RSS

மஹிந்தவை மடக்கி ..

09 மே

அசகாயசூரன் ஜெயவர்தனவைப் பார்த்தார்கள், ஆளுயர அழிவுத்திட்டங்கள் வைத்திருந்த அத்துலத் முதலியைப் பார்த்தார்கள்,வில்லாதி வில்லன் பிரேமதாசாவைப் பார்த்தார்கள், உலகப்புகழ் பெற்ற சந்திரிக்காவைப் பார்த்தார்கள், ஜென்டில்மேன் அரசியல் கனவோடு வந்த ரணிலைப் பார்த்தார்கள், இத்தனையும் பார்த்த எமகாதக புலிகள் இந்த மஹிந்தவை மட்டும் மடக்கிப்பிடிக்கத் தவறி விட்டார்களே !?

விடுதலைப் புலிகளின் புண்ணியத்தில் “ரியல்” சினிமா கண்டுகளித்துக்கொண்டிருந்த கடை நிலை ஆதரவாளன் ஒரு ஊர்வல இறுதியில் இப்படி அங்கலாய்த்துக்கொண்டிருந்தான்.

இப்படி நான் கூறுவதால் வெளிநாடு வாழும் தமிழர்களிடையே சிங்கள அடக்குமுறைக்கு எதிராகவும், மக்கள் உரிமைக்காகவும் திரண்டெழுந்து, சுய நிர்ணய உரிமையை வென்றெடுக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்குமே இல்லை என்று அர்த்தம் கற்பிப்பதற்காக வன்று, உண்மையான உணர்வாளர்கள்,பற்றாளர்களின் சாதாரண உள்ளப் போராட்டம் கூட மழுங்ககடிக்கப்பட்டு ஒரு மாய நிலைக்குள் தள்ளப்பட்டுவிட்டது என்பதுதான்.

எவ்வாறு

இது எவ்வாறு இடம்பெற்றது என்பதுதான் நம் வரலாறு.

கால காலமாக புலிகளி்ன் கட்டாய வலைக்குள் பத்திரமாக வீழ்த்தப்பட்ட ஒரு “மந்தை” நிலையில் இந்த சமுதாயம் வாழப் பழகிக்கொண்டதும், வாழ நிர்ப்பந்திக்கப்பட்டதுமான இரண்டு நிலைகள் இதில் முக்கியம் பெறும்.

போராட்டத்தை புலியால் மட்டுமே முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற மாய வலை விரிக்கப்பட்டதும், விரும்பியோ விரும்பாமலோ உரிமை வெறியின் ஆழம் காரணமாக புலி மேலும் நம்பிக்கை வைக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஈழத் தமிழர்களுக்கு கட்டாயப்படுத்தப்பட்டே இருந்தது.

இருந்தாலும், வரலாற்றை சரிவரப் புரட்டிப் பார்க்கும் போது இந்த உரிமைப் போராட்டத்தை புலிகளின் கையில் “ஏக” மாக அவர்கள் திணித்துக்கொண்டதன் பின்னணியில் தான் அடங்கலும், இன்றைய புலம்பலும் கசப்பான உண்மையாக வெளி வந்து கொண்டிருக்கிறது.

பிராந்தியத்தில் இன்னொரு சக்தி, அதுவும் இந்திய நலனையும் அதன் ஒற்றுமையையும் பாதிக்கும் சக்தியொன்றை, அல்லது எதிர்கால வன்முறைகளைத் தூண்டக்கூடிய வரலாறொன்றை தெற்காசியாவில் பதிய விடுவதற்கு இந்தியா ஒரு போதும் விரும்பப் போவதில்லை என்பது உலகறிந்த விடயம்.

ஆனாலும், விடுதலைப் புலிகள் முதல் அத்தனை போராளி இயக்கங்களையும் இந்தியா தத்தெடுத்து,தட்டிக்கொடுத்து வளர்த்தும் விட்டது என்ற வெளிப்படையான உண்மையை,தூய்மையான மனதுடன் நோக்கும் போது, அது இந்தியாவின் சுய நலன் தொடர்பான இராஜதந்திரம் என்பதை இப்போது ஒவ்வொரு இலங்கை வாழ் தமிழனும் உணர்ந்துகொள்கிறான்.

ஆனால், அப்போது இதை மக்கள் உணரவும் இல்லை, மக்களுக்கு உணர்வதற்கு இடமளிக்கப்படவும் இல்லை.

இதை முழுக்க முழுக்க அறிந்து வைத்திருந்த இயக்கம் “புலிகள்” இயக்கம் என்று சொல்வதை இப்போதும் நீங்கள் மறுதலிப்பதானால் “ஆயிரமாயிரம் பிரபாகரன் வந்தாலும் நீங்கள் திருந்தப் போவதில்லை”.

விடுதலைப் புலிகள் மாத்திரமல்ல, அனைத்து போராளி இயக்கங்களும் இதை உணர்ந்திருக்கத்தான் செய்தன.

ஜனநாயக பாதையில் ஐக்கிய இலங்கைக்குள் தமது உரிமைகளை வென்றெடுப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டிருக்காவிட்டால் எதிர்காலத்தில் அடிப்படை உரிமைகளுக்காகக் கூட ஒபாரா போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினிகளிடம் சென்று ஒப்பாரி வைக்கும் நிலை வரும் எனும் தீர்க்க தரிசனம் இல்லாமல் “போராட்டம்” நடத்தியிருக்க முடியாது.

இந்தப் போராட்டம் ஒரு மக்கள் போராட்டம் என்று உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனிடமும் ஆவல் இருக்கிறது, ஆனால் முழு உலகமுமே சேர்ந்து விடுதலைப் புலிகள் இல்லாத தீர்வுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறது.

இதன் உள் அர்த்தத்தை இன்னும் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும், கடை நிலை ஆதரவாளனும் புரிந்து கொள்ள மறுப்பதும், ஏற்றுக்கொள்ள மறுப்பதுமான கசப்பான உண்மை எது வென்றால், முரண்பாட்டு மூட்டைகளுடன் கூடிய விடுதலைப் புலிகள் எனும் உட்கட்டமைப்பாகும்.

சித்தார்ந்தம்

மக்கள் நலன் சார்ந்த போராட்ட சித்தார்ந்தம் அரசியல் தெளிவு இல்லாமல் முன்னெடுக்கப் பட முடியாத ஒன்று என்பது வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருக்காதவர்கள், கியுபாவின் வரலாற்றையாவது ஒரு முறை படித்துப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

கால காலமாக வீரக் கதைகளைக் கேட்டும்,சொல்லிக் கொடுத்தும் வளர்ந்து வரும் நம் சமுதாயம், உணர்ச்சிகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை “உண்மைகளுக்கு” கொடுப்பதில்லை.

ஜனநாயக நீரோடையிலிருந்தே உரிமைப்போராட்டத்தின் திசையை வலுப்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் சென்று கொண்டிருந்த தமிழர் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்த அனைத்து இயக்கங்களையும் ஓரங்கட்டிவிட்டு ஆயுதங்கள் மீது மட்டும் நம்பிக்கை வைத்திருந்த பிரபாகரனின் சித்தார்ந்தம் மேலோங்கி வளர்ந்த அந்த கால கட்டத்தை பின் நோக்கிப் பார்க்கும் போது, விடுதலைப் புலிகளுக்குள் அவிழ்க்கப்படாமல் இருந்த சில முரண்பாட்டு மூட்டைகள் கனத்துக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.

அன்று புலிகள் தேர்ந்தெடுத்த பாதையைத் தானா தொடர்ந்தும் பின் பற்றினார்கள் என்பதிலிருந்து அந்த முரண்பாடு ஆரம்பிக்கிறது.

ஜெயவர்தனா அரசாங்கம் இந்திய அரசின் முட்டுக்கட்டைகளுக்குப் பணிந்திருந்த காலத்தி விடுதலைப் போராட்டத்திற்கான அனைத்து வளங்களையும் இந்தியாவே வழங்கிக் கொண்டிருந்தது.

அதன் பிறகு வந்த பிரேமதாசாவிலிருந்தே விடுதலைப் புலிகளின் முரண்பாட்டு மூட்டைகள் அதிக படியாக கனக்க ஆரம்பிக்கிறது.

அதற்கான முதல் அத்திவாரம் “இந்திய அமைதிப் படை” யை அகற்றும் பணியில் வடக்கும்,தெற்கும் இணைந்து கொண்டதாகும்.

இந்தக் கை கோர்ப்பு புலிகளுக்கு பல வகையில் இலாபமாக அமைந்திருந்தாலும், அதில் பிரதானமானது, அவர்கள் பாஷையில் “களையெடுப்பு” ஆகும்.

அதனைத் தொடர்ந்து வந்த பிரேமதாசா யுகம் தென்னிலங்கையையும் வட இலங்கையையும் கிட்டத்தட்ட இரு வேறு தேசங்கள் போன்று சிங்கள மக்களின் மனதில் இருந்து முற்று முழுதாக இந்த உள் நாட்டுப் பிரச்சினையை மறைக்க எடுத்த பிரயத்தனம், அன்றைய நாட்களில் இருந்த பிரேமதாசாவின் “ஊடக பிரசன்னம்” நன்றாக விளக்கும்.

எதைத்தொட்டாலும் பிரேமதாசா வரும் அதே வேளை, தென்னிலங்கையை அது வரை நாடு கண்டிராத நல்ல பல அபிவிருத்தித் திட்டங்கள் நோக்கியும் கொண்டு சென்று “2000த்தில் யாவருக்கும் புகலிடம்” திட்டத்தை அன்றே ஐ.நா. வில் முழங்கி உலகின் முழுக்கவனத்தையும் வேறு திசையில் வைத்திருந்த வில்லாதி வில்லன் தான் பிரேமதாசா.

கிராமத்திற்குக் கிராமம், குடியேற்றத்திட்டங்கள்,மாதிரிக்கிராமங்கள் என்று அவர் காட்டிச் சென்ற அந்த அபிவிருத்தி வழியில், இருந்திருந்து வரும் யுத்த செய்திகளை மறக்கடிக்கவும், அப்படித்தான் யுத்த செய்தியில் ஆர்வம் காட்டி தலையை அடித்துக்கொள்பவர்களுக்காக “லங்கா புவத்” அன்றைய நாளில் செய்த அபார சேவையையும் கொஞ்சம் ஞாபகம் படுத்திப் பாருங்கள்.

இதற்கு எதிர் மாறாக, “லங்கா புவத்” எந்த அளவு திரித்துக் கூறுகிறது என்கிற உண்மையை வெளியுலகுக்குக் கொண்டு வந்த பிபிசி தமிழோசையும், புலிகளின் குரலும் வடக்கு வாழ் மக்களை அல்லது அவர்கள் சார்ந்த தெற்கு வாழ் மக்களையும் சம காலத்தில் வெவ் வேறு வகையில் சிங்கள செய்தி ஊடகங்களை துகிலுரித்துக்கொண்டிருந்தன.

இன்றளவும் கூட “லங்காபுவத்” செய்திக்கு அத்தனை மரியாதை உண்டு.

சிங்கள ஊடகங்கள் பொய்யுரைக்கின்றன,புலிகளின் ஊடகங்கள் மெய்யுரைக்கின்றன என்கிற நிரந்தர மாயை உருவாக்கப்பட்ட அதே காலகட்டத்தில் தாம் மிகவும் நேர்மையானவர்கள் என்கிற மாயையும் உருவாக்க இவர்கள் தவறவில்லை.

 

ஆங்காங்கே தாக்குதலில் மரணத்தைத் தழுவிக்கொள்ளும் போராளிகள் விபரங்களை ஒளிவு மறைவின்றி பிரசுரித்து அதன் மூலமும்,தம் நிலையை நியாயவாதிகளாக மக்களுக்கு காட்டிக்கொண்டதன் மறுபக்கத்தை சாதாரண மக்கள் சிந்தித்துப் பார்க்கும் நேரம் கூட இருக்கவில்லை.

ஆனாலும் புலிகள்,இதைப் பயன்படுத்தி தமது அரசியல் சித்துக்களை பரீட்சித்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

போராடிக் களைத்துப் போனதாலோ என்னவோ இப்போது வேறு விதத்தில் சிங்கள அரசாங்கங்களைக் கையாள நினைத்த புலிகள் பல ராஜதந்திர நகர்வுகளை திரைமறைவில் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள்.

“மோட்டுச் சிங்களவன்” எனும் அடைமொழியுடன் அவர்களும் இருந்ததால்,புலிகளின் குரலே தமிழ் மக்கள் மத்தியில் எப்போதும் எடுபட்டுக்கொண்டிருந்தது.

இலங்கைத் தீவில் எந்த அரசாங்கம் வந்தாலும்,அந்த அரசாங்கங்கள் இனப் பிரச்சினையை தீர்ப்பதை விட அந்த இனப்பிரச்சினையை மையமாகக் கொண்டு அரசியல் காய் நகர்த்தலை மேற்கொள்வதையே பிரதானமாக நோக்கமாகக் கொண்டிருந்தன.

வேறு ஒரு அரசியல் அத்தியாயத்தை 1977 க்குப் பின்னர் இலங்கை அரசியல் வாதிகள் முற்றாக மறந்தே போய்விட்டார்கள் என்று கூறினால் கூட மிகையாகாது.

போரை ஆரம்பிப்பது போன்று ஆரம்பிப்பது,ஒரு கட்டம் வரை முன்னேறிச் செல்வது,ஒரு இடத்தில் நிறுத்தி வைத்துக்கொண்டு புலியை விரட்டினோம் இன்னும் விரட்டுவோம் என்று மக்களின் வாக்கைக் கொள்ளையடிப்பது,பின்னர் சமாதானம் பேசுகிறோம் என்று கூறிக்கொண்டு காலத்தை இழுத்தடிப்பது என்று மஹிந்தவின் அரசாங்கம் வரை அத்தனை அரசுகளும் இதைத்தான் செய்தன.

இந்த நடைமுறை அரசியலை நன்றாகப் புரிந்துவைத்திருந்த புலிகளின் தலைமையும்,”பின்வாங்கல்”,”முறியடிப்பு” என்று புதுப்புது அல்வாக்களை அள்ளி விட்டுக்கொண்டே இருப்பார்கள்.

அதையே நம்பி புலம் பெயர்ந்த தமிழர்கள் சந்தோஷக்கடலில் மிதந்து கொண்டிருக்க,புலிகளின் வங்கிக்கணக்குகள் ஏடாகூடமாக நிரம்பவும் செய்தது.

இந்தப் புதிய பரிமாணம் புலிகளின் தலைமையின் போராட்டைப் போக்கை நிச்சயமாக மாற்றியது என்று பிரபாகரனே தொலைக்காட்சியில் தோன்றி சாட்சி சொன்னாலும் புலிகளின் ஆதரவாளர்கள் நம்பப் போவதில்லை,எனவே இதுபற்றி புலிகளுக்கும் எந்தக் கவலையும் இல்லை.

தம்மை நம்பிய போராளிகளின் மனோபலத்தையும் ஆயுதபலத்தின் மீதான நம்பிக்கையாக மெல்ல மெல்ல மாற்றிய புலித்தலைமை உண்மையான போராட்டக் குணத்தை தானாகவே அழிக் ஆரம்பித்திருந்த சரியான தருணத்தில்,ரணில்-பிரபா உடன்படிக்கையும் வந்து தொலைக்க, அதன் புண்ணியத்தில் புகுந்து விளையாடிய “வினைச்சக்திகள்”கருணா எனும் புலிகளின் ஒரு பகுதியை கண் சிமிட்டும் நேரத்தில் உடைத்தெறிந்து விட்ட வரலாறை அனைவரும் அறிவோம்.

போராட்ட சித்தார்ந்தம் மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பதை உண்மையாக உணர்ந்தவர்கள் பிரபாகரனும் பொட்டம்மானுமே.

சாதாரண போராளிகள் இன்னும் தம் ஈழக்கனவோடு கையில் ஏந்திய ஆயுதங்களை தினம் தினம் துடைத்தெடுத்து தயாராகவே காத்திருக்க, தாம் தற்போது மாறியிருக்கும் “விடுதலைப் போராட்ட நிலைப்பாட்டுக்கு” புலிகள் இறுதி வரை செய்த ஒரே சேவை பொட்டம்மானின் புலனாய்வுத்துறையை உருப்படியாக இயங்க வைத்தது மட்டுமே.

அதன் புண்ணியத்தில் கோத்தபாயவும்,சரத் பொன்சேகாவும் இரண்டு அப்பாவி உயிர்களின் உயிர் ஆயுதம் கொண்டு தடவிப் பார்க்கப் பட்டார்கள்.

மஹிந்தவைப் பயமுறுத்துவதா,அவர்களோடு ஒரு அன்டர்கிரவுண்டு உடன்படிக்கை செய்துகொள்வதா,இல்லை தளர்ந்து போன யுத்த சிந்தனைகளை தூசுதட்டி எடுப்பதா என்ற பல் முனைப் போராட்டத்தில் இது வரை இலங்கையில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் சீண்டப்பட்டு ஒரு முடிவுக்கு வரும் நிலையை உருவாக்கிய புலிகள் மாவிலாறில் மஹிந்தவையும் சீண்டிப்பார்த்தார்கள்.

சர்வதேச சமூகம் இருக்கிறது,சமாதான உடன்படிக்கை இருக்கிறது,நோர்வே இருக்கிறது,யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு இருக்கிறது மாவிலாறில் சின்னதாக சீண்டிப்பார்க்கலாம் என்று முடிவெடுத்த பிரபாகரனின் அந்த “இறுதி” புத்திசாலித்தனம் மஹிந்தவின் உண்மையான சுயரூபத்தைக் காட்டுவதற்கு இவர்களாவே அவர்களுக்கு வலிந்து கொடுத்த சந்தர்ப்பமாக அமைந்தது.

மாவிலாறில் நிற்பான்,மன்னாரில் நிற்பான்,பூநேரியில் நிற்பான்,சரி பரவாயில்லை கிளிநொச்சியிலாவது நிற்பான் என்று காத்திருந்த  புலிகள் ஆகக்குறைந்தது புதுமாத்தளனிலாவது நிற்பான் என்று பார்த்தால் இன்று பிரபாகரனின் கச்சையை உருவாமல் நிற்பதில்லை என்று மஹிந்தவின் அரசாங்கம் இருப்பதைக் கண்டு செய்வதறியாமல் திகைத்துக்கொண்டிருக்கிறது. 

தமக்கே உரிய பாணியில் ஆயிரக்கணக்கில் மக்களை மனித கேடயங்களாக வைத்துக்கொண்டு,கற்காலத்தில் இருந்து இவர்கள் போடும் ஒவ்வொரு திட்டத்தையும் நவீன யுகத்தை நாளை முடிவு செய்யப்போகும் எதிர்கால உலக சக்திகளின் உதவியோடு இலங்கை அரசாங்கம் அழித்தொழித்து வருகிறது.

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி எனும் அளவில் பொட்டம்மான் செய்த மாவிலாற்றுச் சாதனை இன்று இரட்டைவாய்க்கால் பகுதியை தாண்டித் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும்,உண்மையோ பொய்யோ,இருந்ததோ இல்லையோ இந்த மாவிலாற்று சண்டித்தனம் வரைக்கும் உலக மேடைகளில் சம அந்தஸ்துடன் தான் இவர்களும் இருந்தார்கள்,இன்று இத்தனை தூரம் அழிவை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற சாதாரண வாத விவாதங்களுகு்கு அப்பால்,பல மனித நேய உண்மைகள் இன்னும் மறைக்கப்பட்ட நிலையிலும்,மறக்கப்படுகின்ற,தோண்டிப் புதைக்கப்படுகின்ற நிலையிலும் உறங்கிக்கொண்டிருக்கின்றன.

மஹிந்தவை மடக்கிப் பிடிக்க முனைந்து,அடக்கிப் பணிய வைக்கவும் முயன்று,தன் இருப்பையே தொலைத்து நிற்கும் புலித்தலைமை விரும்பியோ விரும்பாமலோ தம் ஆதரவாளர்களுக்கு ஒரு முக்கிய உண்மையை எடுத்துரைக்க வேண்டும்.

அதுதான்,இதுவரை இலங்கையில் இருந்த நிலையற்ற அரசியல் போக்கும்,திடமான கொள்கையற்ற அரசியல் தலைமையும் தான் புலிகளின் 30 வருட கால வரலாற்றுக்குக் காரணம்.

இன்று போல் ஒரு திடமான தலைமை அன்றிருந்திருந்தால் புலி எப்போதோ அழிந்து போயிருக்கும்,அல்லது அன்று போல் திடமான போராட்ட சித்தார்ந்தம் புலிகளிடம் இருந்திருந்தால் தனி ஈழம் எப்போதோ கிடைத்திருக்கும்.இப்போதும் ஒன்றும் குறையவில்லை மக்கள் உண்மை நிலை அறிந்து ஒன்றிணைந்து தமக்காகத் தாமே போராட வீறு கொண்டு எழுந்தால் நமக்குத் தேவையான உரிமையை நாமே வென்றெடுக்கலாம்.

புலிகளை ஒதுங்கச் சொன்னால் ஒதுங்க மாட்டார்கள்,ஆகக் குறைந்தது மரியாதையுடன் இளைப்பாறும்படியாவது கேட்டுக்கொண்டு மக்கள் தம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லத் துணிவது மட்டுமே இனி வரும் நம் வரலாற்றை செதுக்கத் துணை நிற்கும்.

 

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

9 responses to “மஹிந்தவை மடக்கி ..

 1. பாரதி.சு

  மே13, 2009 at 1:12 முப

  வணக்கம் சார்!!
  நீங்களுமா??
  ஏன் சார் தீவிரபுலியெதிர்ப்பு அல்லது தீவிரபுலியாதரவு கூட்டங்களில் ஒன்றாகவே நீங்களும் உங்களை அடையாளப்படுத்துகிறீர்கள்…
  உ+ம்:= Links.தேனீ
  Athirady
  Ilakkiya

  இதுகளில் எல்லாம் உங்கள் கட்டுரை வெளியானால் உங்கள் கட்டுரையை “ஒருமாதிரி” கூட்டம் தான் சார் படிக்கும்..அப்புறம் எப்படி சார் உங்கள் கட்டுரையை பரிந்துரைப்பது…..
  பேரினவாத கொடுமைகளையும் உங்கள் பார்வையில் தாருங்கள்…

   
  • arivudan

   மே13, 2009 at 7:16 முப

   பாரதி.சு, உங்கள் கருத்துக்கு நன்றி, முதற்கண் எமது பதிவுகளை முழுமையாகப் படித்தால் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்வீர்கள்.

   அடுத்ததாக தேனீ,அதிரடி,இலக்கியா போன்று இன்னும் எத்தனையோ இணையங்களை நடத்துவதும் அதே ஈழத்தமிழர்களே, இப்படியே ஆளுக்காள் சாயம் பூசிக்கொண்டிருந்தால் எப்போது எல்லோரும் ஒன்றிணைவது.

   மாறுபட்ட கருத்துள்ள பலர் ஒன்றிணைந்தால் தான் அங்கே நியாயம் பிறக்கும், அத்தோடு புலி ஆதரவு இணையங்கள் புலி ஆதரவு விடயங்களை மட்டும் தான் பிரசுரிக்கிறார்கள், நீங்கள் கேட்ட இந்த இணையங்கள் புலி எதிர்ப்போடு மாத்திரம் நின்று விடாமல் எங்கள் கருத்துக்களையும் வெளியிடுகிறார்கள் அல்லவா? இதே போன்று புலி ஆதரவு இணையங்களும் மக்கள் நலனையும் கருத்திற்கொள்ளத் தயாராகி எம் கருத்துக்களுக்கும் இடம் கொடுக்கும் நிலை உருவாக வேண்டும் என்பதே அவா.

   யாருடைய இணைப்பையும் இங்கே இணைப்பதில் எமக்கு எந்த ஆட்சேபைனையும் இல்லை, எமது கருத்துக்களுக்கு மதிப்பளித்துக்கொண்டிருக்கும் தற்போதைய இணையங்கள் இவை,அவர்களும் எமது கட்டுரைகளைப் பிரசுரிக்கிறார்கள்.

   அவற்றைவிட, இன்றைய இணைய உலகில் நாம் தான் புதியவர்கள், நீங்கள் கூறும் புலி ஆதரவு, புலி எதிர்ப்பு இணையங்கள் அத்தனையும் பொதுவாக எமக்கு முன்னால் பல காலம் இணைய இருப்பைக் கொண்டவர்கள்,எனவே இதை இப்படி வகைப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

   எமது கருத்துக்களை உள் வாங்க ஆரம்பித்திருக்கும் இணையங்களின் இணைப்பையே இங்கும் இணைக்க ஆரம்பித்திருக்கிறோம், நாளடைவில் மாற்றங்கள் வந்தால் உங்கள் ஆதங்கம் யாருக்குமே வராது என்று நம்பிக்கொள்வோம்.

    
 2. பாரதி.சு

  மே13, 2009 at 1:56 பிப

  வணக்கம்!!
  பதில் கருத்துக்கு நன்றி. நான் நுனிப்புல் மேய்ந்துவிட்டு வெறுமனே வாந்தியெடுக்கும் ஜாதியல்ல…உங்கள் பதிவுகளினை முழுமையாகவே உள்வாங்கியுள்ளேன்…அதில் இருக்கும் நியாயமான கேள்விகளே என்னை தொடர்ந்தும் இந்த பக்கங்களுக்கு அழைத்து வந்தன..

  //அடுத்ததாக தேனீ,அதிரடி,இலக்கியா போன்று இன்னும் எத்தனையோ இணையங்களை நடத்துவதும் அதே ஈழத்தமிழர்களே, இப்படியே ஆளுக்காள் சாயம் பூசிக்கொண்டிருந்தால் எப்போது எல்லோரும் ஒன்றிணைவது.//

  அப்ப தமிழ்நெட், புதினம் நடாத்துவது மட்டும் எந்தத் தமிழன் சார்??? நீங்களும் சாயம் பூசிக் கொண்டுதானே இருக்கிறீர்கள்.

  //அத்தோடு புலி ஆதரவு இணையங்கள் புலி ஆதரவு விடயங்களை மட்டும் தான் பிரசுரிக்கிறார்கள், நீங்கள் கேட்ட இந்த இணையங்கள் புலி எதிர்ப்போடு மாத்திரம் நின்று விடாமல் எங்கள் கருத்துக்களையும் வெளியிடுகிறார்கள் அல்லவா? //

  உங்கள் கருத்துக்களை வெளியிடும் இணையங்கள் புலியெதிர்ப்பு உங்கள் கட்டுரையில் ( தவறென்று நான் சொல்லவில்லை) பொதிந்திருப்பதால் மட்டுமே வெளியிடுகின்றன…நீங்களும் அரசுடன் இணைந்திருந்து கும்மியடிப்பவர்களை மறந்தும் ஆணித்தரமாக பெயர் குறிப்பிட்டு சாடுவதில்லை. அந்த “வியாதிக்காரர்களை” நீங்கள் குறிப்பிட்டு எதிர்த்தால் இந்த இணையங்கள் உங்கள் கட்டுரைகளை குப்பையில் போட்டுவிடும்.
  அங்கு கட்டுரையின் பிரசுரிப்பு தரம்…புலியெதிர்ப்பு வாதம் மட்டுமே…நீங்கள் எப்படியும் எழுதலாம் ஆனால் எங்காவது புலியெதிர்ப்பு இருந்தால் மட்டும் பிரசுரிப்பார்கள்.
  அத்துடன் அவற்றின் ஏனைய கட்டுரைகள் சிங்கள அரச கொடுமைகளை வீரியமாக எதிர்ப்பதுமில்லை. ஏதோ அவர்கள் பிறவிக்கடன் புலியெதிர்ப்பு மாதிரியே நடந்து வந்துள்ளார்கள்.

  வெளியே வந்து சுயாதீனமாக இயங்குங்கள்.
  உ+ம்:=தமிழ்மனம், தமிலிஷ்.

  புரிந்துகொள்ளுங்கள்…எப்படியோ புலியெதிர்ப்புவாதிகளிடம் உங்கள் கருத்தை கொண்டு சேர்த்துள்ளீர்கள்…இப்போது நீங்கள் செய்யவேண்டியது “வெத்துவேட்டு அரசியல் வியாதிக்காரர்களை” பட்டவர்த்தனமாக விமர்சிப்பது….அப்போது தான் உங்கள் சாயமும் விலகும்..

  யார் நல்லது செய்தாலும் பாராட்டுங்கள்…தவறென்றால் தயங்காமல் விமர்சியுங்கள்…இதுவே எழுத்து தர்மம்.
  அதைவிடுத்து எப்போதுமே ஒருதரப்பு மீது சேறடித்தால்…உங்களினை அவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பீர்கள்??

  இல்லை ….என்ன ஆனாலும் பரவாயில்லை…புலியளை எதிர்ப்பது மட்டுமே உங்கள் கொள்கை என்றால் ….GO AHEAD.

  நன்றி

   
  • arivudan

   மே13, 2009 at 2:39 பிப

   பாரதி, அந்தக் கேள்விக்கே இடம் வேண்டாம், இங்கே புலியெதிர்ப்பு மட்டும் என்பது எங்கள் குறிக்கோள் அல்ல, மக்கள் விழிப்புணர்வுதான் குறிக்கோள்.

   அதை மையமாக வைத்து இங்கு எழுதப்படும் கட்டுரைகளை விரும்பி இணைத்துக்கொண்ட இணையங்கள் தான் அவை, தவிரவும் நீங்கள் கேட்ட அதே ஈழத்தமிழர்களின் இணையங்கள் இங்கு ஒருவேளை நீங்களே கூறும் புலியெதிர்ப்பினால் அவற்றை பிரசுரிக்க மறுக்கிறார்கள், மக்கள் நலனைப் பேசக்கூட மறுக்கிறார்கள்,அதற்கான முயற்சியையும் மேற்கொண்டு பார்த்து எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

   அவ்வளவு ஏன் சில புதிய அரசியல் சிந்தனைகள் பற்றிப் பேசும் சில இணையங்கள் கூட தமது இயக்கத்தின் கொள்கைகளுக்குட்பட்டால் தான் யாராக இருந்தாலும் எம் கருத்துக்களை வெளியிடலாம் என்று கருதுகின்றன, அந்த இயக்கத்தை நம்பி சத்தியப்பிரமாணம் செய்தால் நாளை நாங்கள் குப்பைகளைக் கொட்டினாலும் போடத் தயாராக இருக்கிறார்கள்.

   எனவே அவர்கள் எந்த வகையினர் என்று அலசும் ஆவலோ அல்லது அவர்கள் பற்றிய ஆதங்கமோ இங்கு தேவையில்லாத ஒன்றாகிவிடுகிறது.

   இங்கே புலி எதிர்ப்பு இணைந்திருப்பதால் தான் எமது கட்டுரைகள் குறிப்பிட்ட இணையத்தளங்களிலே இணைக்கப்படுகின்றனவா என்பது பொறுமையாக இருந்து அவதானிக்கப்பட வேண்டிய ஒன்று.

   இப்போதைய அளவில் மக்கள் நலனைப்பற்றிப் பேசும் போது அதுவும் சிறைப்பட்டுக்கிடக்கும் அப்பாவிகளைப் பற்றிப் பேசும் போது புலியை நோக்கிக் கேள்விகள் எழுகிறது, அதை கட்டுரைகள் தாங்கி வருகிறது, இந்த ஒரு காரணத்திற்காகத்தான் இந்த இணையங்கள் எம்மை ஆதரிக்கும் என்ற முடிவுக்கு வரும் நாள் வந்தால்,உங்கள் கருத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்.

   மற்றும் படி சாயம் என்பதே வேண்டாம் என்று தான் மக்களை சுயமாக சிந்திக்க வலியுறுத்துகிறோம்.

   இங்கே இதுவரை எழுப்பப்பட்ட கேள்விகள் அத்தனையும் சிந்திக்க மறுக்கும் மக்களை நோக்கியவை, அந்த மக்களை சிந்திக்க விடாமல் தடுக்கும் காரணிகள் பற்றியவை, இதை எழுதுவதனால் ஏற்படுத்தப்படும் வகைப்படுத்தலும் எதிர்பார்த்ததுதான்.

   அதற்குப் பெயர் தான் புலியெதிர்ப்பு என்று கருதினால் “ஆம்” புலி இல்லாத ஒரு சமூகத்திற்கான விடிவைப் பற்றித்தான் நாம் பேசுகிறோம்.

   எனினும்,இப்படியான பாகுபாடுகள்,சமூகப் பிளவுகள் அகன்று மக்கள் நலன் தொடர்பில் புதினம்,தமிழ்நெட் அவ்வளவு ஏன் உங்கள் சொந்த வலைப்பதிவு உட்பட அனைத்து தமிழ் இணையங்களும் நாட்டம் கொள்ள வேண்டும் என்பது தான் எமது அவா.

   அது புலியை ஆதரிப்பதனால் மட்டுமே சாத்தியப்படும் என்று ஒரு சாரார் கருதுவதும், புலியை எதிர்ப்பதனால் மட்டுமே சாத்தியப்படும் என்று மறு சாரார் கருதுவதும் அவரவர் சொந்த விருப்பு வெறுப்பு.

   இந்த அரசியலுக்குள் இருந்து வேறுபட்டு “அறிவுடன் மோதிக்கொள்ள” கருத்துக்களை முன்வைக்க இப்போதுதானே ஆரம்பித்திருக்கிறோம்,எனவே பொறுமையுடன் இணைந்திருங்கள்.

   வெளிப்படையான உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

    
 3. பாரதி.சு

  மே13, 2009 at 9:45 பிப

  நண்பரே!!..
  பதிலுக்கும், தெளிவுபடுத்தியதற்கும் நன்றி.

  //…இந்த ஒரு காரணத்துக்காகத்தான் இந்த இணையங்கள் எம்மை ஆதரிக்கும் என்ற முடிவுக்கு வரும் நாள் வந்தால்…//

  ஏன் அவர்களை இலகுவாகவே இனம் காணலாம். நான் கீழே குறிப்பிடும் பக்கமும் உங்கள் அறிவை மோத வைத்தீர்களானால்……
  —–>>>>>
  “கிழக்கின் விடியல்” அந்த மக்களுக்கு கொடுக்கும் “இன்பத்தினை” (தொடரும் சிறுவர் கடத்தல் மற்றும் கொலைகள்)வசதியாக வன்னி அவலத்தின் மூலம் மறைக்கின்ற ஜனநாயக நீரோட்டத்தில் நீந்துபவர்கள் பற்றியும், அப்புறம் வடக்கு தந்த வசந்தத்தையும் உங்கள் பார்வையில் எழுதுங்கள்….
  எல்லாத்திசையிலும் மோதினால் மட்டுமே அறிவு….ஒரு பக்கம் மட்டுமே திரும்பத்திரும்ப முட்டுவது அறிவின்மை.
  உங்களிட்டமும் மாற்றங்களை எதிர்பார்த்திருக்கும்
  எத்திசையிலும் முரண்பட்ட கருத்துகள் கண்டால் அறிவுடன் மோதி தெளிவோம்.

  உங்களிடமும் மாற்றங்களை எதிர்பார்த்திருக்கும் மனிதன்.

  நன்றி

   
  • arivudan

   மே13, 2009 at 10:32 பிப

   நல்லது நண்பரே,தொடர்ந்து இணைந்திருங்கள்,காலம் அனைத்தையும் தெளிவு படுத்தும்.

    
 4. rajani

  மே14, 2009 at 2:23 பிப

  நண்பர் பாரதி.சு
  அவர்களுக்கு!
  நாங்கள் பலதரப்பட்ட இணையதளங்களை நாளும் பார்துக்கொண்டிருக்கறோம். நீங்கள் குறிப்பிட்ட புலியெதிர்ப்பு, புலியாதரவு என்கின்ற உங்களின் சிலவிமர்சன கருத்துக்களுடன் நம்முடைய கருத்துக்களையும் சற்றே முன்வைக்கலாம் என நினைக்கிறோம். தேனீ, அதிரடி, இலக்கியா, மற்றும் புதினம், தமிழ் நெற்,ஈழநாதம் போன்ற இனையதளங்களையும் நாம் நாளாந்தம் பார்கின்றேம்.

  நீங்கள் குறிப்பிட்டது போல் தேனீ,அதிரடி,இலக்கியா போன்ற இனணயதளங்களை ஒரு மாதிரியான கூட்டத்தினர்தான் பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள்! அது என்ன ஒரு மாதிரியான கூட்டத்தினர் என்பதை நீங்கள் குறிப்பிட்டு சொல்லாவிட்டாலும் கூட நாங்கள் அவர்கள் யார் என்பதை புரிந்துகொள்ளலாம். அதாவது உங்கள் கருத்தின்படி, அவர்கள் அராசாங்கத்துக்கு சார்பானவர்கள், தமிழின எதிர்பாளர்கள் என்றுசொல்ல வந்துள்ளீர்கள. இதில் நாம் அறிந்தவரை நீங்கள் குறிப்பிடுகின்ற புலியெதிர்ப்பு இணையதளங்களை பர்க்கின்றவர்கள் கூடுதலான பேர்கள் உங்களை போன்ற புலியாதரவாளர்கள்தான் என்பதை நான் அறிந்து வைத்திருக்கிறேன். அதனால் நீங்களும் ஒருவகையில் அந்த மாதிரியான கூட்டத்தினரில் ஒருவராக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

  புலிகளை ஆதரிப்பது அல்லது புலிகளை எதிர்ப்பது ஏன் என்பதில் சரியான புரிந்துகொள்தல் இன்னும் உங்கள் புலன்களுக்கு எட்டவில்லைபோல் தெரிகிறது?? புரியவில்லை என்பதுதான் நமது கருத்தாகும்.

  புலிகளை யாரும் எதிர்கவில்லை மாறாக புலிகளின் வன்முறை, பயங்கரவாதம், அடக்கு முறை, கொலை போன்றவற்றைதான் எதிர்கிறார்களே ஒழிய புலிகளை அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
  தவிர, புலிகளை ஏன் அனைத்து உலகநாடுகளுமே எதிர்கிறார்கள் என்பதைகூட புலியாதரவாளர்கள் இன்னும் புரிந்துகொள்ளக்கூடிய அறிவற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

  புலியாதரவாளர்களை பொறுத்தவரை அவர்களுக்கு சுய அறிவே கிடையாதவர்கள் என்பதே நமது கருத்தாகும். ஊ+ம் புலிகள் யாருடன் சேருகிறார்களோ அல்லது யாரை ஆதரிக்கிறார்களே புலியாதரவாளர்களும் அவ்வழியே செல்வார்கள். புலிகள் ஐயலலிதாவை எதிர்த்தால் அவர்களும் எதிர்பார்கள் புலிகள் ஐயலலிதாவை ஆதரித்தால் புலியாதரவாளர்களும் ஆதரிப்பார்கள்.
  இன்னும் சொல்லப்போனால் இன்று இந்திய ஆமிக்காரர்களை புலிகள் எதிர்க்கிறார்கள் நாளை இந்திய ஆமிக்காரர்கள் தமிழீழம் அமைத்து தருகிறோம் என்று வந்தால் அவர்களை புலியாதரவாளர்கள் ஆதரிப்பார்கள் அல்லது அது புலிகளின் நிலைப்பாட்டில் உள்ளது. ஆகவே புலியாதரவாளர்களை பொறுத்தவரை பகுத்தறிவுக்கும் அவர்களுக்கும் எந்தவித நம்பந்தமும் இல்லை.
  எல்லா இணையதளங்களிலும் புலி எதிர்ப்பு கட்டுரைகள் வரத்தான் செய்கின்றன இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்ட தேனி, அதிரடி, இலக்கியா போன்ற இணையதளங்கள் அறிவென்றொன்று இணையதளத்தில் வந்த கட்டுரைகளை மட்டுமே தேர்வு செய்து பிரசுரித்திருக்கிறார்கள் என்கினற போது அந்த கட்டுரையில் நிறைய உண்மைதன்மைகள் காணப்படுவதுபோல்தான் நான் அந்த கட்டுரைகளை வாசித்தவரை தெரியவருகிறது. நல்லவைகளைதான் யாரும்விரும்புவார்கள் என்பதே உண்மையாகும்.
  நன்றி. றயனி
  சுவிஸ்.

   
 5. பாரதி.சு

  மே14, 2009 at 6:55 பிப

  வணக்கம் றயனி,
  கருத்துக்கு நன்றி. எனது பார்வையினை முழுவதுமாக நீங்கள் உள்வாக்கவில்லை என்றே நம்புகிறேன். i know it is very tough to understand me from my one comment. it’s ok.
  முதலில் நீங்கள் எனக்கு புலியாதரவு முத்திரை குத்துவதை தவிருங்கள். விடுதலைப்புலிகள் பற்றிப் பார்க்கையில் எனது விமர்சனம் எப்போதும் புலித் தலைமையை நோக்கி மட்டும் உண்டு.

  பரவாயில்லையே “ஒருமாதிரி கூட்டம்”என நான் குறிப்பிட்டதை சரியாகவே உள்வாங்கியுள்ளீர்கள். அது தாங்க அரசாங்கத்துக்கு சார்பானவங்க என்று நீங்களே அழகாக சொல்லியுள்ளீர்கள்.
  ஆனால் இந்த இணையங்களை நான் வெறுக்க காரணம் எப்போதுமே புலிகளினை நோக்கி வீசும் சாட்டையை மறந்தும் வேறெங்கும் திருப்புவதில்லை. அப்ப என்ன அர்த்தம்??

  புலியாதரவு கூட்டமோ அல்லது எந்த தமிழ் வர்க்க கூட்டங்களோ..தங்கள் வர்க்க அரசியலை முன்னெடுக்கட்டும் சிங்கள பேரினவாத அரசுடன் இணைந்து கொள்ளாது அவர்களை எதிர்த்தபடி.
  இணைந்து சோரம் போறவர்கள் புறம்தள்ளப்பட வேண்டியவர்கள்.

  if i dun’t like this article you wont see my comment here.
  i am agree some of them with this author. when THENEE re publish this article i FELT a good thing IN BAD PLACE.

  plz read rest of my comment….you may understood why i am hating those webpages. i am not supporting puthinam or pathivu.
  but i respect TAMILNET bcos they already labeld themself that they are “official” TIGER website. FROM there only i can get their NEWS.

  நன்றி.

   
 6. பாரதி.சு

  மே14, 2009 at 7:01 பிப

  வணக்கம் றயனி,
  இதைக் குறிப்பிட மறந்துவிட்டேன்…
  இந்த கட்டுரைக்கு “தொலைந்து போன மனிதம் ”
  எனது பின்னூட்டத்தினை வாசித்தால் எனது பார்வை உங்களுக்கு புரிய வாய்ப்புள்ளது.

  நன்றி.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: