RSS

இந்தப் புலி புல்லும் திண்ணும்

08 மே

கடந்தகாலங்களை மக்கள் மறந்து விட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கும் புலி விசுவாசிகள் அதை மறக்காமலும் சிலர் இருப்பார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்.

புலி தாங்க முனைந்த போராட்டத்தை இன்றளவும் 95 விழுக்காடு இலங்கைத் தமிழர்கள் ஆதரிக்கவே செய்கிறார்கள், ஆனால் புலி எனும் இந்த பாசிச அமைப்பைத்தான் வெறுக்கிறார்கள்.

ரணில் – பிரபா சமாதான காலத்தின் பின்னர் விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச மேடையில் இலங்கை அரசாங்கத்திற்கு இணையாக தமக்கும் ஒரு அந்தஸ்து கிடைத்துவிட்டது எனும் மமதையில் தத்தளித்த காலம்.

புலியும், புலியின் நெருங்கிய அடிவருடிகளும் தவிர வேறு யார் தமிழ் தேசியம் பற்றிக் கதைத்தாலும், வேறு எவர்தான் தம் தேசப்பற்றை வெளியே கூறினாலும், அவர்கள் புலி சார்பு இணையங்களில் எள்ளி நகையாடப்பட்டார்கள்.

துருவித்துருவி அவர் மூலங்கள் ஆராயப்பட்டு கேவலப்படுத்தப்பட்டார்கள்.

புலியின் கை ஓங்கியிருந்த காலத்தில் அவமானப்பட்டு ஒதுங்குவதைத்தவிர வேறு வழியில்லாத பல பேர் மெளனத்தை தம் நிரந்தர உடமையாக்கிக்கொண்டு தொடர்ந்து மெளனமாகியே விட்டார்கள்.

ஆனால், இப்போது நிலைமை தலை கீழாக மாறிவிட்டது.

பிரபாகரன் ஈழத்தைப் பெற்றுத்தருவார் என்று கூறிக்கொண்டிருந்த வெளிநாடு வாழ் புலி ஆதரவாளர்கள் அந்த நிலையை மறந்து தன் தலைவனை எட்டி உதைத்து, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தும் பிரபலங்களிடமும் அதுவும் வேற்று நாட்டுக்காரர்களிடம் எல்லாம் கையேந்தி “ஈழம் பெற்றுத்தாருங்கள்” என்று கேட்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

புலி ஆதரவாளர்களின் நிலை இப்படியென்றால், புலியின் அதிகாரபூர்வ அறிக்கைத்தளங்களின் நிலை இதைவிட மோசமாகக் காட்சியளி்க்கும் பரிதாபத்தையும் காணலாம்.

“வென்று வா எம் மகளே” , “அன்புத் தங்கையே” , “வீர மங்கையே” என்று பொப் பாடகி M.I.A என்கிற மாயாவை இன்று தலையில் வைத்துக் கொண்டாடி இந்தப் புலி புல்லையும் திண்ணும் என்று ஒப்பித்திருக்கிறார்கள் ஈழத்தமிழரின் விடுதலைப் புலிகள்.

முன்னாள் ஈரோஸ் போராளியான அருளரின் மகள் மாதங்கி, தன் முதல் பாடலிலேயே ஈழ வேட்கையின் ஆழத்தைத் தொட்டு,சூற்சுமமாக தன் கருத்தை சொல்ல முன் வந்த போது, அந்தப் பெண் அணிந்திருந்த காறசட்டை முதல் கழற்ற ஆரம்பித்து அருளரின் அந்தக் காலங்களையெல்லாம் கிண்டிக் கிளறி “தமிழ் தேசியம் எனும் பெயரில் குறுக்குவழியில் பிரபலம் தேடுகிறார் ஒரு பெண் “, “ஈழம் காணப் புறப்படுகிறாவாம், யார் இவர்?” என்றெல்லாம் ஆய்ந்தறிந்து அழகு பார்த்தவர்கள் தான் இந்த அறிவாளிகள்.

அப்படிப்பட்டவர்கள் இன்று அந்தப் பெண்ணின் கால்களையும் தொட்டுக்கும்பிடும் தேவை வந்திருப்பது, மீண்டும் மீண்டும் இதுவரை இவர்கள் கடைப்பிடித்த மனித விரோத நிலையையே எடுத்துக்காட்டுகிறது.

புலிகளின் “ஏக” ஆங்கில இணையமாக இருந்த தமிழ்நெட் இதை முன் நின்று ஆரம்பித்து வைக்க, அப்பாவி ஆதரவாளர்கள் உணர்ச்சி ததும்பி ஆனந்தக் கண்ணீர் வழிவதாக இணையங்கள் வழியே வழிய ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படித்தான் உங்கள் சமூகத்தை நீங்களே ஒதுக்கியும், நீங்களாகவே ஒதுக்கப்பட்டும் இருக்கிறீர்கள் என்பதையும் இன்றளவில் உணர்ந்து கொண்டு மக்கள் முன் மண்டியிட நீங்கள் துணிந்தால், நீச்சல் தடாகத்தில் ஊறிக்கொண்டிருக்கும் பிரபாகரனைக் கூட மன்னித்து, உரிமைப் போராட்டத்துக்காக இன்னுயிர்களைத் தர இன்னும் ஆயிரமாயிரம் பேர் முன்வருவார்கள்.

மக்கள் சார்ந்த போராட்டம் என்று கூறி, மக்களை ஒதுக்கிய உங்கள் போராட்டம் உங்களை மண்ணைக் கவ்வ வைத்துக்கொண்டிருப்பதை சிறு சிறு கட்டங்களாக நீங்கள் உணர்ந்து கொள்ளத்தவறினாலும், இந்தப் புலிகள் புல்லையும் திண்ணுவார்கள் என்பதில் மக்கள் தெளிவடைந்து கொண்டு வருகிறார்கள்.


 

குறிச்சொற்கள்: , , , , , ,

2 responses to “இந்தப் புலி புல்லும் திண்ணும்

 1. palPalani

  மே9, 2009 at 6:40 முப

  நல்ல பதிவு என்று சொல்ல ஆசைதான், ஆனால் நீங்களும் அதே தவறைத்தானே செய்கிறீர்கள்!

   
 2. arivudan

  மே9, 2009 at 7:35 முப

  வாருங்கள் palPalani,அதே தவறை செய்வதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்,அப்படியாயின் அது உடனடியாக திருத்தப்பபட வேண்டும்.

  ஆனாலும் என்ன தவறு என்று ஏன் சுட்டிக்காட்டவில்லை? தெளிவாக சுட்டிக்காட்டுங்கள், திருத்திக்கொள்ளலாம்.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: