RSS

Pirates of the Little Island

15 மே

l2pirates

நமக்கு முன்னாள் வாழ்ந்த ஒவ்வொரு சமூகமும், நமக்குப் பின்னால் வரும் சமூகத்திற்காக பல அடையாளங்களை மீதம் வைத்துச் செல்கின்றது.

அதுவே நமது பின்னோர்கள் நம்மைப்பற்றிய வரலாற்றை அறிந்துகொள்ளவும், ஆய்வு செய்யவும் உதவுகிறது.

ஈழவிடுதலைப் போராட்டம் எங்கிருந்து ஆரம்பித்ததோ மீண்டும் அங்கேயே சென்று சங்கமிக்கிறது ..!

நமக்கு முன்னாள் வாழ்ந்த மனித இனம், அவர்கள் வளர்ச்சி, அவர்கள் நாகரீகங்கள், பழக்க வழக்கங்கள்,அறிவு, கண்டுபிடிப்புகள் என்று நாம் பெருமை பேசிக்கொள்ளும் அனைத்து அத்தாட்சிகளும் நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்றவை தான்.

கொழும்பு வெள்ளவத்தை கடற்பகுதியிலும் ஒரு உடைந்த கப்பல் இருக்கிறது, இலங்கையின் இன்னும் சில கடற்கரைகளிலும் கை விடப்பட்ட சில கப்பற் பாகங்கள் காணப்படுகின்றன.

ஒல்லாந்தர்,ஆங்கிலேயர் விட்டுச்சென்ற எத்தனையோ தடயங்கள், அவர்கள் வெட்டிச்செதுக்கிய பாதைகள்,கட்டிக் காப்பாற்றிய கோட்டைகள் முதல் நம் அன்றாட வாழ்க்கையிலும் விட்டுச்சென்ற வார்த்தைப் புழக்கங்கள்,உணவுப் பழக்கங்கள் என்று பல்வேறு தடயங்கள் இன்றும் வாழ்கி்ன்றன, அவற்றை நம் அடுத்த சந்ததியினருக்காக நாமும் விட்டுச்செல்லத்தான் போகிறோம்.

முல்லைக்கடற்பரப்பில் இன்னும் பல காலம் அனாதையாக இருக்கப்போகும் இந்த ஜோர்தானிய சரக்குக்கப்பலும் பல செய்திகளை நமக்கும், நம் பின் வருவோருக்கும் விட்டுவைக்கப்போகிறது.

1400 தொன் அரிசியை புலிகள் கொள்ளையடித்தார்கள் என்கிற சாதாரண தகவல் வீரமாகவும்,கேவலமாகவும் இரு புறங்களில் வாதத்திற்குள்ளாகிக்கொண்டிருக்க, இவர்கள் விடுதலை வீரர்களா கடற்கொள்ளைக்காரர்களா என்று ஆழ ஊடுருவி இனிவரும் வரலாற்றின் பல கேள்விக்குறிகளுக்கு விடை சொல்லும் அத்தாட்சியாகவும் இது இருக்கப்போகிறது.

புலிகள் கடற்கொள்ளைக் காரர்களே ! தம் பாதையை நியாயப்படுத்த விடுதலைப் போர் என்று பூச்சாண்டி காட்டினார்கள் என்று வரப்போகும் இறுதி முடிவை எடுப்பவர்களையும் தடுக்க முடியாது, இல்லை சர்வதேச தரத்தில் தம்மாலும் சாதனைகள் நிகழ்த்த முடியும் என்று புலிகள் செய்த வீரமான செயல் இது என்று சாதனைப் பட்டியலிடப்போவதையும் நிறுத்த முடியாது.

வரலாற்றை மாற்றி எழுதும் வடிவத்தில் அவரவர் தேவைக்கு இந்த வாயில்லாக் கப்பல் வசதியாகப்போகிறது.

கள்ளக் கடத்தலே அன்றைய பிரதான வருமான மார்க்கமாக இருந்தது, அதன் மூலமே அனைத்து வளங்களையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது என்கின்ற ஆரம்பகால வரலாறு பின்னி முடியப்படும் போது யார் யார் அதைச் செய்தார்கள்? அதிலிருந்து எவ்வாறு இந்தப் போராட்ம் தன்னை வளர்த்துக்கொண்டது? ஆரம்பகால புரட்சியாளர்கள் யார்? அவர்கள் கைதானது எப்படி? அவர்களை சிறைச்சாலை வரலாறாக்கியது எப்படி? என்று பெரும் சங்கிலித்தொடரான வரலாறுகள் மீள எழுதப்படப்போகின்றன.

அந்த வரலாற்றில் இப்படியான பாரிய சர்வதேசக் கொள்ளைகளும், அதே வேளை மக்களுக்காக அனுப்பப்படும் உணவுகளை பதுக்கிவைத்து, பின் தம் ஆளுமையைக் காட்டுவதற்காகவே அவர்களுக்கு கஞ்சி ஊற்றிய “பெருமையான” வரலாறையும் உயிரோடிருக்கும் இப்போதைய சாட்சிகள் மூலம் வரலாறு பதியும்.

