RSS

மீண்டும் ஒரு வாய்ப்பு ..

14 மே

மீண்டும் ஒரு வாய்ப்பு, அதை நழுவ விடுமா தமிழினம்?

ஓகே, ஒபாமா வாயைத்திறந்தார்,கருமம் என்னதான் பங்கருக்குள் இருந்தாலும் நடேசன் ஐயா பாய்ந்தடித்து “நன்றி” தெரிவித்துவிட்டார், புலிகளின் ஆதரவாளர்களும் “சியர்ஸ்” சொல்லி மகிழ்ந்து கொள்கிறார்கள்.

அவர்கள் “சுய இன்பத்தில்” மூழ்கும் இவ்வேளையில், இதைதெயல்லாம் தூக்கியெறிந்து கொஞ்சம் உண்மையைப் பேசுவோமா?

US President Barack Obama also urged the army to stop shelling of civilian areas and called on the rebels to lay down their arms.

“Without urgent action this humanitarian crisis could turn into a catastrophe,” he said.

ஒருவேளை ஜோர்ஜ் மாஸ்டர் தப்பி வந்துவிட்டதால் நடேசனுக்கு மொழிபெயர்ப்பு பிரச்சினையோ தெரியவில்லை.

“இலங்கை இராணுவத்தின் ஷெல் தாக்குதல்களை நிறுத்தக் கோரிய அதே வேளை விடுதலைப் புலிகளை ஆயுதங்களைக் கீழே வையுங்கள்” என்று அவர் கேட்க நடேசன் ஐயா நம் வெளிநாடு வாழ் தமிழர்களைக் குஷிப்படுத்த ஒரு “நன்றி” அறிக்கை அவசர அவசரமாக வெளியிட்டுவிட்டார்.

இல்லை அவர் பெயரில் தமிழ்நெட்டாவது வெளியிட்டு விட்டார்கள்.

இதேவேளை இன்று இன்று ஐ.நா பாதுகாப்புச்சபை ..

council members “strongly condemn the LTTE [Liberation Tigers for Tamil Eelam] for its acts of terrorism over many years”.

http://www.un.org/News/Press/docs/2009/sc9659.doc.htm

என்கிறது, அதாவது புலிகளின் பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் மிகத் திடமாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கிறது.

எனவே, நடேசன் ஐயாவின் “சுய இன்பப்” போராட்டத்தைத் தவிர்த்து இதில் தமிழினத்துக்குக் கிடைத்திருக்கும் நல்லதை ஆராய்வதென்றால்,The U.N. Security Council held its first formal session on Sri Lanka and voiced grave concern over civilian deaths in the conflict என்பது தான் நல்ல செய்தி.

அதைப் பற்றிப் பிடித்து வாய்ப்பைப் பயன்படுத்தும் பொறுப்பு உங்கள் கைகளுக்கு இப்போது வந்திருக்கிறது.

இதை எப்படிச் செய்வது? என்று இன்னொருவரில் தங்கியிருக்காமல் உங்கள் சொந்த வேலைத்திட்டத்தில் நீங்கள் இறங்கினால், அங்கிருக்கும் இறுதித்தொகுதி பலிக்கடாக்கள் தப்பிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

எப்படி சாத்தியம்?

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை அவர்கள் புலிகளை அழிக்காமல் ஓயப்போவதில்லை. அதை மிகத் தெளிவாக பல இடங்களில் ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அழியப்போவது புலிகள் என்பதை விட புலிகளின் பெயரால் அப்பாவி மக்கள் என்பதே அனைத்துலகத்தின் கரிசணை.

அந்தக் கரிசணைக்குக் கிடைக்கும் அழுத்தங்களை இலங்கை அரசு புறந்தள்ளப்போவதில்லை, ஆனால் அந்தக் கரிசணையை சர்வதேசம் அழுத்தமாக சொல்ல முடியாமல் இடையில் இருக்கும் பிரபா கும்பல் தான் மஹிந்த பிரதர்சுக்கும் ஒரு Excuse.

அந்தக் காரணி முதன்மைப் படுத்தும் போது அதிபர் ஒபாமா பேச முன்னர் அவரும் அங்கம் வகிக்கும் பாதுகாப்பு சபை புலிகளை வண்மையாகக் கண்டிக்கும் அரசியல் நடந்தேறுவதை அவதானிக்கத் தவறினால் நீங்கள் வழி தவறி காட்டுக்குள் திணறுவது திண்ணம்.

புலி எப்படிப்போனாலும் போகட்டும், புலிகளைக் காப்பாற்றுவதற்காக தெருக்களில் டமாரம் அடிக்க ஒரு கூட்டம் இருக்கிறது, அவர்களை விட்டு விட்டு மனித அவலத்தைத் தவிர்ப்பதற்கு இலங்கை அரசை எவ்வகையான திட்டங்களுக்குள் உடன்படுத்த முடியும், அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்யமுடியும் என்பதை சிந்தியுங்கள்.

புலிகளின் கூட்டங்களுக்கு இரு வகையான மக்கள் செல்கிறார்கள்

1. பந்தயக்காரர்கள், தீவிர விசிறிகள்

2.இப்படியாவது ஒரு போர் நிறுத்தம் வந்து புலி பிடித்துச் சென்ற தம் பிள்ளைகளின் உயிர்களாவது காப்பாற்றப்பட வேண்டும் என்கிற மறைமுக நோக்கம்.

இதில் இரண்டாவது வகையினரை புலிக் கூட்டங்களில் அடையாளம் கண்டுகொள்வது மிக சுலபமாக இருக்கும், அவற்றை இங்கே அப்பட்டமாக எழுதி அவர்களைக் காட்டிக்கொடுப்பதில் பிரயோசனம் இல்லை.

ஏனெனில், தாய் வழியில் வட பகுதியைச் சேர்ந்தாலும் சிறு வயது முதல் கொழும்புப் புற நகர்ப்புறங்களில் வாழ்ந்த,ஆனாலும் புலி ஆதரவுடன் ஊர்வலத்திற்குச் சென்ற ஒரு இளைஞனையே பிடித்து வைத்து இவர்கள் அசைலம் அடிப்பதற்கு கால் நடையாகவும், வான் வழியாகவும் வந்திறங்கிய போது கூட வெள்ளைக்காரர்கள் கேட்காத கேள்விகளையெல்லாம் கேட்டு அவனை மிதித்து அனுப்பியிருந்த சம்பவம் ஒன்று அண்மையில் நடந்திருந்தது.

அந்த அப்பாவி மக்களின் வெளியில் சொல்ல முடியா உள்ளக் குமுறல்கள் அப்படியே இருக்கட்டும், ஆனால் வெளி நாடு வாழ் தமிழர்களின் குரலை மனிதாபிமானத்தின் பால் ஓங்கி ஒலிக்க விடுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

அவர்கள் போன்று, அவர் தலைமைக்காக கூக்குரலிடுவது போன்று அவர் எதிர்ப்புக் கோஷங்களை மட்டும் நீங்களும் முன் வைத்தால் இறுதி வரை உங்கள் கத்தலும் எடுபடப்போவதில்லை.

மாறாக, மனிதாபிமானத்தை வலியுறுத்தி, அந்த மக்களை வெளியேற்ற இந்த உலக சக்திகள் என்ன செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, இதன் மூலம் அந்த மக்களுக்கு ஆகக்குறைந்த அளவில் “உயிர் வாழும்” வாய்ப்பையாவது பெற்றுக்கொடுங்கள்.

புலி உணர்வாளர்களோ, இதற்கு எதிராக ” எம் மக்கள் எம் மண்ணில் தான் வாழ வேண்டும், சர்வதேசமே மக்களை வெளியேற்றாதே” என்று கூவினால் அது அவர்கள் தலைமைக்காக அவர்கள் போடும் ஒப்பாரி என்பதை உலகம் நன்கறியும்.

அவர்கள் இதைத்தான் செய்கிறார்கள் என்பதை நாம் வெளியில் அறிந்துகொண்டிருந்தாலும், அவர்கள் தவிர்ந்த மக்கள் அபிமானம் கொண்ட அதே இலங்கைத் தமிழர்கள் வெளியில் இருந்து குரல் கொடுக்கிறார்கள் என்கின்ற பிடி இருந்தால் அதைப்பற்றி ஐ.நாவும் மெல்லக் காரியத்தில் இறங்கும்.

அந்தக் குரல் கேட்கும் சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கமும் இப்போதிருப்பதை விட மேலும் மேலும் மக்கள் உயிர் மேல் அக்கறை செலுத்தி, ஆகக்குறைந்தது அவர்களை வெளியேற்ற வெளிநாட்டு உதவிகளுடன் மாற்று வழியையாவது செய்யும்.

வெளியில், தெருவில் இறங்கிப் போராடச் சென்றால் இன்று ஆலயங்கள் மீது திரும்பியிருக்கும் கல்லெறிப் போர் போன்று சொந்த இனம் வெள்ளைக்காரனின் தெருவில் கல்லெறிந்து கொள்ளும் நிலை வரும் என்கிற உண்மையையும் மறுப்பதற்கில்லை.

ஆனாலும், அந்த மனிதர்களுக்காக ஒரு சொட்டு இரக்கம் இருக்கும் ஒவ்வொருவரும் உங்களால் முடிந்ததை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

கிடைத்திருக்கும் வாய்ப்பு நாளை ஆறிப்போக முன் அவர்கள் பார்வைக்கு உங்கள் ஒற்றுமையும், மனிதாபிமானக் குரல்களும் சென்றடைய வேண்டும்.

சாத்தியமாகுமா? இல்லை இன்னொரு வாய்ப்பும் அறிக்கை அளவில் ராஜ தந்திரமாக விளையாடப்பட்டு இன்னும் சில நூறு உயிர்களையாவது பலி கொள்ளுமா என்பது நாளைய வரலாறு சொல்லும் வரை நிச்சயிக்கப்பட முடியாதது.

ஆனால், இன்னும் உங்கள் குரல்கள் சர்வதேசத்தின் முன் ஓங்கி ஒலிக்கவில்லை என்கிற உண்மையும் உறைந்துகொண்டிருக்கிறது!

 UN Security Council –http://www.reachingcriticalwill.org/resources/govcontacts/SCcontact.html

Sri Lankan President –http://www.priu.gov.lk/

Sri Lankan Prime Minister –http://www.pmoffice.gov.lk/09.htm

Ministry of DMHR –http://www.dmhr.gov.lk/english/contact.php?s=7

All Ministries –http://www.gov.lk/public/groups.asp?xi=91&groupname=Ministries+of+Sri+Lanka+Government

Karuna Amman – http://www.ammaan.net/

 

குறிச்சொற்கள்: , , , , , , ,

One response to “மீண்டும் ஒரு வாய்ப்பு ..

 1. Thambiah Sabarutnam

  மே16, 2009 at 2:15 முப

  சட்டலைட் தொலைபேசியூடாக பிணகணக்கு சொன்ன டாக்டர் ஷன்முகராஜா 58 ஆம் டிவிசன் இடம் சரண் அடைந்தது விட்டதாகவும்
  பேடி பிரபாகரன் கதை முடிந்ததாகவும் இங்கே சொல்கிறார்கள்.
  இரண்டு கேணல்களும் பிராந்திய தளபதிகளும் அரசபடைகளால் பிடிக்கப்பட்டதோடு புலிகளின் கப்பல்களின் உரிமையாளர், பாடகர் சாந்தன் உட்பட பலர் இராணுவத்திடம் பிடிபட்டதாகவும் பிரபாகரனின் கதையை ராஜபக்சே ஜோடானில் இருந்து திரும்பியவுடன் மக்களுக்கு அறிவிக்க இருப்பதாகவும் இங்குள்ள இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
  தம்பையா சபாரட்ணம்
  நாலாம் கட்டை
  அளம்பில் முல்லைத்தீவு

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: