்பிடுவது எவ்வளவோ மேல்.

  முதலில், சற்று யோசித்து பாருங்கள் நாளை பிறக்கும் என்று நம்பி நடுத்தெருவில் நிக்கும் தமிழினத்தின் கதியை.

  யோசித்து பாருங்கள்.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: