RSS

செய்வதை திருந்தச் செய் ..

14 மே

இன்று விரக்தியின் உச்சத்துக்கே போய் விட்ட விடுதலைப்புலிகள் ஆதரவு நிலை, தறிகெட்டுத் தம் நிலையை மறந்து, தம்மையும் மடையர்களாக்கி, தம்மை நம்பும்,நம்பி வருபவர்களையும் மடையர்களாக்கிக்கொண்டிருக்கிறது.

நேற்றைய தினத்தில் “தேசியப் போராட்டத்திற்கு” அவர்கள் செய்த பங்கு ஆகக்குறைந்தது ஒரு ஆயிரம் பேரையாவது காறித் துப்ப வைத்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இணைய உலகில் இன்று பரப்புரைத் தேசியப் போராட்டம் செய்யும் விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு ஆகக்கூடியது இந்தப் போராட்டத்தின் வயதுதான் இருக்கும்.

இந்த வயதுக்கு அவர்களுக்குத் தெரிந்த போராட்ட வடுக்கள் எதுவாக இருக்கும் என்பதும் கற்பனைக்கு எட்டாத ஒன்றில்லை.

எனினும், வரம்பு மீறிய இவர்களின் செயற்பாடுகள் தான் இன்று அவர்கள் “தேசியத் தலைவரையே” நிலை குலைந்து 3 கி.மீற்றருக்குள் முடக்கி வைத்திருக்கிறது என்றும் கூறிக்கொள்லலாம்.

ஆளுக்கொரு இணையத்தை ஆரம்பித்து தமிழ் தேசிய ஆதரவை இவர்கள் காட்டியதும், ஆயிரம் பெயர்களில் ஒரே ஆள் இருந்து விசைப்பலகைப் போர் புரிவதுமாக இவர்கள் காட்டிக்கொண்டிருந்த பிலிமில் பொட்டம்மானும் சொக்கித்தான் போனாரோ என்னவோ? இவர்களை வளர்த்து விட்டார்கள்.

ஊடக தர்மங்களைக் கற்றார்களோ இல்லையோ எல்லோரும் ஊடகவியலாளர்கள் ஆனார்கள், கருமம் இந்தச் சமூகம் அதையும் தாங்கிக்கொண்டிருக்கிறது.

இந்தப் பெருமிதத்தில் நேற்றைய தினம் இந்த ஊடகக்காரர்களில் ஒருவருக்கு, தேர்தல் நேரத்தில் ஒரு பெரும் குழப்பத்தையும், மக்கள் மனதில் ஒரு பெரும் அலையையும், அனுதாபிகள் மட்டத்தில் பெரும் அனுதாபத்தையும் பெற்று தன் “”தேசியப்பணியை” ஆற்றும் ஆவல் மித மிஞ்சி வந்துவிட்டது.

உடனடியாக அறுவெறுக்கத்தக்க ஒரு மனிதக் கொடூரத்தைக் கண்டுபிடித்து அதை இலங்கை அரசின் தலையில் கட்டினார், செய்தி வெளியிட்டார், கதையைப் பரப்பினார்.

சரி, அதுவெல்லாம் அவர் திறமை என்று வைத்துக்கொள்வோமே.

இதைப் பார்ப்பவர்கள் எல்லோரும் முட்டாள்களாகவும், அவர் சொல்வதை எல்லாம் நம்பிக் கொண்டு முழக்கம் போடும் மந்தைகளாகவும் இருக்க வேண்டும், உணர்ச்சி மிகுதியால் கிளர்ந்தெழ வேண்டும் என்ற அவர் தலைமையின் அதே விடுதலைப் போர் சித்தார்ந்தத்தை இவரும் கையிலெடுத்ததானது, இனி வரும் பல காலத்திற்கும்,  இந்த எதிர்கால சந்ததியினரும் சரியான வழியில் செல்ல மாட்டார்களா என்று ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும், இன்றளவிலாவது வைத்திருக்கும்.

சரி, இப்போது அவர் என்ன செய்தார் என்று பார்ப்போம்.

பொலநறுவையில் மாபெரும் குளிரூட்டப்பட்ட பிரேத அறை: திடுக்கிடும் தகவல் – இது அவர் வைத்த தலைப்பு.

அடுத்ததாக,

 

 
பொலநறுவை மாவட்டம் குருநாகல் பகுதியில் மாபெரும் குளிரூட்டப்பட்ட பிரேத அறை ஒன்று இருப்பதாக நேரில் பார்த்த பாதிரியார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத் திடுக்கிடும் தகவலை தந்திருப்பது ஒரு கத்தோலிக்க பாதிரியார். பாதுகாப்புக் கருதி அவர் பெயர், விபரங்கள் எதனையும் நாம் பிரசுரிக்கவில்லை. இங்கு வவுனியா, புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சியில் கைதாகி காணமற்போகும் இளைஞர்களை கொண்று அவர்களின் உடல் உறுப்புக்களை (இருதயம், ஈரல், சிறுநீரகம் மற்றும் கண்கள்) என்பன எடுக்கப்பட்ட பின்னர் குளிரூட்டப்பட்ட செயற்கை சவச்சாலை அறைக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்த பாதிரியார், அவை பின்னர் மலையகம் செல்லும் பார ஊர்திகளில் ஏற்றப்படுவதாகவும், மலையக்த்தில் உள்ள சிங்கள கிராமங்களில் அவ் உடல்கள் புதைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.  

சிங்கள இராணுவ உயர் அதிகாரி ஒருவரின் பிள்ளைக்கு ஞானஸ்தானம் செய்யச் சென்ற பாதிரியார் அங்கு நின்ற வேளை அவ் உயர் அதிகாரியின் உறவினர் ஒருவர் பாம்புக்கடிக்கு உள்ளானதால் ஏற்பட்ட பரபரப்பில் உயர் அதிகாரி அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டதாகவும், அதனால் அயல் அட்டையில் நடந்த இக் கொடூரக் காட்சிகளை அவர் தற்செயலாக பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு தின்பண்டம் கொண்டுவந்த அதிகாரியின் சீருடையில் இரத்தக்கறை காணப்பட்டதையடுத்து, சந்தேகமடைந்த அவர் மறைந்திருந்து பலவிடயங்களை பார்த்ததாகவும் வாசலில் இருந்த உடலங்களை தமது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

என்று தனக்கு மட்டும் கிடைத்த இந்த “அதி ரகசிய” செய்தியையும் இணைத்து ஒரு மகா கொடூரமான படத்தையும் இணைத்திருந்தார்.

இதைப் பார்த்த ஈழத்தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் கொதித்தெழுந்து தம் உணர்வுகளைக் கொட்ட வேண்டும் என்ற ஒரே குறுகிய நோக்கம் தவிர, இந்தச் செய்தியில் உண்மை இருக்க வேண்டும் அல்லது ஆகக்குறைந்தது செய்யும் காரியத்தை உருப்படியாக செய்ய வேண்டும் என்றாவது இவர் சிந்திக்கவும் இல்லை, மக்கள் சிந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கவும் இல்லை.

ஆக மொத்தத்தில் தன் வளத்தையும்,தன் அறிவையும், தன் இனத்தின் பெயரால் அடகு வைத்து, தன்னையும் தன்னை நம்பி வருவோரையும் முட்டாளாக்கும் தன் தலைமைக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் முனைப்பில் முழு முட்டாளாக அவரே மாறிவிட்டார், அதையாவது புரிந்து கொண்டால் நல்லது.

முதலில் அவர் போட்ட செய்தியை விட, அவர் தரும் தகவல் அவருக்கிருக்கும் அறிவுப்பற்றாக்குறையைத்தான் காட்டுகிறது, திடீரென இரவு நேரத்தில் ஏதும் பழைய தமிழ்ப்படங்கள் பார்த்தாரோ தெரியவில்லை பாம்புக்கடி,வைத்தியம்,எதேச்சையான பார்வை, அதுவும் ஒரு இராணுவ அதிகாரியின் தோட்டத்தில் இப்படியான கொடூரம் என்று ரீல் விட்ட அந்தத் “தன்மானப் புலிக்கு” பொலநறுவை எங்கிருக்கிறது குருநாகல் எங்கே இருக்கிறது என்கிற அடிப்படை அறிவே இல்லாமல் போனது முதல் நகைப்பு.

அடுத்தது, அவரும் அந்தப் படத்தில் ஏதோ ஒரு இணையத்தில் இருந்துதான் சுட்டிருப்பார் என்ற அடிப்படையை வேறு யாரும் சிந்திக்க மாட்டார்கள் என்ற தான் தோன்றித்தனம், எனவே அந்தப் படத்தை அவர் எங்கிருந்து சுட்டார் என்று அவருக்கு முடிந்தால் யாராவது காட்டுங்கள் :

அதற்கான இணைப்பு –http://escapefromindia.wordpress.com/2008/04/17/shocking_images_from_india/

அதன் பின், அண்மையில் தமிழ்நெட் இப்படியான சில பழைய படங்களைப் போட்டு பிலிம் காட்டியபோது, பாதுகாப்பு அமைச்சின் இணையம் அந்தப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டன, எப்படி எடுக்கப்பட்டன என்று அக்கு வேறாக ஆணி வேராக வைத்தது போல இதையும் கண்டு பிடிப்பது சிரமம் இல்லை என்பது அவருக்கு மறந்து போனது இன்னொரு துரதிஷ்டம்.

சரி, அவரது விளையாட்டு வேடிக்கையை தூக்கி வீசிவிட்டு, இதன் பின் உருவாகும் தாக்கங்களைப் பார்த்தால்,இதுவரை இங்கு வலியுறுத்தப்பட்ட அதே மக்கள் தாக்கம் இங்கும் உருவாகிறது.

உங்களை நம்பியோர், பின் இது பொய் என அறிந்ததும் உங்களையும், உங்கள் தேசியத்தின் பிரச்சாரத்தையும் இனியும் நம்புவார்களா? அப்படித்தான் நம்பினாலும் இனிமேலும் உணர்ச்சிவசப்படுவார்களா? அப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டாலும் ஏதாவது காரியத்தில் இறங்குவார்களா?

செய்ய முடியாததைச் சாதிக்க வேண்டும் என்ற விரக்தியில் செய்வதைக் கூட உருப்படியாக செய்ய முடியாத உங்கள் போன்றவர்களின் கையில் தமிழ்த் தேசியம் சின்னாபின்னமாவதை அறிந்துகொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் உங்கள் தேசிய ஆதரவும் தேய்ந்துகொண்டே செல்கிறது என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.

மறுபக்கம், சொல்வதற்கு உங்களிடம் உண்மை இருந்தால், இவ்வாறான பொய்ப்பரப்புரைகளும் தேவையில்லையே?

 

குறிச்சொற்கள்: , , , , ,

7 responses to “செய்வதை திருந்தச் செய் ..

 1. பூனை

  மே14, 2009 at 1:19 பிப

  மிகவும் தேவையான பதிவு .எல்லோரும் முட்டாள்கள் என்பது புலிகள் நம்பிக்கை.

   
 2. தாமிரபரணி

  மே14, 2009 at 1:54 பிப

  //***உடனடியாக அறுவெறுக்கத்தக்க ஒரு மனிதக் கொடூரத்தைக் கண்டுபிடித்து அதை இலங்கை அரசின் தலையில் கட்டினார், செய்தி வெளியிட்டார்***//
  இலங்கை அரசின் தலையில் கட்டாமல் பாக்கிஸ்த்தான் தலையிலா கட்ட சொல்லுரிங்க அப்படி ஒரு மனிதக் கொடூரம் நடந்திருந்தா யாரு காரணமாயிருக்கம், இல்ல யாரு தலைல கட்டலாமுனு கொஞ்சம் சொல்லுரிங்களா
  //*** இதைப் பார்த்த ஈழத்தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் கொதித்தெழுந்து தம் உணர்வுகளைக் கொட்ட வேண்டும் என்ற ஒரே குறுகிய நோக்கம் **//
  ஒரு இனத்தை அழிக்கும் கொடுரத்தை இலங்கை அரசு செய்கிறது
  அதை ஒருவர் படம்பிடித்து காட்டுகிறார் என்றால் அவர் குறுகிய மனப்பான்மை உள்ளவரா? தன் மக்கள் படும் இன்னல்களை வெளியுலகிற்கு சொல்வதன் முலம் பல நாடுகள் ஒன்று சேர்ந்து இலங்கையில் நடக்கும் கொடுரத்தின் உண்மையை கண்டறிய உதவலாம் எதாவது ஒரு வகையில் தன் இனம் காக்கபடலாம் என்கின்ற நம்பிக்கைதான். ஒருவன் தண்ணிரில் மூழ்கி கொண்டிருக்கும் போது கரையில் ஒருவன் நின்றுகொண்டு காபற்றுங்கள் என்று கூச்சல்யிட்டால் நாம் இசைந்துகொடுக்க கூடாது, நாம் உணர்வுகளைக் கொட்ட கூடாது, அவனை காப்பாற்ற நாம் கொதித்தெழிக்க கூடாது அப்படிதானே சொல்லவர்றிங்க
  நான் தமிழன் என்பதால் விடுதலைபுலிகளுக்கு ஆதரவு தருகிறேன் என்று நினைத்து விடாதிர்கள் எந்த இனத்தின் நியாயமான விடுதலைக்காக பாடுபடும் அனைத்து இயக்கத்திற்கும் என் ஆதரவு உண்டு, விடுதலைபுலிகள் தமிழர் அல்லாமல் தெலுங்கரோ அல்லது கன்னடரோ இருந்தாலும் என் மனமார்ந்த ஆதரவு உண்டு, அடக்கு முறைக்கு அஞ்சாமல் போராடும் அனைவரும் போராளியே, இந்தியா அன்று அடக்கு முறைக்கு பயந்திருந்தால் நாம் சுதந்திரம் அடைந்திருக்க மாட்டோம், அன்றும் ஆங்கிலேயேன் செய்த கொடுமையை எங்கும் ஒலித்து பின்புதான் விடுதலை வேட்கை மளமளவென காட்டு தீ போல் பரவியது இப்ப இதையும் குறுகிய எண்ணம் எனபிர்களா.
  அங்கு நடக்கும் கொடுமைகளை பார்த்து நிங்கள் கொதித்தெழ வேண்டாம் உங்கள் உணர்வுகளைக் கொட்ட வேண்டாம்,
  அதுபோல் தயவுசெய்து அவர்களை தூற்றவும் வேண்டாம்

   
  • arivudan

   மே14, 2009 at 2:12 பிப

   தாமிரபரணி, இலங்கை அரசாங்கம் செய்தால்,அதை வெளியே கொண்டுவாருங்கள்,யார் வேண்டாம் என்பது? அதுதான் தலைப்பிலேயே செய்வதை திருந்தச் செய் என்று சொல்லியிருக்கிறோமே?

   நீங்கள் உணர்ச்சிவசப்படுவதற்காக பொய்யுரைத்து என்ன பயன்? இறுதியில் “சுய இன்பம்” கண்டதுதான் பயன், இந்தப் பொய்களை வைத்து தமிழை வாசிக்கும்,தமிழ் தெரிந்த மக்களுக்குப் படங்காட்டியதால் என்ன பயன்? இறுதியில் உண்மை என்று தெரிந்ததும் அவரவர் இனி வரும் செய்திகளும் உண்மைத் தன்மையையும் சந்தேகப்படப்போவதுதான் பயன்.

   இனத்தை இலங்கை அரசு அழிக்கிறது என்பதை அவர் படம் எடுத்து உண்மையாகக் காட்டியிருக்கலாமே என்பதுதான் தோழரே எங்கள் ஆதங்கமும்.

   கோழிக்கூண்டொன்றை நாலு பக்கமும் அடைத்து விட்டு,அந்தக் கூண்டுக்குள் நாமே ஒரு குண்டையும் தூக்கிப்போட்டு,ஐயோ என் கோழிகளை கொன்றுவிட்டான் என்று ஒப்பாரி வைப்பதில் என்ன பயன்? நம் கோழிகளைத் திறந்துவிட்டு அப்படித்தான் ஒரு எதிரி இருந்தால் அவனை நேருக்கு நேராக நாம் சந்திக்கலாமே? நன்றியுள்ள கோழிகள் நாளை நமக்கு ஆதரவாய் நாலு வார்த்தை கொக்கரித்தாவது பேசுமே?

   இல்லாததை இருக்கிறது என்று பரப்புரை செய்வதால் தான்,இருப்பதை எடுத்துச் சொல்லும் போது உலகம் நம்ப மறுக்கிறது.

    
 3. Parthiparasan

  மே14, 2009 at 10:43 பிப

  தம்பி இந்த உண்மை வெளிவர முதலே எனக்கும் மனுசிக்கும் பிரச்சனை தம்பி. நான் சொன்னனான் அப்படி ஒரு சங்கதியை பாதிரியார் பார்க்கிற அளவுக்கு விட ஆமி என்ன புலித்தமிழன் மாதிரி அடிமுட்டாளோ? இதிலை இருந்து தெரிகிறது இது பொய் நியூஷ் என்று சொல்ல, மனுசி என்னை நீ சிங்களவனுக்குப் பிறந்தனியோ துரோகி, என்று பேசிப்புட்டா! நான் சொல்லிப்புட்டன் கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வரும் பொறுத்திருந்துபார் எண்டு.

   
  • arivudan

   மே15, 2009 at 7:10 முப

   Parthiparasan, நீங்கள் நகைச்சுவையாக இதைக் கூறினாலும் கூட, இது மறுக்க முடியாத ஒரு உண்மை.
   புலிகள் சார்பாக நடத்தப்படும் இவ்வாறான விஷமப்பிரச்சாரங்கள் மக்களை உளவியல் ரீதியாக
   உணர்ச்சிவசப்படுத்தும் நோக்கத்திலேயே நடைபெறுகின்றன.

   அதே விடயங்கள் பொய் என அறிந்துகொண்டதும்,மக்கள் அடையும் உளைச்சலை இவர்கள் கருத்திற்கொள்ளப்
   போவதில்லை, இலங்கை அரசிடம் இருக்கும் பலவீனத்தைப் பாவித்து இந்த “உணர்ச்சியூட்டல்” நாடகத்தை புலி ஆதரவாளர்கள் பல காலமாக நடத்தி வருகிறார்கள்.

    
 4. Muhammad Ismail .H, PHD,

  மே15, 2009 at 9:01 பிப

  @ அன்பின் அறிவுடன்,

  வாவ், வெகுகாலத்திற்கு பிறகு இது போன்ற ஒரு நேரிய நெத்தியடியான பதிவைப் பார்க்கின்றேன். உங்களின் இந்த பதிவிற்கு எனது ஆதரவும், வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு. இவ்வாறு உணர்ச்சியூட்டலுக்கு ஆங்கிலத்தில் Cyber Bullying எனப்படும். இந்த கீழுள்ள சுட்டியை சொடுக்கினால் கூகுளில் கிட்டதட்ட பத்துபக்கத்திற்கு இது போன்ற குப்பை தகவல்கள் இருப்பதாக காட்டுகிறது. என்ன கொடுமை இது. இல்லாத விஷயத்தைப்பற்றி 10 பக்கத்திற்கு தகவல்கள்.

  http://www.google.co.in/search?hl=en&q=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%3A+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D&btnG=Google+Search&meta=&aq=f&oq=

  அத்தனையும் நீங்கள் கூறியபடி ஆயிரம் பெயர்களில் ஒரே ஆள் இருந்து விசைப்பலகைப் போர் புரிவது தான். இவர்கள் எல்லாம் ‘மேல்மாடி’ இல்லாத மேசை செய்தியாளர்கள் தான். இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் Ctl+c & Ctl+v தான். இதற்கு நானும் ஒருமுறை பலிகடாவாக்கப்பட்டேன். அது இங்கே .. http://gnuismail.blogspot.com/2008/10/blog-post.html . உண்மையில் நாங்கள் ஆழிப்பேரலையை கண்காணித்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் இந்த இணையப்புடுக்குகளின் அவசரகுடுக்கை தகவலைப்படித்து, அவசரப்பட்டு நன்கு பட்டபிறகு தான் தெரிந்தது நான் மாயக்கண்ணாடிகள் பொருத்தப்பட்ட அறையில் சிக்க வைக்கப்பட்டேன் என. அதில் இருந்து மீண்டு வெளிவருவது எனக்கு பெரும்பாடாக ஆகிவிட்டது. ஆதலால் தான் இந்த Cyber Bullying செய்பவர்களை எங்கு கண்டாலும் அடித்து துரத்துவதே என் வேலையாக ஆகிவிட்டது. இவர்களால் இணையத்தில் குப்பைகளும் , இரைச்சலும் அதிகமாகி விட்டது. உண்மையை தேடி நாம் வெகுதூரம் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை நமக்கு உருவாக்கிவிட்டனர். இது போல் Cyber Bullying செய்பவர்களால் மற்றவருக்கு எந்த அளவிற்கு மன உளைச்சல் ஏற்படுகின்றது எனபதை இவர்கள் அறியவில்லை.

  இதற்கு பிறகு இவர்கள் கொடுக்கும் எந்த தகவலையும் யாரும் நம்ப போவதில்லை. இந்த செயல் அவர்களுக்கே தீங்கானதாக ஆகிவிடும். எனவே இறுதியாக நான் கூறுவது ‘திருடனாய் பார்த்து திருந்தவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்பதைத்தான். நன்றி வணக்கம்.

  with care & love,

  Muhammad Ismail .H, PHD,
  http://www.gnuismail.blogspot.com

   
  • arivudan

   மே15, 2009 at 9:16 பிப

   Muhammad Ismail, தங்கள் கருத்தின் ஆழத்தை பலர் புரியாமலே விடக்கூடும். உண்மையில் நீங்கள் சுட்டிக்காட்டிய இந்த Cyber Bullying ஒரு சமூக வியாதியாக வளர்ச்சி பெற்றுள்ளதன் விளைச்சல் தான் இன்று நாம் அனுபவிப்பது.

   இதன் உண்மையான விளைவுகளைப்பற்றி, இதை செய்பவர்கள் சிந்திப்பதே இல்லை,தற்காலிகப் பெருமிதம்,”உணர்ச்சியூட்டல்” இவ்வளவுதான் அவர்கள் நோக்கம்.

   இது அவர்கள் சார்ந்த அதே விடயத்திற்குக் கொண்டு வரும் மறைமுகமான உளவியல் தாக்கத்தையோ அல்லது நீங்கள் குறிப்பிட்டது போன்று மற்றவர் மன உளைச்சலைப்பற்றியோ இவர்களுக்குக் கவலையென்பதே கிடையாது.

    

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: