அறிவென்றொன்று…!?

புலிப் பூச்சாண்டி

நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும் என்றார்கள் எந்த நாளை என்று இறுதி வரை அவர்களும் சொல்லவில்லை, அதை நம்பப் பண்ணியே அப்பாவி மக்களிடம் கிட்டத்தட்ட 11000 நாட்கள் சோறும், நீரும், இரத்தமும், சதையும், கள்ளும்,புல்லும் அவர் வீட்டுக் கதவு,ஜன்னல்,கூரைகளையும் பிடுங்கித் தின்று ஏப்பம் விட்டு இப்போது நீட்டப்பட்டிருக்கும் இராணுவத் துப்பாக்கிகள் முன், மூடப்பட்டிருக்கும் வேலி முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.

மேலும் வாசிக்க »

ஜூலை3, 2009 பதிந்தவர் arivudan | உலகம், சமூகம் | , , , , | 5 மறுமொழிகள்

பிரபாகரனே அத்தனைக்கும் காரணம்!

சொல்வது நாமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ தமிழ் இணையம் ( புதினம் ).

எழுதியதும் நாமல்ல, நடேசன்,பாலசிங்கம்,தமிழ்ச் செல்வன் மற்றும் இன்ன பிற புலி முக்கியஸ்தர்களின் நெருங்கிய சகா “வழுதி”.

வழுதி இப்போது கிளப்பும் இந்தப் புழுதியை தமிழினத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் எப்போதே கிளப்பியிருந்தார்கள், என்ன செய்ய? ஏற்றுக்கொள்ளத்தான் அவர்களுக்கு மனம் இருக்கவில்லை.

இப்போது காலங் கடந்து விட்டது, இதைத் தான் கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்றும் சொல்வது.

மேலும் வாசிக்க »

ஜூன்29, 2009 பதிந்தவர் arivudan | அரசியல், உலகம், சமூகம் | , , , , , | 4 மறுமொழிகள்

வெள்ளைத் தோல், கருப்பு மனிதன்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு நிச்சயம், ஆனால் இறந்தும் மனிதர் மனங்களில் வாழ்வது அவனவன் செய்த பாக்கியம்.

இன்று உலகம் ஒரு வெள்ளைத் தோல் போர்த்தியிருந்த கருப்பு மனிதனின் மரணச் சோகத்தை தனதாக்கிக்கொண்டுள்ளது.

வெறும் பாடகன், ஒரு மேடை நாட்டியக்காரன் என்கிற நிலை தாண்டி உலகின் எந்த மூலையில் இருக்கும் சாதாரண மனிதனுக்கும் அவன் நன்கு பரிட்சயமான பெயராக இருந்த நிலையில் மரணித்துள்ளான்.

மேலும் வாசிக்க »

ஜூன்28, 2009 பதிந்தவர் arivudan | உலகம், சமூகம் | , , | இதுவரை மறுமொழிகள் இல்லை