விசைப்பலகை வீரர்களிடம் விடுதலைப் போரட்டத்தைக் கவனிக்க ஆணையிட்டுவிட்டு, அடர்ந்த காட்டிற்குள் ஆழ்ந்த உறக்கத்தில் திளைத்திருந்த தலைமையையும், அதனால் மக்கள் பட்ட சொல்லொண்ணாத் துயர்களையும் கூட வரலாறு பதிந்து கொள்ளும்.

ஒரு இனம் பல்வேறு பிரிவாகப் பிரிக்கப்பட்டு இறுதி வரை அல்லல் படும் தன் சொந்த இனத்தை நம்புவதா? இல்லையா? அவர்களுக்காக களமிறங்குவதா? இல்லையா? குரல் கொடுப்பதா? இல்லையா? என்று மனம் தடுமாறிய வரலாறும் பதியப்படும்.

இத்தனைக்கும் பின்னால் இருந்த அத்தனை உண்மை,பொய்களும், நசுக்கப்பட்ட உரிமைகளும், மறுக்கப்பட்ட அவர் சுதந்திரங்களும் அலசி ஆராயப்படும் போது, இந்தக் குட்டித் தீவின் கரை படிந்த வரலாறு, பல கல்லறைகளை சாட்சிக்காகக் கூட தொடப்படாமல் அவரவர் சொந்த விருப்பு,வெறுப்பில், அபிப்பிராய பேதத்தில் வார்த்தெடுக்கப்படும்.

இறுதியில், என்றும் நாம் புத்தகங்களில் படித்துச் சுவைக்கும் த்ரில்லர் நாவல்கள் போல் இந்தக் குட்டித்தீவின் கதையும் “குட்டித்தீவின் கடற்கொள்ளையர்கள்” என்று ஒரு நாள் வெளியாகி, வெறும் சுவை நிறைந்த கதையாக மட்டும் மாறிப்போகும்.

மாறாத வடுக்களைச் சுமக்கும் அந்த மக்கள் தம் மண்ணிலேயே மீண்டும் வாழ்வர், ஆனால் அவர் சுமக்கும் வடுக்களின் ஆழத்தை உலகமே மறந்துவிடும்.

அடுத்த தலைமுறையினர் தலைதூக்கி சுதந்திரமாக வாழும் காலம் வரும் வரை இந்த வடுக்களும், அவை சொல்லிச் செல்லும் வரலாறுகளும் என்றென்றும் சுமக்கப்படும்.

அப்போது, இந்த வரலாற்றில் இதே மக்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சிந்திக்க உங்கள் மனம் துணிந்தால், அன்றே நான் சிந்தித்தேன் என்ற ஆத்ம திருப்தியைப் பெற்றுக்கொள்ள இன்றே நீங்கள் சிந்திக்க வேண்டும்.

நாளைய சமுதாயத்தை வேகமாகக் கட்டியெழுப்பும் திறன் உங்களிடம் தான் இருக்கிறது, வரலாற்றை மாற்ற முடியாது ஆனால் வருங்காலத்தையாவது மாற்றிக்கொடுக்கலாம்.

சிந்தித்தால் நல்ல வழி பிறக்கும்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

One response to “Pirates of the Little Island

 1. பாரதி.சு

  மே15, 2009 at 5:22 பிப

  //”சிந்தித்தால் நல்ல வழி பிறக்கும்.”//

  உண்மை தான்.
  நீங்களும் கொஞ்சம் புதுசா சிந்திச்சு எழுதுங்க சார்.. திரும்பத்திரும்ப குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுறத கொஞ்சம் நிறுத்துங்க…..
  போரடிக்கிறது… உங்களிடம் நிறைய வித்தியாசமான கோணங்களில் எதிர்பார்க்கிறேன். YES.. YOU CAN.

  அதைவிட எனக்குத் தெரிந்த தமிழ் தலைவலிகள் (தலைமைகள் என்னு சொல்லனுமாம்) எல்லாமே “PIRATES OF THE LITTLE ISLAND” தான்.
  அதனால் அந்த படம்….NOT GOOD IN THIS TIME.
  ————————–
  நான் பயந்தது போலல்லாது இறுதிநிமிடங்களில் கூட “தன் வர்க்கத்திற்கு” துரோகமிழைக்காது போராடுகிறார்கள். It’s Really Great.
  தோற்கப்போகிறோம் என்று தெரிந்தபின்னும் சளைக்காது போரிடுவது அவர்கள் மீதான மரியாதையை கூட்டுகிறது..அத்துட அப்பேர்ப்பட்ட ஓர்மத்தை வளர்த்த “தலைமையே” அவர்கள் அழிவிற்கும் காரணம் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: