RSS

புலியும் சிங்கமும் ஒரே கூண்டில் !

மனித நேயத்திற்கும் ஆயுதத்திற்கும் இடையிலான தூரத்தை மீண்டும் ஒரு தடவை உலக வரலாறு அலசி ஆராய்வதற்கு ஏதுவாக ஏகாதிபத்தியத்தின் கைப்பாவை ஐ.நா வாய் திறந்திருக்கிறது.

நல்லதோ கெட்டதோ, இதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். இன்று புனிதப் போர்வைகள் களையப்பட்டு புலியும் சிங்கமும் ஒரே கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பதை மனித நேய அபிமானிகள் எவ்வாறு நோக்கப்போகிறார்கள்? இனி வரும் காலத்தில் புலிப் பிரச்சாரத்திற்கும் சிங்க மழுப்பல்களுக்கும் இடையில் அப்பாவி உயிர்கள் எவ்வாறு உதை படப் போகின்றன என்கிற புதிய அத்தியாயத்தை ஐ.நா உபயத்தில் நாம் காணப்போகிறோம். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by மேல் April26, 2011 in அரசியல், தமிழகம்

 

குறிச்சொற்கள்: , , ,

விஜயகாந்த் Vs வடிவேலு

தமிழகத்தில் மீண்டும் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது, யாரோடு யார் கூட்டணி சேர்வார் எனும் கணக்கெடுப்புகளும் ஊகங்களும் “பண்ட” மாற்றங்களும் கூட வெகு விமர்சையாக நடைபெற்றுக்கொண்டிருக்க, எப்படியாவது விஜயகாந்தை ஒரு கோமாளியாக்கியே தீர வேண்டும் என்பதிலும் பிரதான கட்சிகள் முழு மூச்சுடன், திரை மறைவில் செயற்படுகின்றன.

விஜயகாந்த் அரசியல் கட்சியே ஆரம்பித்திருக்கவில்லையென்று வைத்துக்கொண்டாலும், திடீரென ஒரு தேர்தலில் அதுவும் ஈழத்தமிழர்களின் வாக்கெடுப்பில் நடந்திருந்தால் ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களும் ஏன் என்றே கேள்வி கேட்காமல் விஜயகாந்தை “விரும்பி” வெற்றி பெறச்செய்திருப்பார்கள். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by மேல் மார்ச்4, 2011 in அரசியல், சினிமா, தமிழகம்

 

சீமானின் வி.ஐ.பி ஸ்டன்ட்

உலகுக்கெல்லாம் எச்சரிக்கை, சிங்களர்களுக்கு போர் அறைகூவல் என்று ஒன்றன் பின் ஒன்றாக சாகசங்கள் நிகழ்த்தி சிறைச்சாலை வரலாறு மூலம் அரசியலில் தத்தளிக்கும் சீமானுக்கே கொலை மிரட்டலாமே? நம்பவே முடியவில்லை இருந்தாலும் நம்பிக்கொள்கிறோம். Read the rest of this entry »

 
1 Comment

Posted by மேல் மார்ச்3, 2011 in அரசியல், தமிழகம்

 

யாழ் மண்ணில் தமிழ் – முஸ்லிம் உறவு

மீளக்கட்டியெழுப்பப்படும் யாழ் மண்ணில் தமிழ் – முஸ்லிம் உறவுகள் பற்றி சூத்திரம் இணையத்தில் வெளியான நேர்காணலின் மீள் பதிவு.
Read the rest of this entry »

 
Leave a comment

Posted by மேல் மார்ச்2, 2011 in சமூகம்

 

இணையங்களும் இன முரண்பாடுகளும்

சமூக முன்னேற்றம் மற்றும் இன ஐக்கியம் பிளவு பட்டிருப்பதிலும் இணைந்திருப்பதிலும் இலாபமடைவோர், நாட்டமற்றோர் எனும் இரு வேறு பிரிவுகள் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அத்தனை பிரிவினரிடமும் இருக்கிறார்கள். இதில் யார்? எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதன் அடையாளம் அவரவர்களின் செயற்பாடுகளை அறிவதன் மூலம் அவரவர் அறிந்து கொள்ள வேண்டிய விடயம்.

சமீப கால ஒரு சில தமிழ் இணையங்களின் போக்குகள் குழுப்பிரிவினைகள், கொள்கைப்பிரிவினைகளைத் தாண்டி இன முரண்பாடுகளுக்கு வித்திட்டு வருவது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். Read the rest of this entry »

 
1 Comment

Posted by மேல் மார்ச்1, 2011 in அரசியல், உலகம், சமூகம்

 

வீழ்ச்சியில் ஓர் சூழ்ச்சி !

அதிகார வர்க்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் மிக முக்கியமான அம்சம் தாம் அழிய முன் மாற்று சக்திகளை அழிப்பது, இதில் பல படிமுறைகள் அவரவர் ஜனநாயக பூச்சின் அளவைக்கொண்டு மேற்கொள்கிறார்கள்.

இதற்கான சீரிய உதாரணங்களை அமெரிக்காயிசத்திலிருந்தும் புலிகளின் முட்டாள் ஈழமிசத்திலிருந்தும் மிக இலகுவாக பெற்றுக்கொள்ளலாம். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by மேல் பெப்ரவரி25, 2011 in அரசியல், உலகம்

 

ஒன்றுபட்ட இலங்கை சாத்தியமாகுமா?

வெள்ளையர்கள் இருக்கும் போதே விதைக்கப்பட்ட இன வேற்றுமை , சமூக ஏற்றத்தாழ்வுகளின் விதைகள் அவர்கள் வெளியேறியதன் பின்னர் அவர்களே எதிர்பார்க்காத அறுவடையைத் தந்தது இலங்கையின் கடந்த கால வரலாறு.

இந்த வரலாற்றின் ஏக போக விளைச்சலை இனப் பிரச்சினை எனும் பூதம் ஆட்கொண்டதால் எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியாமல் நாட்டை விட்டு தூர ஓடியர்வர்கள் பல லட்சக் கணக்கில் இருக்கிறார்கள்.

இப்போது இனப் பிரச்சினை எனும் பெயரால் இடம்பெற்ற போர் ஓய்ந்துவிட்டது, இனியாவது ஒன்றுபட்ட இலங்கை சாத்தியமாகுமா? Read the rest of this entry »

 
Leave a comment

Posted by மேல் நவம்பர்2, 2010 in அரசியல், சமூகம்

 

கழற்றி வீச அவை செருப்பல்லவே? வடுக்கள் !

சராசரியாக ஒவ்வொரு இலங்கையரது எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிய போர் முடிந்து விட்டது, ஆனால் அதிலிருந்து சுமக்கும் வடுக்கள் எப்போது மறக்கப்படும்? – இந்தக் கேள்வி அனைத்து சமூகத்திற்கும் பொருந்தும்.

விடுதலைப் போர் என்று ஆரம்பித்தாலும் பின்நாளில் கயவர்களின் இருப்புக்கான பலி கொடுக்கும் போராக மாறிய யுத்தத்தின் வெளி முகத்துக்கு சர்வதேச அரங்கில் புதிய முகவரி கொடுத்த வரலாற்றுப் பதிவுகளில் ஒன்றுதான் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை இரவோடு இரவாக பல வந்தமாக வெளியேற்றிய முட்டாள் புலிகளின் புத்தி சாதுர்யம்.

அது இடம்பெற்று 20 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் புலி ஆதரவாளர்களின் மன நிலையும், தமிழின ஆர்வலர்களின் மன நிலையும் எவ்வாறு இருக்கின்றது என்று தேடிப் பார்த்த போது மீண்டும் காதுகளில் ஒலித்த நியாயமான கேள்விதான் இன்றைய தலைப்பாகிறது. Read the rest of this entry »

 
3 Comments

Posted by மேல் அக்டோபர்31, 2010 in அரசியல், சமூகம்

 

அரசியல் குத்தாட்டம்

அரசியல் குத்தாட்டங்களை காலத்திற்குக் காலம் அரங்கேற்றி, யார் கெட்டாலும் தமது இருப்பைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயற்படும் ஒரு சமுதாயம் இருக்கும் வரை, அந்த சமூகத்திற்கான விடிவைப் பற்றி சிந்திக்கும் அக்கறை எந்த ஒரு அரசியல் தலைமைக்கும் இருக்கப் போவதில்லை. Read the rest of this entry »

 
2 Comments

Posted by மேல் அக்டோபர்22, 2010 in அரசியல், சமூகம்

 

மாயமான் வேட்டை !

என்று வரும் அந்நாள் என்பது தான் அடுத்த கட்ட சுவாரஸ்யம்?

விடுதலைப்போர் எனும் பேரில் வயிறு வளர்த்த காட்டேறிகளின் மூன்று தசாப்த இருப்பில் பெரும் பங்கை வகித்த கே.பி அங்கிளுக்கு அது இன்று வந்து விட்டது.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு, பூச்சுற்றி வேடிக்கை பார்க்க நினைக்கும் உருத்திரகுமாருக்கும் அவர் சகாக்களுக்கும் என்று வரும் என்பது தான் இனி வரும் வரலாற்று மாற்றம். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by மேல் ஆகஸ்ட்25, 2010 in அரசியல், உலகம், சமூகம்

 
 
Follow

Get every new post delivered to your Inbox.