RSS

தலைவா நீ சயனைட் அடித்தே ஆக வேண்டும் !

15 மே

“தலைவா நீ சயனைட் அடித்தே தீரவேண்டும்” இதுதான் இனிப் புலி ஆதரவாளர்களிடம் மிஞ்சப் போகும் கோரிக்கை !

இந்தக் கடைசி ஆசையாவது தீர்க்கப்படாவிட்டால், தலைவனை நம்பிப் பந்தயம் கட்டியோர் நிலை என்னாவது?

தலைவா உன்னிடம் என்னதான் இருக்கவில்லை? இறுதியில் மல்டி பரல் ராக்கெட் லோஞ்சரும் அல்லவா இருந்திருக்கிறது என்று அவன் கேட்கப்போகும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது?

“என் கொள்கையில் நான் தடம் பிரண்டால் என் சக போராளியே என்னைச் சுட்டுக்கொல்லட்டும்” என்ற கவர்ச்சிகரமான கொள்கைப் பிரகடனம் செய்து, தன் கழுத்திலும் சயனைட் வில்லை மாட்டிக்கொண்டு, தன் இயக்கத்தில் இணைந்த ஒவ்வொரு போராளிக்கும் “அ” , “ஆ” சொல்லிக்கொடுக்காவிட்டாலும் சயனைட் அடிக்கக் கற்றுக்கொடுத்த அவர் சித்தார்ந்தம் இன்று அவருக்கெதிராகவே இயங்கிக்கொண்டிருக்கிறது.

அதன் தீரத்தை இப்போது, உடனடியாக புலிகளின் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளாவிடினும், நாளடைவில் உங்கள் உந்துதலிலேயே உங்கள் தலைவன் சயனைட் அடித்த கதைதான் மிஞ்சப் போகிறது.

இல்லாத ஈழத்தை உருவாக்கி, இருக்காத கட்டுமானத்தையும் நிர்வாகத்தையும் உள்ளதாகக் காட்டி, தனி அரசு, தனி நாடு, கெரில்லாப் படை, மரபுப் போர்ப் படை,விமானப் படை,கடற் படை,தற்கொடை(?)ப் படை, என்று தலைவர் கட்டி வளர்த்த தமிழீழம் இறுதியில் இணையத்தளப் போராளிகளிடம் பரிதாபமாகக் கைவிடப்பட்டதனால் இன்று விரக்தியின் உச்சத்தை அடைந்திருக்கும் ஒவ்வொ பந்தயக்கார ரின் மனதிலும் இப்போது எழும் கேள்வியானது..

கடற்புலித் தலைவர் சூசையின் குடும்பமும் அகப்பட்டுக்கொண்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது, அப்படியானால் தலைவரை இராணுவம் நெருங்கிக்கொண்டிருக்கிறது, இப்போது தலைவர் அகப்படுவாரா? இல்லையா? அல்லது இந்த சூப்பர்மேன் ஏற்கனவே அம்பாறைக் காடுகளிலாவது வாழ்கிறாரா? தப்பி விட்டாரா? மாட்டிக்கொள்வாரா என்கின்ற பேராவலாகும்.

இந்த ஆவலின் மறுபக்கத்தில், தலைவரை மகா மாவீரனாய்ப் பார்த்துப் பேசி, புகழ்ந்து பழகிவிட்ட இந்த பந்தயக்காரர்களின் உள்ளத்தில் இருப்பதெல்லாம் தலைவர் இராணுவத்தின் கையில் அகப்படவே கூடாது, சயனைட் அடித்து வீர மரணத்தையாவது தழுவிக்கொள்ள வேண்டும் என்பதாகும்.

இத்தனை நாள் இந்தக் கனவை ஊட்டி வளர்த்த பங்குதாரர்கள் இப்படி நெருக்கும் போது வேறு வழியெதுவும் இல்லை, தலைவர் சயனைட் அடித்தே ஆக வேண்டும்.

ஆனால் தலைவர் அப்படியெல்லாம் சயனைட் அடிக்க மாட்டார் என்பது ஜோர்ஜ் மாஸ்டர்ஈ, கருணா அம்மான் மற்றும் தலைவரின் முன்னாள் சுற்றச்சூழல் எல்லாம் சொல்லும் நற் செய்தி.

இதுதான் இலங்கை இராணுவத்தின் தேவையும்.

ஆனாலும் தலைவரைக் காப்பாற்றுகிறோம் பேர்வழி என்று அவரை சயனைட் அடித்தாவது வீரனாகிப்போ என்று நம் வெளிநாடு வாழ் அவர் சிஷ்யர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்.

இலங்கை அரசாங்கத்தின் அத்தனை நிர்வாக அலகுகளும் அப்படியே இருக்க, அதில் பெருந்தலைகளான அரசாங்க அதிபர்களை தமக்குப் பதிலளிக்கும் பேர்வழியாக மாற்றியதன் மூலம் அவர்கள் அரசாங்கம் ஆனார்கள்.

அரசாங்கம் அப்பாவி மக்களுக்கு அனுப்பும் உணவு மற்றும் மருந்துகளை அபகரித்து, தமக்குத் தேவையானதை எடுத்துவிட்டு மிச்சம் மீதியிருந்தால் மக்களுக்கு சப்ளை செய்ததன் மூலம் அவர்களே நிவாரணப் புருஷர்களானார்கள்.

படங்காட்டுவதற்காவது பந்தயக்காரர்களின் பணத்தில் ஆயுதங்களை வாங்கிக் குவித்ததன் மூலம் அவர்களே அந்த மக்கள் அறிந்த வல்லரசானார்கள்.

தெய்வங்களைக் கூட கண்ணில் காட்டாமல் தலைவரின் படத்தை ஒவ்வொரு வீட்டிலும் தொங்க வைத்து அவரைக் கடவுளின் மகனாக்கிக்கொண்டார்கள்.

ஒலித்தால் புலிகளின் குரலை மட்டுமே ஒலிக்கவிட்டார்கள், ஒளிப்படம் என்றால் அவர்களின் வீச்சை மட்டுமே காட்டி அந்த மக்களை உரமூட்டினார்கள்.

பின்னர் அவர்கள் உணர்வுகளைக் அடக்குமுறையில் கொட்ட வைத்து அந்தப் படத்தைக் காட்டி வெளிநாடு வாழ் பந்தயக்காரர்களை குஷிப்படுத்தினார்கள்,இவர்களோ தலைவரின் தலை மேல் பந்தயங்கட்டினார்கள்.

இப்போது பந்தயக்காரர்களின் இறுதிக் கோரிக்கை தயாராகிக்கொண்டிருக்கிறது.

பந்தயம் போட்டுவிட்டு, தன் நண்பன், தனக்குத் தெரிந்தவன், அடுத்த வீட்டுக்காரன்,தூரத்து உறவினன் என்பதோடு இன்னொரு சிங்கள மனிதனைப் பார்த்தால் கூட சீறிப்பாய்ந்து பெரும் சவால் விட்டுத் தன் தலைவனை மாவீரனாக்கிய இந்த சமூகப்பற்றாளன், இப்போது தன் தலைவன் சயனைட் அடித்தால் தான் இனி உறங்கப் போகிறான்.

எத்தனை பேரிடம் சவால் விட்டான் அவன்? எத்தனை தடவைகள் இறுதிப் போருக்குப் பந்தயம் கட்டினான்? பணம் இல்லாவிட்டால் கடன் பட்டும் அல்லவா பந்தயம் கட்டினான்,விடுவானா? தலைவா இந்தத் தொண்டனை குஷிப்படுத்தவாவது நீ மாவீரனாகப் போகிறாய்.

வரலாறு உன்னை மன்னிப்பது இல்லாததெல்லாம் விட்டுத்தள்ளு, ஒரு சமுதாயத்தை சிந்திக்கவே விடாமல் நீ உன் சித்தார்ந்தத்தின் பால் உந்திக்கொண்டு சென்றாய், இப்போது அதே சமுதாயம் உன்னை உசுப்பேத்தியாவது கொல்லப் போகிறது, தப்ப முடிந்தால் தப்பிக்கொள்.

என்ன செய்வது? முன்போன்ற நிலையற்ற அரசுகள் தென் பகுதியில் இருந்தால் நீ கானாப் பக்கம் ஓடிச்சென்று அங்கிருந்து அறிக்கை விட்டால் கூட அதை நம்பலாம், இப்போது முடியாதே!

இவன் நேருக்கு நேரல்லவா மோதுகிறான், சரி உன் பாஷையில் சொல்வதென்றால் அவன் தன் நண்பர்களோடுதான் சேர்ந்து மோதுகிறான் என்று வைத்துக்கொண்டாலும், நீ இன்னும் பின் வாங்கிக்கொண்டுதானே இருக்கிறாய்?

உன்னைச் சுற்றி ஆயிரம் பேர் இருக்கும் போது உனக்கென்ன கவலை தலைவா? அப்போது உன் போராளிகள் இருந்தார்கள் இப்போது அப்பாவி மனிதர்களாவது இருக்கிறார்கள், எனவே அந்த ஆயிரத்தையும் தாண்டி ஆமிக்காரன் வந்து சேர்ந்துதானே உன்னை நெருங்க வேண்டும். அதற்குள் எதையாவது செய்து, எந்தப் பாராளுமன்றத்தையாவது செயலிழக்கச் செய்து, எந்த நகரத்தையாவது முடங்கச்செய்து, உன் தலையைக் காப்பாற்றுவார்கள் உன் சிஷ்யர்கள் என்று நீ இன்னுமா கனவு காண்கிறாய்?

இல்லை தலைவா, உலகமே ஒரு விடயத்தை திரும்பத் திரும்பச் சொல்கிறது, உன் சிஷ்யர்கள் மட்டுமே அதைப் புரிந்து கொள்ளாமல் தெருவில் நிற்கிறார்கள், அவர்கள் நிற்க நிற்க உன் சயனைட் கயிறு உன்னை இறுக்கிக்கொண்டே இருக்கிறது.

அவர்களும் விடமாட்டார்கள், அதாவது தலைவரை மாவீரன் ஆக்காமல் விடமாட்டார்கள்.

அதற்குள் உன்னால் ஏதாவது செய்ய முடிந்தால் செய்து கொள், மக்களே நான் இதைத்தான் செய்தேன் என்று மக்கள் முன் மண்டியிட முடிந்தால் மண்டியிட்டுக்கொள், என் சித்தார்ந்தம் எதைச் சாதித்தது என்று உன் சொந்த விமர்சனத்தை உன்னை நோக்கி வைத்துக்கொள்ள முடியும் என்றால் வைத்துக்கொள்.

இன்னும் ஆமிக்காரன் உன் அருகில் மட்டும் வரவில்லை, அதற்குள் எதையாவது கடைசி நிமிடத்திலாவது சிந்தித்துக்கொள், இல்லையென்றால் உன்னை சயனைட் அடிக்க வைக்காமல் இந்த சிஷ்யர்கள் ஓய மாட்டார்கள்.

அவர்களாகக் கேட்ட பின் நீயாக மறுக்க முடியாது, அதற்குள் பொட்டம்மானை ஏதாவது திட்டம் தீட்டச்சொல்.

என்ன செய்தாலும் பரவாயில்லை தலைவா, உனக்கும் உன் சிஷ்யர்களுக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில் அங்கே உன்னைச் சுற்றி அடைத்து வைத்திருக்கும் அந்த அப்பாவி மக்களை மட்டும் விட்டு விடேன் ப்ளீஸ்..

அவர்கள் கடலில் தத்தளித்து, காடுகளில் தடுக்கி விழுந்து, முட்களில் விழுந்தெழுந்தாவது அந்தப் பக்கம் போய், தம் உயிர் பிரிய முன்னர் வாழ்க்கையை ஒரு தடவை வாழ்ந்து பார்க்கட்டும்.

நாளை அரசாங்கம் அவனை கழித்து வைத்தால், உன் புரட்சியின் பாடம் தெரியும் தானே? அவன் சொந்த மூளையைக் கொண்டு வரலாறு படைக்கட்டும்.

அவர்களை விட்டு விடு தலைவா ! பிழைத்துப் போகட்டும்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

7 responses to “தலைவா நீ சயனைட் அடித்தே ஆக வேண்டும் !

 1. Mathi

  மே15, 2009 at 6:54 பிப

  Ezhudhumpodhu manasatchiyodu Ezhudhavendum. nanum ezhudhukiren endru solli 60 aandugalaga nadakkum oru makkal porattaththai, sondha mannil andha makkalin vidudhalai porattaththai izhivu paduththakkoodathu. nanbar iniyavathu unarvugalaiyum, andha makkalin urimaigalaiyum, poratta varalaraiyum therindhu ezhudhattum. nandri.

   
 2. சுசீ

  மே15, 2009 at 7:10 பிப

  நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.
  “…நாட்டை (நம் வன்னி) விட்டு ஓடியவர் நாய்ச்சாதி-விட்டுவிடு
  அவர்கள் அங்கே நக்கிப் பிழைக்கட்டும்…” என்ற வரிகள் நினைவில் குறுக்கிட்டு நிற்கின்றன.

   
 3. Guna

  மே15, 2009 at 7:10 பிப

  Vellvathu namaka erundhalum vazhvathu tamila erukattum.

   
 4. suresh

  மே15, 2009 at 7:26 பிப

  என்ன தல கடிச்சு குதறி போட்டிங்க சிசியர்கள் இனி ரத்த கொதிப்பு
  வரப்போகுதே we want damil elam ava leader pirapakaran இதுதான் எங்கட தேசியா
  கொடி இது தானே இவர்களின் கோசமாக இருக்கிறது .

  வருடங்கள் போய் மதங்கள் போய் நாட்கள் போய் இனி நேரங்களை
  எண்ணிக் கொள்ளட்டும்

   
 5. tiger

  மே15, 2009 at 8:51 பிப

  //“தலைவா நீ சயனைட் அடித்தே தீரவேண்டும்” இதுதான் இனிப் புலி ஆதரவாளர்களிடம் மிஞ்சப் போகும் கோரிக்கை !//

  இது டாப்பு

   
 6. Thambiah Sabarutnam

  மே16, 2009 at 12:17 பிப

  நேற்று மதிவதனி பாலச்சந்திரன் உட்பட முக்கிய புலிகளின் குடும்பத்தவர் போலி அடையாள அட்டைகளுடன் இராணுவத்திடம் சரண் அடைந்து விட்டபோதும் இன்று இராணுவத்தினர் அவர்களை அடையாளம் கண்டு விட்டனர். ஞாயிறு காலை ராஜபக்சே பிரபாகரன் பிணமான செய்தியை தெரிவிக்க இருப்பதாக இங்கே சொல்லப்படுகிறது.
  இந்திய தீர்வை இருபது வருடத்திற்கு முன்னர் ஏற்றிருந்தால் முப்பதாயிரம் புலிகள் மாவீரர்கள் என்று மாய்ந்திருக்க வேண்டியதில்லை. கிளிநொச்சி பிடிபட்டதோடு யுத்த நிறுத்தம் அறிவித்திருந்தால் வன்னி மக்கள் இவ்வளவு இழப்புகளையும் அவலங்களையும் சந்ததித்திருக்க வேண்டி வந்திருக்காது.
  அரசியல் சூனியங்களை அறிவு கெட்ட முழு முட்டாள்களை புளுகு புளுகு என்று புளுகி இந்தா பண்ணப் போகிறான் படைக்கப் போகிறான் என்று பிலிம் காட்டி கடைசியில் கண்டது என்ன
  பங்கருக்குள் பாவாடையோடு படுத்துகிடந்த பேடி பிணமானதும் இன்னமும் புலி வாலுகள் அகபட்டதை சுருட்டி கொண்ட பின்னர் அரசாங்கம் அறிவித்த பின் தாமும் பிரபா பிணமானதை அறிவிக்க உள்ளார்கள்.
  இனியாவது அரசியல் பிழைப்பு நடத்தும் நரியர்களை நம்பாது ஒன்றுபட்டு முன்னேறுவோம்.

   
 7. Thambiah Sabarutnam

  மே16, 2009 at 6:26 பிப

  புலிகளோ யுத்தம் இல்லாத போது மக்கள் சலிப்படைந்து போவார்கள் என்றும் போராளிகள் மன மாற்றம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் அடுத்த இயக்கத்தவரையாவது போட்டுத் தள்ளுவதில் ஊக்கம் கொடுத்து. அந்த போர் மூடில் போராளிகளை வைத்திருக்க முயன்றார்கள்.சொறிந்தவன் கை சும்மா இருக்காது என்பது போல போரையும் வலிந்து தொடுத்தனர்.
  புலிகளது ஆயுதத்துக்கு பயந்தே புலி வாலை விட முடியாமல் அநேகர் இருந்தனர்அவர்கள் 30 வருடத்தில் பட்ட துன்பம் ஏராளம். ஆனால் அதுக்கு அவர்களுக்கு பட்டதோஅல்லது கிடைத்த நின்மதியோ ஒரு துளி கூட கிடையாது. ஆயுதம் மக்களின் உனர்வுகளையும் உரிமைகளையும் அடக்கியதே தவிர, அதை மக்களுக்கு எதுவும் பெற்று தரவில்லை. இறுதி நேரத்தில் கூட மக்களில் எந்தவித அக்கறையும் இல்லாமல் ஆயுதத்தை காப்பாற்றவே புலிகளின் வியாபாரிகள் உலகம் முளுவதும் ஓலமிட்டனர்.
  யுத்தத்தின் பின் சமாதானம் இப்படியும் வரும்? அமெரிக்க ஜப்பான் போரின் பின்னும் , ஜெர்மன் ஐரோப்பிய போரின் பின்னும் சமாதானம் வந்தது. அங்கே வாழும் மக்கள் வெறுத்து விட்டால் அடுத்தவரால் ஒன்றும் செய்ய முடியாது. இன்று ஜேவீபீ மற்றொரு புரட்சிக்குத் தயாரில்லை. இலங்கை வாழ் தமிழரும் இன்னொரு இழப்புக்கு தயாரில்லை.

  பிற்குறிப்பு
  முன்னாள் பிஸ்டல்குழு தலவன் தமிழ்செல்வனின் மனைவி கூட தன புதிய காதலனுடன் புது வாழ்வு அமைக்க ராணுவத்திடம் சரண் அடைந்து விட்டார்.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: